ADVERTISEMENT

எண் ஜோதிடம் பார்ப்பது முறையானதா?

எண் ஜோதிடம் பார்ப்பது முறையானதா? எண் ஜோதிடம் பார்ப்பது முறையானதா?

இந்திய ஜோதிட வல்லுனர்கள், நிலவின் நிலையைக் கொண்டும் விண்மீன்களின் நிலையைக் கொண்டும் பல்வேறு ஆருடங்களை தொகுத்து வகுத்து வழங்கியுள்ளனர்.

இந்திய ஜோதிடத்தில் எண் ஜோதிடம் முறை என்கிற ஒரு முறை, முறையாக வல்லுநர்களால் வகுக்கப்படவில்லை.

எண் ஜோதிடம் என்கிற ஜோதிடம், மேற்கத்தைய நாடுகளின் ஜோதிட முறையை பொறுத்து இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

மேற்கத்திய எண் ஜோதிடத்தில், எண் ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கின்றனர்.  

முதல் பிரிவு சால்டியன் என்கிற எண் ஜோதிட முறையாகும்.  இரண்டாவது பிரிவு பைதகோரேன் எண் ஜோதிட முறையாகும்.

இந்த இருவகை ஜோதிடங்களும் பெயர் மற்றும் பிறந்த நேரத்தை வைத்து ஆருடம் கூறும் முறையாகும்.

இந்திய ஜோதிடத்தில் பெயர் சூட்டுவதற்கு முன்னால், ஏற்ற பெயரை வைப்பதற்காக பெயரின் துவக்க உச்சரிப்பை விண்மீனின் தடத்தைப் பொருத்து ஜோதிடர்கள் முடிவெடுக்கிறார்கள்.

இந்திய ஜோதிடத்தை பொருத்தவரை பெயரின் முதல் எழுத்து உச்சரிப்பு மனித வாழ்வில் நன்மையான அதிர்வுகளை ஏற்படுத்தும் என ஆருடம் எடுத்துரைக்கிறது.

மேற்கத்திய சாலிடியன் எண் ஜோதிடம் ஆனது பாபிலோனியர்களால், கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பாக வகுக்கப்பட்டது.

இதில், லத்தீன் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உச்சரிப்பு ஓசையை பொருத்து அவற்றிற்கு ஒரு எண் மதிப்பு கொடுக்கப்பட்டது.

இதை மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம்.  முதலில், பெயரில் உள்ள எல்லா எழுத்திற்கான எண்களும் ஒன்றாக கூட்டப்பட்டு, அதை வைத்து வாழ்வு எப்படி அமையும் என்று ஆருடம் உரைப்பது.

இரண்டாவதாக, பெயரிலுள்ள லத்தின் உயிர் எழுத்துக்களை (வொநெல்ச்) மட்டும் எடுத்து அவற்றை கூட்டி, அதை வைத்து ஒருவரின் ஆழ்மனது எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைப்பது.

மூன்றாவது, பெயரின் உயிரெழுத்துக்கள் (வொநெல்ச்) தவிர்த்து பிற எழுத்துக்களை ஒன்றாகக் கூட்டி அந்தக் கூட்டுத் தொகையை பொறுத்து ஒருவரின் நடவடிக்கைகளையும், பிறர் மீது அவர் செலுத்தும் ஆதிக்கத்தை குறித்தும் ஆருடம் உரைப்பது.

அடுத்ததாக பைத்தகோரியன் எண் ஜோதிடம். இது பைதகோரஸ் என்கிற எண் ஆய்வாளரால் தொகுக்கப்பட்ட தாகும்.

இவர் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்து துவங்கி 1 முதல் 9 வரை அதற்கு மதிப்பை தருகிறார். பத்தாவது எழுத்துக்கு 1 என்ற மதிப்பை கொடுத்து தொடர்ந்து ஒன்பது மதிப்புகளை அடுத்தடுத்த எழுத்துக்களுக்கு கொடுக்கிறார். இப்படியாக ஆங்கில எழுத்தின் 26 எழுத்துக்களும் ஒவ்வொரு எண் மதிப்பு கொடுக்கப்படுகிறது.  எடுத்துக்காட்டாக a = 1, i = 9.

சால்டியன் எண் ஜோதிடத்தில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்கள் மட்டுமே எழுத்துக்களுக்கு மதிப்பாக கொடுக்கப்படுகிறது.  ஆனால் பைதகோரேன் முறையில் 1 முதல் 9 வரையான எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவரும் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு அதிர்வை ஏற்படுத்துகிறது என கருதினர்.  பைத்தகோரேன் எண் ஜோதிட முறையில் பிறந்த நாளும், வைத்த பெயரும் ஒன்றுடன் ஒன்று ஒத்து இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறார்.

தமிழ் எழுத்துக்களை வைத்து எழுதுவோருக்கு மேற்கத்திய எண் ஜோதிடமானது பொருந்தாது.  தமிழர்களைப் பொறுத்தவரை பிறந்த விண்மீனின் தடத்தை பொறுத்து சிறந்த பெயர்களை சூட்டிக் கொள்வதே சிறப்பு.

மேலும் பிறந்த விண்மீனும், பிறந்த நேரத்தின் நிலவு நிலையும்ம், வைத்த பெயரும், பிறந்த நாளும், நேரமும், அதன் கூட்டுத்தொகைகளும், "உழைப்பே உயர்வு" என்ற  உயரிய சிந்தனை உடையவரின் வாழ்வின் உயர்வை தடுக்க இயலாது, என்பதே உண்மையிலும் உண்மை!


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading