கடகம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Cancer (Katakam) Characteristics
புதியவற்றில் ஆர்வம் காட்டுபவர்கள். எதையாவது புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
சோதிடம், மாய மந்திரம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அறிவியலைக் கூட இத்தகைய எண்ணத்துடன் அணுகுவர்.
கற்பனை திறன் கொண்டவர்கள். தங்களைக் குறித்து அதிகம் அக்கறை உடையவர்கள். இரண்டு மனைவியர் உடையவர்களாக இருக்கும் வாய்ப்பு கூடுதல்.
அம்மாவிடம் காட்டும் அன்பை தந்தையிடம் காட்ட மாட்டார்கள். அம்மா பேச்சைக் கேட்பார்கள்.
சிறிதும் வெட்கப்பட மாட்டார்கள். துணிச்சல் உடையவர்கள். முகத்திற்கு நேரே பேசி விடுவார்கள். கொஞ்சம் முரடர்கள்.
விருந்தோம்பல் இவர்களுக்கு வராத கலை. எதையும் பக்குவமாக அணுக மாட்டார்கள்.
செல்வங்களை கொண்டிருப்பார்கள். செல்வச் செழிப்பிற்கு குறைவு இருக்காது.
3, 8, 14, 16, 20, 25, 40 ஆகிய வயதுகளில் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 90 வயதைத் தாண்டி வாழ்வார்கள்.
செவ்வாயும், வியாழனும் (குரு) இவர்களுக்கு செல்வம் கொடுப்பவர்கள்.
காரி (சனி), வெள்ளி (சுக்கிரன்), அறிவான் (புதன்) ஆகியவை நடுநிலையில் இருந்தாலும் வாய்ப்பு அமைந்தால் தீமைகளைச் செய்யும்.
செழிப்புடன் வாழப் பிறந்தவர்கள். பகட்டான வாழ்க்கையை விரும்புவார்கள். நீர்நிலைகள், இயற்கை சூழ் இடங்களை விரும்புவார்கள்.
Cancer natives show interest in new things and like trying something different.
They have strong faith in astrology, magic and mysticism, and may approach even science with a similar outlook.
They are imaginative and very concerned about themselves. The text says they may have a greater likelihood of having two wives.
They are said to show more affection to their mother than to their father and to heed their mother's words.
They are fearless and speak directly to people's faces; they may be somewhat rough in manner.
Hospitality is described as not being their strength, and they may not approach matters tactfully.
They are said to possess wealth and enjoy prosperity.
They should take care of their health at ages 3, 8, 14, 16, 20, 25 and 40. The text says they may live beyond 90.
Mars and Jupiter (Guru) are said to bring them wealth.
Saturn (Shani), Venus (Shukra) and Mercury (Budhan) are described as neutral, but capable of causing harm when circumstances permit.
They are said to be born for a prosperous life, enjoy luxury, and prefer water bodies and natural surroundings.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.