விளம்பரம்

ராசி தகவல்Rasi information

ராசிSign
கன்னி · Virgo (Kanni)
அதிபதி கிரகம்Ruling planet
Mercury (Budhan)
பஞ்சபூதத் தன்மைElement
Earth
இயல்புNature
Dvisvabhava (Dual)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Uttara Phalguni (Padas 2–4); Hasta; Chitra (Padas 1–2)
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள்Virgo (Kanni) Characteristics

கன்னி இராசிக்காரர்கள் மிகுந்த இரக்க குணம் உடையவர்கள். பிறருக்கு உதவுவது, கொடையாக கொடுப்பது இவர்களின் இயல்பு.

இவர்கள் கொஞ்சம் கூச்சம் மற்றும் வெட்க குணம் உடையவர்கள்.

மக்களோடு மக்களாக வாழ விரும்புபவர்கள். செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள். தொழில் அல்லது வேலையில் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களின் வயது கூடக் கூட இவர்களிடம் செல்வம் வந்து சேரும்.

3, 8, 9, 10, 18, 19 ஆகிய வயதுகளில் உடல் நலத்தை முறையாக கவனிக்க வேண்டும். நீண்ட ஆயுள் உடையவர்கள்.

வயிற்றுக் கோளாறு, தோல் நோய் போன்றவை இவர்களை எளிதில் தாக்கும்.

சிரித்த, மகிழ்வான முகத்திற்கு உரிமையாளர்கள். இவர்களை பார்த்தால் பிறருக்கும் மகிழ்ச்சி தானாக மனதில் தோன்றும்.

கொஞ்சம் சோம்பேறிகள். எதையும் நிதானமாகத்தான் செய்வார்கள். அறிவாளிகள். இவர்களிடம் ஒரு தகவலை சொன்னால் கமுக்கம் காப்பார்கள்.

இயற்கை, இசை, கூத்து போன்றவற்றில் பொழுதை செலவிடுவார்கள். பயணம் மேற்கொள்வதில் விருப்பம் உடையவர்கள்.

இவர்களுக்கு வெள்ளி (சுக்கிரன்) மற்றும் அறிவான் (புதன்) நண்பர்கள்.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.