ADVERTISEMENT

திருமணம் செய்து வைக்கும் வியாழனின் நோக்கம்

திருமணம் செய்து வைக்கும் வியாழனின் நோக்கம் திருமணம் செய்து வைக்கும் வியாழனின் நோக்கம்



வியாழன் என்றால் வட மொழியில் குரு என்கிறார்கள்.  இந்த வியாழன் கோள் ஆண்டிற்கு ஒரு முறை தான் இருக்கும் ஒரு ராசியில் இருந்து மற்றொறு இராசிக்கு பெயற்சி பெறுகிறது.  இதை குரு பெயற்சி அல்லது வியாழன் பெயற்சி என்று அழைக்கிறோம்.

இவ்வாறு ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு பெயற்சியாகும் வியாழன், தான் இருக்கும் இராசியில் இருந்து 5வது மற்றும் 9ஆவது இராசியையும் பார்க்கும்.

சாதக்காரர் ஆண் என்றால் அவரது 7ஆம் இடத்தையும் வியாழன் நேர் பார்வையாக பார்க்கும்.  பெண் என்றால் 7வது மற்றும் 8வது இடங்களையும் வியாழன் பார்க்கும்.

இது மட்டும் அல்லாது, தான் இருக்கும் இராசிக்கு அடுத்த இராசியை, அதாவது 2ஆம் இடத்தையும் மேலும் 11 வது இடத்தையும் மறைமுகமாக பார்க்கும்.

ஆக ஆண் என்றால் வியாழன் 5,7,9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார், பெண் என்றால் 5,7,8, 9 மற்றும் 2,11 என ஆறு ராசிகளைப் பார்ப்பார்.

திருமணம்:

வியாழனின் பார்வை இருக்கும் நேரத்தில் திருமணம் முடித்தால் நல்லது என்பார்கள்.  அதுவே ஏற்ற நேரம் என்பார்கள்.  ஆக ஆணுக்கு வியாழன் அவரது இராசியில் இருக்கும் நேரத்திலோ அல்லது 7 ஆம் பார்வையில் அவரது இராசி இருக்கும் நேரத்தில் திருமணம் முடித்தால் சிறப்பு.

பெண் என்றால் வியாழன் அவரது இராசியிலோ அல்லது, 7 ஆம் அல்லது 8 ஆம் பார்வையில் இருக்கும் பொழுது திருமணம் முடிப்பது சிறப்பு.

தசா புக்தி:

வியாழன் பெயற்சியை வைத்து திருமணம் முடிப்பது என்பது 20 விழுக்காடு அளவிற்கு மட்டுமே சரி எனலாம்.

தசா புக்தி பலன்களையும் கணக்கிட்டு திருமணம் முடித்தால் இன்னும் சிறப்பு.

நிலவு தசையில் குரு புக்தி நடைபெறும் நேரத்தில் அல்லது
ராகு தசையில் குரு புக்தி நடைபெறும் நேரத்தில் அல்லது
வியாழன் தசையில் நிலவு புக்தி நடைபெறும் நேரத்தில் அல்லது
அறிவன் (புதன்) தசையில் நிலவு புக்தி நடைபெறும் நேரத்தில் திருமணம் முடிப்பது சிறப்பு.

மேலும், வியாழன் பார்வையும் தசா புக்திகளும் சிறப்பாக இருப்பின் எந்த திருமண தடை இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது திருமண ஏற்பாடுகளை செய்து முடிக்கலாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading