விளம்பரம்

ராசி தகவல்Rasi information

ராசிSign
விருச்சிகம் · Scorpio (Viruchikam)
அதிபதி கிரகம்Ruling planet
Mars (Chevvai)
பஞ்சபூதத் தன்மைElement
Water
இயல்புNature
Sthira (Fixed)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Vishakha (Pada 4); Anuradha; Jyeshtha
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

விருச்சிகம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Scorpio (Viruchikam) Characteristics

நம்பிக்கை, நேர்மை, பொறுப்பு, கடமை உணர்வு மிக்கவர்கள்.

அறிவாற்றல் கொண்டவர்கள். கொடையாளிகள். செல்வச் செழிப்புடன் வாழ்பவர்கள்.

தன்னம்பிக்கையாளர்கள். துணிவுடன் செயல்படுபவர்கள். சற்று முன்கோபிகள்.

குண்டான உடல் அமைப்பை பெற்றிருப்பார்கள். உயரமானவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.

வேதியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவர்.

அடி தடியில் இறங்க சிறிதும் தயங்க மாட்டார்கள். வார்த்தைகளை அளக்க அவர்களுக்கு தெரியாது. கடுஞ்சொற்களை பயன்படுத்துவர்.

கடவுள் நம்பிக்கை உடையவர்கள். வாழ்வில் சிறப்பான நிலை அடைய சிறிது நாட்கள் ஆகும். 32 வயதிற்கு மேல் வாழ்வு சிறக்கும்.

எளிதாக செல்வம் சேர்ப்பார்கள். எதிர்பாலினத்திடம் விலகி இருக்கவே விரும்புவர்.

உடன்பிறப்புகளிடம் உறவு பாராட்ட மாட்டார்கள். பகையை இவர்களே உருவாக்கி வைப்பர். தங்கள் குழந்தைகளின் மேல் அக்கறையுடன் இருப்பார்கள்.

4, 5, 10, 12, 18, 40 ஆகிய வயதில் உடல் நலத்தின் மீது கவனம் தேவை. 90 வயதை தாண்டிய ஆயுள் உண்டு.

ஞாயிறும் (சூரியன்), நிலவும் (சந்திரன்) இவர்களுக்கு நன்மை செய்பவை.

அறிவனும் (புதன்), வெள்ளியும் (சுக்கிரன்) இவர்களுக்கு பகை.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.