ADVERTISEMENT

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன? மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்று நாள் தோறும் நாள் காட்டியில் காண்கிறோம். அதன் பொருள் என்ன?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் மற்றும் சமநோக்கு நாள் என்று ஒவ்வொரு நாளும் நாள் காட்டி மற்றும் ஐந்திறன் நாள் காட்டிகளில் குறிக்கப்படுகிறது.

இவை மூன்றும் அன்றைய விண்மீன் அடிப்படையில் அமைவதால் இத்தகைய குறியீடுகளை பெறுகிறது.

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் மேல்நோக்கு விண்மீன்கள் எனப்படுகின்றன.

அதாவது, இந்த விண்மீன்களை கொண்ட நாட்கள் மேல்நோக்கு நாட்கள்.

இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க ஏற்ற நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது விண்மீன்கள், கீழ்நோக்கு விண்மீன்கள் என்றழைக்கப்படுகின்றன.

இந்த விண்மீன்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.

இந்த நாட்களில் ஆழ்துளை கிணறு தோண்டுதல், மண்ணை தோண்டி செய்ய வேண்டிய வேலைகள், சுரங்கப் பணி மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அசுதம், சித்திரை, சுவாதி, அனுசம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் விண்மீன்கள், சமநோக்கு விண்மீன்கள்.என்று ஜோதிடம் கணிக்கிறது.

இந்த விண்மீன்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.

இந்த நாட்களில் சம தளத்தில் செல்லும் வண்டி வாங்குதல், செல்லமாக வளர்ப்பதற்கான உயிரினங்கள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது சிறந்தது.

இதை எந்த ஒரு ஐந்திறன் நாள் காட்டியும் குறிக்கும்.

இதன் பொருள் என்னவென்று இப்பொழுது நாம் கற்றுக் கொண்டதால், இனி அந்தந்த வேலைகளை அதற்குறிய நாட்களில் மேற்கொண்டு வெற்றி பெறுவோம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading