ADVERTISEMENT

காரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்

காரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள் காரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்

காரி தசையில், முதலில் துவங்குவது காரி புக்தி.  அதை தொடர்ந்து அறிவன் (புதன்), கேது என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.

பூசம், அனுசம் மற்றும் உத்திரட்டாதி விண்மீன்கள் காரி தசையை முதலாவதாக கொண்டிருக்கும்.

காரி தசையில் புக்திகளில் நேர அளவு:

காரி புக்தி 3 ஆண்டு 3 நாள்
அறிவன் 2 ஆண்டு 8 திங்கள் 9 நாள்
கேது 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்
வெள்ளி 3 ஆண்டு 2 திங்கள்
ஞாயிறு 11 திங்கள் 12 நாள்
நிலவு 1 ஆண்டு 7 திங்கள்
செவ்வாய் 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்
இராகு 2 ஆண்டு 10 திங்கள் 6 நாள்
வியாழன் 2 ஆண்டு 6 திங்கள் 12 நாள்

1. காரி புக்தி: நோய் உண்டாகும்.  செல்வம் இழக்க நேரிடும்.  உற்றார் உறவினருடன் அனுசரித்து செல்லுதல் நலம்.  வேலையாட்கள் பணி விலகுவர்
.
2.  அறிவன் புக்தி:  ஞானம், அறிவு, ஆற்றல், கல்வி நிலை உயரும்.  பொருளும் செல்வமும் வந்து சேரும்.  பிள்ளைகள், உற்றார், உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

3.  கேது புக்தி:  வலது பகுதி உடலில் நோய் நோக்காடுகள் வந்து விலகும்.  பிள்ளைகளுக்காக செல்வத்தை அழிக்க நேரிடும்.  பெண்களால் பகை உண்டாகும்.  நச்சுப் பொருட்களால் கேடு உண்டாகும்.

4.  வெள்ளி புக்தி:  நல்லவர்கள், வல்லவர்கள், செல்வந்தர்கள், அறிவாளிகள் ஆகியோருடன் நட்பு கிடைக்கும்.  பிற பாலினத்தவர் மீது ஈர்ப்பு உண்டாகும்.  பகை வந்தாலும் அவை நன்மைக்கே.

5.  ஞாயிறு புக்தி:  உணவில் எச்சரிக்கையுடன் இருங்கள்.  மாசு, தூசு இவற்றில் இருந்து விலகி இருங்கள்.  வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.  எடை கூடிய பொருட்களை கையாளாதீர்கள்.

6.  நிலவு புக்தி:  சன்டை, சச்சரவு, பகை, எதிரிகள் என வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் ஏற்படும்.  பொருள் சேதம் ஏற்பட்டாலும் அது குறித்து கவலைப்பட வேண்டாம்.  துன்பம் துயரம் என்பது வாழ்வில் என்றும் வந்து செல்வதே.

7.  செவ்வாய் புக்தி:  கொடிய பகை உண்டாகும்.  பழியும் பழிச்சொல்லும் கிடைக்கும்.  பலரது பகை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வீடு மாறுதல் ஏற்படும்.

8.  இராகு புக்தி:  பொன் பொருள் இழப்பு ஏற்படலாம்.  கவலை வேண்டாம். பகை நன்மையில் முடியும்.  முடிந்தவரை பிறரிடம் புறம் கூறாமை நல்லது.

9.  வியாழன் புக்தி:  அன்பு, பாசம், காதல், நட்பு என நன்மைகள் வரும் நேரமிது.  அரசால் நன்மை கிடைக்கும்.  எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும்.  நினைப்பதெல்லாம் கைகூடும்.  உற்றார் உறவினர் மீண்டும் நட்பு பாராட்டுவர்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading