ADVERTISEMENT

ஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா?

ஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா? ஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா?

ஆடி பட்டம் தேடி விதை, ஆடி 18ஆம் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி புது நிலவு என்றெல்லாம் தமிழர்களுக்கு விழா நாட்களை தரும் ஆடி திங்களில் திருமணம், புது மனை புகுதல் போன்ற எந்த சிறப்பு நிகழ்வுகளையும் தமிழர்கள் வைத்துக்கொள்வதில்லை.

இது எதனால்?  ஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா? ஆடி திங்களில் எந்த நல்ல நிகழ்வுகளும் நடத்தக் கூடாதா?

இதற்கு விடை, உண்மையில், ஆடி திங்கள் சிறப்பான திங்கள்.  எல்லாவற்றையும் சிறப்பாக துவங்குவதற்கு ஏற்ற திங்கள்.

இருப்பினும், அந்த திங்களில் வீட்டு வேலைகள் தொடர்பான செயல்கள் எதுவும் செய்வதில்லை. எதனால் என்றால், ஆடி என்றாலே உழவிற்கான திங்களாக மட்டுமே தமிழர்கள் துவக்க நாட்கள் முதல் கணக்கிட்டு வைத்து விட்டனர்.

உழவுக்கு இடையூறு அல்லது கவன சிதறல் ஏற்படுத்தும் எந்த செயலையும் இந்த ஆடி திங்களில் செய்வதில்லை.

அதே போல, மார்கழியிலும் செய்வதில்லை.  ஏன் என்றால், அறுவடை துவங்கும் நேரம் அது. 

தமிழர்களின் அடிப்படை உணவு நெல். நெல் மணிகளில் பால் கட்டும் நேரம் அது.  அதனால் தான் மார்கழியிலும் உழவு திவிர்த்த பிற செயல்களை செய்வதில்லை.

சித்திரை மற்றும் வைக்காசியில் தமிழர்கள் மாரி அம்மனுக்கு விழா எடுப்பதும் அதுபோன்ற உள் பொருள் பொதிவினால் தான்.

மாரி என்றால் மழை.  மாரி அம்மன் என்றால், மழையை தமிழருக்கு தருவித்து தரும் அம்மா.

மழை தரும் அம்மாவிற்கு மழை வேண்டி கோடை நாட்களில் வேண்டுதல் செய்வது தமிழரின் பண்பாடு.  அதனால் தான் சித்திரை மற்றும் வைக்காசியில் மாரி அம்மனுக்கு தமிழர்கள் விழா எடுக்கின்றனர்.

தமிழகத்தில் தற்பொழுது மழை குறைவாக இருப்பது எதனால் என்றால், நமது மழை கடவுளான  மாரி அம்மனிடம் மழையை வேண்டாமல், வட நாட்டினரின் கடவுளர்களிடம் தமிழர்கள் சென்று மழை வேண்டுவதால் தான்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading