ADVERTISEMENT

இராகு தசை - தசா புக்தி பலன்கள்

இராகு தசை - தசா புக்தி பலன்கள் இராகு தசை - தசா புக்தி பலன்கள்

இராகு தசையில், முதலில் துவங்குவது இராகு புக்தி.  அதை தொடர்ந்து வியாழன், காரி என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.

இராகு தசையில் புக்திகளில் நேர அளவு:

இராகு 2 ஆண்டு 8 திங்கள் 12 நாள்
வியாழன் 2 ஆண்டு 4 திங்கள் 24 நாள்
காரி 2 ஆண்டு 10 திங்கள் 6 நாள்
அறிவன் 2 ஆண்டு 6 திங்கள் 18 நாள்
கேது 1 ஆண்டு 18 நாள்
வெள்ளி 3 ஆண்டு
ஞாயிறு 10 திங்கள் 24 நாள்
நிலவு 1 ஆண்டு 6 திங்கள்
செவ்வாய் 1 ஆண்டு 18 திங்கள்

ஆக மொத்தம் 18 ஆண்டுகள்

1.  இராகு புக்தி:  அரசால் பக வரும்.  மனம் கலக்கமடைந்து இருக்கும்.  வாழ்கை துணையால் பாதிப்பு வரும்.  கருமை நிறம் தவிர்த்தல் நலம்.

2.  வியாழன் புக்தி:  இன்பம் வந்து சேரும்.  செல்வம், அரசால் நன்மை, மகிழ்ச்சி, நினைப்பதெல்லாம் கை கூடல் என வாழ்வு சிறக்கும்.

3.  காரி புக்தி: காரி என்றாலே துக்கம் தான்.  காரி புக்தியில் இன்பமா கிடைக்கும்?  துன்பம் வரும்.  ஆனால் வந்த உடன் விலகிவிடும்.  நோய் நோக்காடுகள் வரும்.

4.  அறிவன் புக்தி: எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவு பலன் கிட்டும்.  வாழ்வு மேன்மை அடையும். கடவுள் நம்பிக்கை உண்டாகும்.  எதிர்பாரா நன்மைகள் தாமாக வந்து சேரும்.  மேலான நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

5.  கேது புக்தி: குழந்தைகளால் துன்பம் வரும்.  நோய் வரும். பெண்களால் பாதிப்பு வரும். அரசிடம் பகை உண்டாகும்.

6.  வெள்ளி புக்தி:  பொன்னும் பொருளும், நிலமும், செல்வமும், மகிழ்வும், அரசிடம் நன்மையும் என நல்ல நேரம் பிறக்கும். பல பெண்கள் சேர்க்கைக்கு வாய்ப்பு வந்தாலும் ஒழுக்கம் தவறாமை நன்மை தரும்.

7.  ஞாயிறு புக்தி:  அரசால் நன்மை கிடைக்கும்.  எலி போன்றவற்றை உண்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.  வேரு ஊருக்கு அல்லது வீடு மாறுதல் நடை பெறும்.

8.  நிலவு புக்தி:  வாழ்க்கை துணையால் பொருள் சேதம் உண்டாகும்.  வாழ்க்கை வாழ்வதற்கே ஆனால் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவம் புரியும்.

9.  செவ்வாய் புக்தி:  நெருப்பிடம் தள்ளி இருங்கள்.  பகை உண்டாகாமல் பிறரிடம் பழகுங்கள்.  வீட்டில் சண்டை என்பது மன அழுத்தம் தரும்.  ஆகவே துணையுடன் அமைதியாக செல்லுங்கள்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading