ADVERTISEMENT

பெண் பூப்பெய்திய நேரம் வைத்து சாதகம் கணிக்கலாமா?

பெண் பூப்பெய்திய நேரம் வைத்து சாதகம் கணிக்கலாமா? பெண் பூப்பெய்திய நேரம் வைத்து சாதகம் கணிக்கலாமா?

பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஆருடம் (ருது ஜாதகம் - பெண் வயதிற்கு வரும் நேரம்) கணிக்கிறார்கள்.  இது ஏற்புடையதா? என்ற கேள்வி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலந்துரையாடலாக திகழ்ந்து வருகிறது.

இயற்கையின் படைப்பில், ஆண் பெண் என்ற பாலியல் வேறுபாடு இல்லை.  இரண்டும் சேர்ந்தால் தான் அது மனிதம்.

பெண் மூன்று வகை பிறப்புகளை கொண்டுள்ளால் என்பார்கள்.  அதாவது, மன்னில் பிறப்பது, பூப்பெய்வது மற்றும் குழந்தை பெற்றெடுப்பது என மூன்று வகை பிறப்புகள் பெண்ணிற்கு உண்டு என்பார்கள்.

பெண் மூண்று வகை நிலைகளை தன் வாழ் நாளில் கடந்து வந்தாலும், பிறப்பு என்பது அறிவியல் மற்றும் ஆருட கணக்கின் படி ஒன்றே... அது மனிதராக தன் அம்மாவிடம் இருந்து பிறப்பது.

அதன் படி, பிறப்பு நேரம் என்பது ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் ஒருமுறை தான்.

சில ஆருடம் கணிப்பவர்கள், பெண் பூப்பெய்திய நேரம் வைத்து சாதகம் கணிக்கிறார்கள். அதுவே சரியான முறை என கருத்துரைக்கின்றனர்.

அவர்கள் கூற்றை ஏற்றாலும், பெண்ணிற்கு மூன்று பிறப்பு என அவர்கள் எடுத்துக்கொள்வதை கணக்கிட்டால், பெண் தாய்மை அடையும் நேரத்திற்கு மேலும் ஒரு சாதகம் கணிக்க வேண்டிய நிலை வரும்.

அப்படி பார்த்தால், பிறந்த நேரத்தில் மேச லக்னம் என்றால், பூப்பெய்திய நேரத்தில் கன்னி என்றும் தாய்மை அடையும் நேரத்தில் சிம்மம் என்றும் வந்தால், எதை வைத்து ஆருடம் கணிப்பது?

மேலும், திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது பிறந்த நேரத்தின் படி செவ்வாய் தோசம் உள்ளது ஆனால் பூப்பெய்திய நேரம் கொண்டு கணித்த சாதகத்தில் தோசம் இல்லை என்றால் எதை கணக்கில் கொள்வது?

ஆருடம் கணிப்பது என்பது ஒரு கலை.  அதில் அறிவியலும் அறிவியல் தாண்டி ஆருடம் கணிப்பவரின் மனம் மற்றும் அறிவாற்றலும் பயன்படுகிறது.

ஆகவே அவர் அவர் தம் ஏதுவான வகையில் ஆருட இலக்கணத்தை மாற்றி அமைப்பது முறையாகாது.

பிறப்பு நேரம் என்பது ஒன்றே... அது அம்மாவின் வயிற்றில் இருந்து குழந்தை புவியை அடையும் நேரம்.  அந்த நேரத்தை வைத்து மட்டுமே சாதகம் கணிப்பது முறையாகும்.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading