ADVERTISEMENT

யார் இந்த மாந்தி?.

யார் இந்த மாந்தி?. யார் இந்த மாந்தி?.

சோதிடம் கணிக்க 7 கோள்களும் 2 சாயா கோள்களும் பயன்படுத்தப்பட்ட் வருகிறது.

மாந்தி என்கிற கோளை பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை.  யார் இந்த மாந்தி?.  இதற்கு என்ன திறன் உள்ளது? இந்த மாந்தியால் நம் வாழ்வில் என்ன செய்துவிட முடியும்?

மாந்தி என்கிற சனியின் துணைக்கோள், தான் நிற்கும் வீட்டையும், பார்க்கும் வீட்டையும் பாழ்படுத்தும். ஆமாம் - குளிகனின் உடன் பிறந்த உறவு தான் இந்த  மாந்தி!!!

காரி(சனி)யின் துனைவனால், காரி (சனி) செய்ய முடியாததையும் செய்து பாழ்படுத்த முடியும்.


காரி (சனி) ஆயுள் காரகன் என்றால், மாந்தி மரணத்திற்கு காரகன்.

மாந்தி இருக்கும் நிலையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் காணலாம்:

1.  எந்த இராசியின் வீட்டில் உள்ள கோளுடன் மாந்தி இணைகிறதோ, அந்த இராசியின் உறவுகளைப் பாதிப்படைய செய்யும்.

2.  மாந்தியுடன் ஞாயிறு சேர்ந்தால், அது தந்தையை கடுமையாகப் பாதிக்கிறது.

3.  நிலவுடன் சேர்ந்தால்  என்றால் பெற்றவளை பாதிக்கிறது.

4. வெள்ளியுடன் மாந்தி கூடும் போது கட்டிய மனைவிக்கு உடல் நலத்தைக் கெடுத்து, இராசிக்காரருக்கு விலைமாதுக்களுடனான உறவுகளை தந்துவிடுகிறது..

5.  இதில், மாந்தியுடன் அதன் தலைவனான காரி கூடினால்ட உயி அச்சத்தை ஏற்படுத்தும்,

6.  இராகு, கேதுவுடன் சேருந்தால் நெருப்பு மற்றும் நஞ்சு பாதிப்பை ஏற்படுத்தும்.

தானிருக்கும் இராசியை மாந்தி கெடுப்பது மட்டும் அல்லாமல், தன் முன்பின் பார்க்கும் பார்வையால், அந்தந்த இராசிகளையும், அதிலிருக்கும் கோள்களையும் கெடுக்கும்.

எதையெல்லாம் பாழாக்கும் என பார்க்கலாம்:

1.  உங்களின் இந்தப் பிறப்பைக் குறிக்கும், இலக்கினாதிபதியும், மாந்தியும் கூடி, முற்பிறப்பையும், இனி பிறக்கப் போகும் பிறப்பைக் குறிக்கும் இடங்களான ஐந்து, ஒன்பதாமிடங்களில் ஒன்றில் இருந்தால், அந்தப் பிறப்பே தீயதாகி பாழ்படும்.

2.  அப்படியானால், இந்தப் பிறப்பைக் குறிக்கும் இலக்கினத்தில் இலக்கினாதிபதியும், மாந்தியும் கூட இப்பிறப்பில் அனைத்து விதமான தடைகளையும்  சந்திக்க வேண்டிவரும்.

3.  உங்களின் சாதகத்தில் மிகப்புனிதமான ஐந்து, ஒன்பதாமிடங்களில் ஒன்றில், இலக்கினாதிபதியும், மாந்தியும் அருகருகே இருந்து, ஞ்யாயிறை பார்த்தால், முன்னோர் சாபம் என்கிற தந்தைக்கு பீடை ஏற்படும். இதில் சூரியனுக்குண்டான பக்கப்பார்வைகளும் தீமை தரும் என்றாலும், நேர் பார்வை பெரும் சாபத்தைத் தந்துவிடும்.

இதேபோல், 10ஆம் இடத்தில் நிலவு பார்க்க, பெண் தோஷமும், செவ்வாய் பார்த்தால், இரத்த உறவுள்ள உடன்பிறப்புகளின் சாபமும், அறிவன் (புதன்) பார்த்தால் மூத்த அண்ணனால், குரு நிந்தையால் சாபமும், வியாழன் என்கிற குரு பார்த்தால் குலதெய்வ தோஷமும், கோவில் சொத்தையும், ஊர் பணத்தை கொள்ளையிட்ட தோஷமும், வெள்ளி (சுக்கிரன்) பார்க்கப்பட்டால், கன்னிப் பெண்ணின் தோஷமும், காரி என்கிற சனியால் பார்க்கப்பட்டால், தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாள், அல்லது வேலையாட்களின் சாபமும் ஏற்படும்.

சிலருக்கு மட்டும் நன்மை:

ஜாதகக் கட்டத்தில் உள்ள பனிரெண்டு வீடுகளில், ஒரு சிலவீடுகளில் மட்டும் மாந்தி இருக்க நன்மையான பலன்களே ஏற்படுகிறது.

அவைகள் எதுவென்றால், மூன்று, ஆறு, பதினொன்று என்கிற மூன்று வீடுகள் மட்டுமே.

இதிலும் மூன்றில் மாந்தி இருப்பவர்களுக்கு காம இச்சையும், அதனால் போகவெறியும் கூடுதலாக இருக்கும். வேரெந்த பாதிப்பும் ஏற்படாது. சகோதரர்களிடம் சுமூக உறவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

6-ல் மாந்தியிருக்க, எதிரிகள் அழிவர். மந்திரமாய நாட்டம் உண்டாகலாம்.

பதினொன்றில் மாந்தியிருக்க, திடீர் செல்வ செழிப்பு ஏற்படும் .

உங்கள் சாதகத்தில் மாந்தி நின்ற வீட்டுக்குடையவன், இலக்கினத்திற்கு வீடு, திரிகோணங்களில் நின்றாலோ, அல்லது மாந்திக்கு வீடு, திரிகோணங்களில் நின்றாலோ செல்வ வளம் பெருகும்.

காரக உறவு கோளுடன் மாந்தி கூடி, அதே காரகப் பாவகத்தில் இருந்தால், அந்த உறவே சாதகர்க்கு இல்லாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக இலக்கினத்திற்கு ஒன்பதில் ஞ்யாயிறுடன், மாந்தி சேர்ந்தால், சாதகன் தந்தையால் கைவிடப்பட்டவனாக இருப்பான். இதேபோன்றுதான், மற்றையக் கிரகங்களுக்கும் பலன் அறியலாம்,

இலக்கினத்திற்கு இரண்டாமிடம் சொல்லிற்கான இடம். பேசுவதற்கான அதாவது, பேச்சுத்த் திறனுக்கு தலவனான குருவுடன் மாந்தி கூடி, அதே இரண்டாமிடத்தில் இருந்தால், சாதகனின் பேச்சு கேடுகெட்டும், கண்டனத்துக்குரியப் பேச்சாக இருக்கும்.

இதேபோல, பிற கோள்களுக்கும் பொருத்தி பார்க்க வேண்டும்.   


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading