ADVERTISEMENT

பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்

பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம் பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்

பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்

ஒருவரின் பிறந்த சாதகத்தை வைத்தே ஆருடம் கூற இயலும் என்றாலும், ஒருவரின் பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவை அறிந்தால் அவரின் பொது குண நலங்களை கணிக்கலாம்!!!

இவற்றை பொதுவான பலனாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  தனி ஒருவருக்கு இது முழுமையாக பொருந்தாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எந்த கிழமையில் பிறந்தால் என்ன பொது பலன் என்று முதலில் பார்க்கலாம்:

1) ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர் செல்வம் உடையவராய் இருப்பார்
2) திங்கள் கிழமையில் பிறந்தவர், புகழ் உடையவராய் இருப்பார்
3) செவ்வாய் கிழமையில் பிறந்தவர். தந்திரக்காரராய் இருப்பார்
4) அறிவன் கிழமையில் பிறந்தவர், கல்வி உடையவராய் இருப்பார்.
5) வியாழக் கிழமையில் பிறந்தவர், அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்
6) வெள்ளிக் கிழமையில் பிறந்தவர், உயர்ந்த செயல்களை செய்பவராய் இருப்பார்
7) காரி கிழமையில் பிறந்தவர், பிறரை ஏமாற்றுவதில் திறமை சாலியாக இருப்பார்

 பிறந்த யோகங்களை வைத்து பொதுவான பலன்:

1. விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவர், உறவினர்களிடம் அன்பு உள்ளவராய் இருப்பர்.
2. பிரீதி யோகத்தில் பிறந்தவர், துணிவு உடையவராய் இருப்பர்,
3. ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவர், ஓழுக்கம் உடையவராய் இருப்பர்
4. சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவர், கடவுள் நம்பிக்கை உடையவராய் இருப்பர்.
5. சோபன யோகத்தில் பிறந்தவர், தன் மானம் உடையவராய் இருப்பர்.
6. அதிகண்ட யோகத்தில் பிறந்தவர், புகழ் உடையவராய் இருப்பர்.
7. சுகர்ம யோகத்தில் பிறந்தவர், நல்லவற்றை மட்டுமே செய்வதில் விருப்பம் உடையவராய் இருப்பர்
8. திருதி யோகத்தில் பிறந்தவர், இனிய சொற்களைப் பேசுபவராய் இருப்பர்.
9. சூல யோகத்தில் பிறந்தவர், அன்பு பாசம் உடையவராய் இருப்பர்.
10. கண்ட யோகத்தில் பிறந்தவர், தன் பெருமை மெச்சுபவராக இருப்பர்.
11. விருத்தி யோகத்தில் பிறந்தவர், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவராய் இருப்பர்.
12. துருவ யோகத்தில் பிறந்தவர், பெரியோரிடம் மரியாதை உடையவராய் இருப்பர்
13. வியாகாத யோகத்தில் பிறந்தவர், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவராய் இருப்பர்.
14. அர்ஷண யோகத்தில் பிறந்தவர், அறிவாளியாக இருப்பர்.
15. வஜ்ர யோகத்தில் பிறந்தவர் வேளாண்மையில் விருப்பம் உடையவராய் இருப்பர்
16. சித்தி யோகத்தில் பிறந்தவர், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
17. வரீயான் யோகத்தில் பிறந்தவர், பகைவரை ஒடுக்கி ஆள்வதில் வல்லவராய் இருப்பர்.
18. வாரீயன் யோகத்தில் பிறந்தவர், உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவராய் இருப்பர்.
19. பரிக யோகத்தில் பிறந்தவர், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரராய் இருப்பர்
20. சிவ யோகத்தில் பிறந்தவர், பெற்றோர்களைப் பேணுவதில் கவனமுடன் இருப்பர்.
21. சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்கள்.
22. சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லவராய் இருப்பர்.
23. சுப யோகத்தில் பிறந்தவர், பெண்களிடம் பற்று உள்ளவராய் இருப்பர்.
24. சுப்ர யோகத்தில் பிறந்தவர், முன்கோபக்காரராய் இருப்பர்.
25. பிராம்ய யோகத்தில் பிறந்தவர், பிறருக்கு தொண்டு செய்வதை தம் பிறப்பின் கடமையாக நினைத்து வாழ்வர்.

பிறந்த நிலவின் நாள் (திதி)களை வைத்து பொது பலன்


1. பிரதமையில் பிறந்தவர், எதையும்ஆழமாகச் சிந்தித்துப்பார்ப்பார்.
2. துவி தியையில் பிறந்தவர், பொய் பேச வெட்கப்படுவார்.
3. திரு தியையில் பிறந்தவர், நினைத்த செயல்களை செய்து முடிப்பார்.
4. சதுர் திதியில் பிறந்தவர், தந்திரம் மந்திரம் போன்றவற்றில் விருப்பம் உடையவராய் இருப்பார்.
5. பஞ்சமியில் பிறந்தவர், பெண்களிடத்தில் ஆசை உடையவராய் இருப்பார்.
6. சஷ்டியில் பிறந்தவர், செல்வர்களால் விரும்பப்படுவார்.
7. சப்தமியில் பிறந்தவர், இரக்கம் உடையவராய் இருப்பார்.
8. அஷ்டமியில் பிறந்தவர், குழந்தைகளிடத்தில் அன்பு உள்ளவராய் இருப்பார்.
9. நவமியில் பிறந்தவர், தன் பெருமை மற்றும் புகழில் நாட்டம் உடையவராய் இருப்பார்.
10. தசமியில் பிறந்தவர், ஒழுக்கம் மிக்கவராய் இருப்பார்.
11. ஏகாதசியில் பிறந்தவர், பொருள் ஈட்டுவதில் செல்வம் சேர்ப்பதில் நாட்டம்
உள்ளவராய் இருப்பார்.
12. துவாதசியில் பிறந்தவர், புதுமையான தொழில்களில் ஈடுபடுவார்.
13 திரயோதசியில் பிறந்தவர், உறவினர்களோடு சேர்ந்து வாழமாட்டார்.
14. சதுர்த்தசியில் றந்தவர், பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்க மாட்டார்
15. முழு நிலவு நாளில் பிறந்தவர், முழு தெளிவான சிந்திக்கும் திறன் உடையவராய் இருப்பார்.
16. புது நிலவு நாளில் பிறந்தவர், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக் கொள்வதிலேயே ஆர்வம் உடையவராய் இருப்பார். பொய் பேச கடுகளவும் தயங்க மாட்டார்.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading