ADVERTISEMENT

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

முதலில் தோஷம் என்கிற வடமொழி சொல்லிற்கான பொருள் என்ன என்பதை அறிவோம்.

நாம் உயிர் வாழுகின்ற பொழுது நம்மையும் அறியாமல் யாருக்காவது அல்லது எதற்காவது அல்லது எந்த உயிர் இனத்திற்காவது தீங்கு விளைவித்து இருக்கலாம். அதனால் ஏற்படும் விளைவே தோஷம் எனப்படுகிறது.

இங்கு இதை சாபத்திற்கு இனையானது என்று கொள்ளக் கூடாது. சாபம் என்பது முற்றிலும் வேறு. அது, நாம் ஒருவருக்கு இழைத்த வஞ்சகத்திற்காக அவர் மனம் நொந்து நம்மை பழித்து சொல்லுகிற வார்த்தை அல்லது என்னுகிற என்னத்தினால் வருவது சாபம்.

சாபம் ஏற்பட்டால் அனுபவித்தே தீர வேண்டும். தோஷம் என்பது அப்படி அல்ல. அதை கடவுள் வழிபாடுகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.


சரி, இப்பொழுது மாங்கல்ய தோஷம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.


மாங்கல்ய தோஷம் என்பது பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். ஆணுக்கு இது கிடையாது.

கட்டிய தாலி பெண்ணின் கழுத்தில் எவ்வளவு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் என்பதற்கு இந்த தோஷம் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.

விலங்கியல் கூற்றுப்படி, ஒவ்வொரு உயிர் பிறப்பதும் அது குழந்தை செல்வங்கள் பெற்று பல்கி பெருகத்தான்.

மனிதன் பிறப்பது, தன் மனித இனம் பல்கச்  செய்வதுதான் பிறப்பின் அடிப்படை கடமை.

அதற்கு இல்லற வாழ்வில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் கலந்து குழந்தை செல்வங்களை உருவாக்குவதே!

பெண்ணின் ஜாதகத்தில் சில கோள்களின் கூட்டு சேர்க்கை, அவற்றின் நிலை, தசா, புத்திகள் போன்றவற்றால் சில பெண்களுக்கு திருமணம் தாமதமாகும் அல்லது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கோள் அமைப்புகளைத் தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம்.

தெளிவாகச் சொல்வதானால், பெண் ஜாதகத்தில், அவரது லக்னத்தில் இருந்து எட்டாம் இடம் தான், மாங்கல்ய இடம்.

இதில் ஞாயிறு, செவ்வாய், காரி (சனி) , ராகு, கேது ஆகிய கோள்கள் இருப்பது தீய பலனை தரும்.

இது பெண் ஜாதகத்திற்கு மட்டுமல்ல, ஆணின் ஜாதகத்திலும், 8-ஆம் இடத்தில் ஞாயிறு, செவ்வாய், காரி (சனி) , ராகு, கேது ஆகிய கோள்கள் இருந்தால் தீய பலனையே தரும்.

அதிலும் குறிப்பாக திருமண தடையை ஏற்படுத்தும்.

8-ஆம் இடத்தில் ஞாயிறு, செவ்வாய், காரி (சனி) , ராகு, கேது ஆகிய கோள்கள் இருந்து, அந்த இடம், அக் கோள்களுக்கு சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் அதனால் ஏற்படும் திருமண தோஷம் குறையும்.

அவ்வீட்டில் வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்) பார்வை இருப்பின், தோஷம் முற்றிலும் விலகும்.

ஆண் மற்றும் பெண் இருவரின் ஜாதகத்திலும் இதே மாதிரியான அமைப்பு இருந்தால், இவர்கள் இணை பிரியாத தம்பதியர்களாக, நீடித்த ஆயுளுடன், இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள்.

அதே வேளையில், பெண்ணிற்கு இந்த நிலை இருந்து, ஆணின் ஜாதகம் இந்த நிலை இல்லாமல் இருந்தால், ஆணின் உயிர் திருமணம் ஆன சில ஆண்டுகளிலோ அல்லது நாட்களிலோ பலி ஆகலாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading