ADVERTISEMENT

நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!!

நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!! நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!!

தமிழ் ஆருடத்தின் படி, முனிவர்கள் கணித்துள்ளார்கள், சில நாட்களுக்கு, கால் இல்லை, சில குறிப்பிட்ட நாட்களுக்கு தலை இல்லை, மேலும் சில நாட்களுக்கு உடலே இல்லையாம்!!!

இதை கேட்டாலே அச்சுறுத்தலாக மனதில் தோன்றுகிறது அல்லவா!

இத்தகைய நாட்களில் மேற்கொள்ளக்கூடாத செயல்கள் என்ன வென்று பார்க்கலாம்.

முதலில், இதற்கான செய்யுள்:

"காலற்ற வுடலற்றன தலையற்ற நாளிற்
கோலக்குய மடைவார், தமை கூடின் மலடாவர்
மாலுக்கொரு மணை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழி போகினு நலமெய்திடார்"

செய்யுளுக்கு பெரிதாக விளக்கம் தேவை இல்லை.  ஏனெனில், இன்றைய நாளில் பயன்படும், பொருள் படௌம் தமிழ் சொற்களே இந்த செய்யுளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செய்யுள் சொல்வது என்னவென்றால், குறிப்பிட்ட நாட்களில், ஆணும் பெண்ணும் முதல் முறை கூடுதல் கூடாது.  மீறினால் அவர்கள் மலடாகிப்போவார்கள்.  பிள்ளை பேறு இருக்காது.

இந்த நாட்களில் உது மனை புகுதல் ஏற்புடையது அல்ல.  அப்படி செய்தால், அது மாளிகையே ஆனாலும் கேடாய் பாழாகும்.

நெடுந்தொலைவு பயணத்தையும் இந்த நாட்களில் துவங்குதல் கூடாது.  அறிவானவர் துணை கொண்டு துவங்கினாலும் உடல் நலம் கெட்டு, பயணத்தின் குறிக்கோள் கெட்டு திரும்புவர்.

அத்தகைய தலை, உடல், காலற்ற நாட்கள் எவை என்பதை பார்க்கலாம்.

1.  தலையற்ற நாட்கள்:  புனர்Pஉசனம், விசாகம், பூரட்டாதி
2.  உடலற்ற நாட்கள்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
3. காலற்ற நாட்கள்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading