ADVERTISEMENT

பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு என்ற வடமொழி சொல்லிற்கான பொருள் "மூதாதையர்".  தோஷம் என்றால் "பாதிப்பு".  ஆக பித்ரு தோஷம் என்கிற வடமொழி சொல்லிற்கு "மூதாதையரால் பாதிப்பு" என பொருள்படுகிறது.

நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்துபோன முன்னோர்கள் நமது மூதாதையர் ஆவர்.

நமது மூதாதையரின் ஆன்மா அமைதி அடையாததால் ஏற்படும் பாதிப்பே மூதாதையர் (பித்ரு)  பாதிப்பா(தோஷமா)கும்.

ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையைக் கவனிக்காமல் இருப்பது, உடன் பிறந்தவர்களைக் கொடுமைப்படுத்துவது, கருச்சிதைவு செய்தல் இவையெல்லாம் மூதாதையரிடம் இருந்து நமக்கு வந்து சேரும் பாதிப்புகளாகும்.

பொதுவாக நமது மூதாதையர் நமக்கு நல்லவற்றை மட்டுமே செய்வார்கள்.  ஆனால், அவர்களை அவர்களது வாழ்னாளின் போது கொடுமை செய்திருந்தாலோ அல்லது நமது பெற்றோர் அவர்களின் பெற்றோரை கொடுமை செய்திருந்தாலோ அதனால் நமக்கு அல்லது நமது தலைமுறைக்கு இந்த "மூதாதைஅயர் பாதிப்பு" ஏற்படும்.

மூதாதையரிடம் இருந்து நமக்கு வந்து சேரும் பாதிப்புகளால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

மூதாதையரின் பாதிப்பு உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. திரும்ணம் தள்ளிப்போய்கொண்டே இருக்கும்  தடைகளுக்கு மேல் தடை வந்து தாமாக சேரும்.

அப்படியே திருமணம் நடந்தாலும் மன முரிவு ஏற்படும்.  அல்லது ஒரே வீட்டுல் பகை நிலையில் வாழ்வர்.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு குழந்தை செல்வம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் நோய்கள், மனநோயினால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம்!

ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?

ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.

மூதாதையர் பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி?

தாய் தந்தைக்கு அவர்களில் கடைசி நாட்களில் முறையாக கவனிக்காமல் விட்டு விட்டோம்.  மூதாதையர் பாதிப்பு நமக்கு உடனடியாக வராவிட்டாலும் நம் அடுத்த தலைமுறை பாதிப்படைவது உறுதி.

இந்நிலையில் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி என பார்க்கலாம்?

முதலில் செய்த தவரை அடி மனதில் உணர வேண்டும்.  அப்படி உணராமல், தப்பிப்பதற்காக மட்டும் வழிபாடுகளோ அல்லது மாற்று ஈடுகளோ செய்தால் உங்களின் மூததையர் ஆன்மாக்கள் உங்களை பாதிப்பில் இருந்து விட்டு விலகாது.

மூதாதையர் பாதிப்பு (பித்ரு தோஷம்) உள்ளவர்கள் மாற்று ஈடு (பரிகார்) செய்யாமல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருவார்கள்.

எத்தனை கோவில்களுக்குச் சென்று வந்தாலும் மூதாதையரின் ஆன்மாவிற்கு மாற்று ஈடு செய்யாமல் மூதாதையர் பாதிப்பு நீங்காது.

ஆடி புது நிலவு மற்றும் தை புது நிலவு நாட்களிலும் மூதாதையர் ஆன்மாக்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து பாதிப்புகளையும் நீக்கும்.

மிகக்கடுமையான மூதாதையர் பாதிப்பு உடையவர்கள் சோதிடரின் ஆலோசனைப்படி மாற்று ஈடு முயற்சிகள் செய்வது கட்டாயம்.

திருவாதிரை, புனர்பூசம், பூசம் விண்மீன்களில் வரும் புது நிலவன்று செய்யப்படும் மூதாதையர் தர்ப்பணம் பன்னிரண்டு ஆண்டுகள் மூதாதையர் அமைதி ஏற்படுத்தும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி விண்மீன்களில் வரும் புது நிலவன்று செய்யப்படும் மூதாதைஅயர் வழிபாடு, மூதாதையருக்கும், தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய நேரத்தை தரும்.

புது நிலவி அவிட்ட விண்மீனில் வரும் நேரங்களில் மூதாதையரை நினைத்து அன்னதானம் செய்யலாம்.

ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருபாம்புரம், திருநாகேஸ்வரம் போன்ற மாற்று ஈடுக்கான வழிபாட்டு இடங்களுக்கு சென்று மூதாதைஅயர் பாதிப்பு மாற்று ஈடுகளை முறையாக செய்துவர மூதாதைஅயர்(பித்ரு) பாதிப்பில் (தோஷத்தில்) இருந்து விடுபடலாம்.

செய்யக் கூடாதவை

• மூதாதையருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய திங்களில், தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் நாளது தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடுகள் தவிர வேறு எந்த ஒரு சிறப்பான வழிபாட்டையோ அல்லது ஓமத்தையோ செய்யக் கூடாது.

• தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த திங்களில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு வழிபாட்டிலும், ஓமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

• புது நிலவை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எதனாலும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

• விதிகளின்படி, சிரார்த்த செயல்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.

• சிரார்த்தம் செய்யக் கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading