விளம்பரம்

ராசி தகவல்Rasi information

ராசிSign
மேஷம் · Aries (Mesham)
அதிபதி கிரகம்Ruling planet
Mars (Chevvai)
பஞ்சபூதத் தன்மைElement
Fire
இயல்புNature
Chara (Movable)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Ashwini; Bharani; Krittika (Pada 1)
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

மேஷம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Aries (Mesham) Characteristics

துணிச்சல் மிக்கவர்கள். பிறரை அடிமையாக்கும் எண்ணம் கொண்டவர்கள். அடக்கி ஆள பிறந்தவர்கள்.

ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார்கள். மாநிறம் கொண்ட முக அமைப்பை பெற்றிருப்பார்கள்.

அறிவு மற்றும் அறிவுசார் நுட்பங்களில் ஆர்வமிக்கவராக இருப்பார்கள்.

முன்கோபிகள். கடும் கோபக்காரர்கள். சண்டை இவர்களை தேடி வர வேண்டிய தேவை இல்லை; துணிச்சலுடன் தங்களை முன் நிறுத்தி எதிரிகளை எதிர்கொள்வார்கள்.

இயற்கையிலேயே மருத்துவ குணம் படைத்தவர்கள். தங்களுக்கான மருத்துவத்தை தாங்களே முடிவு செய்வார்கள். பிறருக்கும் மருத்துவ அறிவுரை வழங்குவர்.

பயணம் செய்வதில் ஆர்வமுடையவர்கள். வேலையையும் அதன்படியே அமைத்துக் கொள்வார்கள்.

அன்பு மிக்கவர்கள். எதையும் நேரடியாக பேசி தீர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். வெளிப்படையானவர்கள். உறவுகளிடம் பகையை விரும்பமாட்டார்கள்.

பகை என்று இருந்தாலும் வலிய சென்று அமைதி ஏற்படுத்துவர்.

குறுக்கு வழிகளை தயக்கமின்றி செயல்படுத்த முயல்வர். சட்ட திட்டங்களை மீறுவது இவர்களுக்கு பிடித்தமான செயல்.

4, 5, 7, 10, 20, 22, 25, 28 ஆகிய வயதுகளில் உடல் நலன் குறித்த எச்சரிக்கை தேவை. 100 வயதை கடந்த ஆயுள் உண்டு.

வியாழனும் (குரு), ஞாயிறும் (சூரியன்) நல்லதை தரும். காரி (சனி) இவர்களுக்கு ஆகாது.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.