ADVERTISEMENT

வியாழன் தசை - தசா புக்தி பலன்கள்

வியாழன் தசை - தசா புக்தி பலன்கள் வியாழன் தசை - தசா புக்தி பலன்கள்

வியாழன் தசையில், முதலில் துவங்குவது வியாழன் புக்தி.  அதை தொடர்ந்து காரி, அறிவன் என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.

வியாழன் தசையில் புக்திகளில் நேர அளவு:

வியாழன் 2 ஆண்டு 1 திங்கள் 18 நாள்
காரி 2 ஆண்டு 6 திங்கள் 12 நாள்
அறிவன் 2 ஆண்டு 3 திங்கள் 6 நாள்
கேது 11 திங்கள் 6 நாள்
வெள்ளி 2 ஆண்டு 8 திங்கள்
ஞாயிறு 9 திங்கள் 18 நாள்
நிலவு 1 ஆண்டு 4 திங்கள்
செவ்வாய் 11 திங்கள் 6 நாள்
இராகு 2 ஆண்டு 4 திஙள் 24 நாள்

1.  வியாழன் புக்தி:  பொருள் சேர்க்கை, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், அரசால் வருவாய், செல்வம் என மகிழ்வான நேரமிது

2.  காரி புக்தி:  வண்டி வாங்குவீர்கள்.  வீட்டிற்கான பொருட்களை வாங்குவீர்கள்.  துன்பம் வந்தாலும் தாமாக ஓடி விடும்.

3.  அறிவன் புக்தி:  வருவாய் பெருகும். ஆடல் பாடல் என மகிழ்ச்சி கிட்டும்.  அறிவு திறன் பெருகும்.  செல்வம் சேரும்.  பெருமையும், புகழும் கிட்டும்.

4.  கேது புக்தி:  உலகம் சுற்றம் நேரமிது.  அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும்.  இடம் பெயறுதல் என்பது தவிர்க்க இயலாதது.

5.  வெள்ளி புக்தி:  வீட்டில் ஆடு, கோழி, மாடு என எண்ணிக்கை பெருகும்.  உடைகள், நகைகள், வீட்டிற்கான பொருட்கள் என சேர்ப்பீர்கள்.  நிலம் வாங்குவீர்கள்.  மகிழ்விற்கான நேரமிது.

6.  ஞாயிறு புக்தி:  நன்மைகள் மட்டும் கிடைக்கும்.  நினைபெதெல்லாம் நடந்தேறும்.  நோய் நீங்கும். பகை வரும், ஆனால் அது நன்மையே.

7.  நிலவு புக்தி:  முத்து, பவளம், வெள்ளி, தங்கம், திருமணம், பொருள் சேர்க்கை, அறிவு, பிள்ளை பேறு, என எல்லா நல்ல செயல்களும் நடக்கும்.  கடவுள் நம்பிக்கை நலம் தரும்.

8.  செவ்வாய் புக்தி:  நினைப்பதெல்லாம் முடித்துவிடலாம்.  நெருப்பால் தீங்கு வரும்.  நோய் நொடிகள் வந்து விலகும்.  புற்றார் பகை நன்மையில் முடியும்.

9.  இராகு புக்தி:   நீதிமன்றம் நாடிச்செல்லும் நிலை வரும்.  பகை உண்டாகும்.  வாழ்க்கை துணையுடன் அமைதியாக வாழ பழகுங்கள்.  பொருள் சேதம் உண்டாகலாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading