விளம்பரம்

ராசி தகவல்Rasi information

ராசிSign
தனுசு · Sagittarius (Danush)
அதிபதி கிரகம்Ruling planet
Jupiter (Guru)
பஞ்சபூதத் தன்மைElement
Fire
இயல்புNature
Dvisvabhava (Dual)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Mula; Purva Ashadha; Uttara Ashadha (Pada 1)
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

தனுசு ராசிக்காரர்களின் குணநலன்கள்Sagittarius (Danush) Characteristics

எதிலும் போராடி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள் இந்த தனுசு இராசிக்காரர்கள்.

இவர்கள் செல்வங்களின் உரிமையாளரான குரு (வியாழன்) வினுடைய இராசியில் பிறந்ததால் என்றும் செல்வத்திற்காக அலையமாட்டார்கள்.

இவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள்.

3, 4, 5, 12, 15, 18, 32, 42, 47 ஆகிய வயதுகளில் சற்று உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட ஆயுள் உடையவர்கள்.

இந்த இராசிக்காரர்களுக்கு செவ்வாயும் ஞாயிறும் (சூரியன்) தோழர்கள். சுக்கிரன் இவர்களுக்கு பகை.

ஞாயிறு இந்த இராசிக்காரர்களுக்கு நற்பேறு தரும். மேலும், அறிவன் (புதன்) உடன் ஞாயிறு கூடி வந்தால், இவர்கள் வாழ்வின் நிலை மேலும் உயரே சென்றுவிடும்.

தனுசு இராசிக்காரர்கள் செல்வத்தை இழந்தது போன்ற நிலை தோன்றினாலும், பின்பு எளிதாக அத்தகைய நிலையில் இருந்து மீண்டு வந்து விடுவார்கள்.

வாழ்நாள் முழுதும் கடவுள் நம்பிக்கை இருந்தால் இவர்கள் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொண்டு வாழ்வார்கள்.

அமைதியாகவும் பண்பாகவும் பேசி பழகக் கூடியவர்கள். நண்பர்களுக்கு நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருப்பார்கள்.

தங்களின் மதிப்பிற்கு குறைவு வருகிறது என்றால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். கோபம் கொண்டு பொங்கி எழுவார்கள்.

செல்வத்தில் பிறந்து, செல்வராய் வாழ்வார்கள்.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.