ADVERTISEMENT

நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!

நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்! நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!

இந்த புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும், ஐந்து வகை திறன்களை (நீர் , நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம்)  உள்ளடக்கிய தத்துவங்களான,  நல்லொழுக்கம் (சாத்விக), தீய சிந்தனை (தாமச) மற்றும் பேராசை (ராஜச) என்ற மூன்று அடிப்படை குணங்களை உள்ளடக்கிய உயிருடன் கூடிய உடல் எனலாம்.   இதை நாம் முக்கோண (1, 5, 9) முக்குணங்கள் என்கிறோம்.  வடமொழியில் இதை திரிகோணம் என்கின்றனர்.

கணிதத்தில் ஒரு வட்டம் என்பது 360 பாகை (டிகிரி) கொண்டது.  ஒரு உயிரின் வாழ்க்கை என்பது ஆருட கணக்கீட்டின்படி 360 பாகை கொண்டது. அதாவது, ஒரு இராசிக்கு 30 பாகைகள்.  12 ராசிக்கும் 30 * 12 என 360 பாகைகள். உயிரிகளை 360 பாகையில் சுற்றிவரும் கோள்கள், நாம் குறிப்பிட்ட அந்த மூன்று அடிப்படை குணங்களையும் ஒவ்வொரு உயிருக்கும் சீர்படுத்தி தருகிறது என ஆருடம் கொள்கிறது.

ஆருட முக்கோணம் (திரிகோணம்) விளக்கம் மற்றும் பாகை என்றால் என்ன?:


முற்பிறப்பில் செய்த பலன்கள் மற்றும் வாழுகின்ற வாழ்வில் செய்கின்ற நற் செயல்களும் தீயவைகளும், புவியில் வாழும் ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது என இறையியல் தத்துவங்கள் விளக்குகின்றன.

ஒரு உயிர் செய்கின்ற நன்மை தீமைகள் அனைத்தும் அட்டவனையாக பதியப்பட்டு, அவை அந்த உயிர் இந்த புவியில் மீண்டும் மீண்டும் பிறக்கும்போது, நிலைகொண்டிருக்கும் முக்கோண (ராசிக்கட்டத்தில் 1, 5 மற்றும் 9)  கோள்கள் இருப்பிடத்தை முடிவு செய்வதாக ஆருடம் கணிக்கிறது.

முக்கோணம் என்றால் மூன்று கோணங்கள் கொண்ட ஒரு வடிவம்.  கணிதத்தில்  ஒரு முக்கோணத்திற்கு மூன்று கோணத்தின் பாகை அளவை கூட்டினால் 180 பாகை கிடைக்கப்பெறும். ஆரூடத்தில், இந்த முக்கோண குணங்களுக்கு, ஒரு குணத்திற்கும் மற்றொரு குணத்திற்குமான பாகை 120 என கணக்கிடப்படுகிறது.  அதாவது முதல் இராசி கட்டத்தில் இருந்து 120 (30 பாகை கொண்டது ஒரு இராசி என 120/30 என்றால் 4 ராசிகள்) பாகை தள்ளி இருக்கும் கட்டம் 5 ஆம் கட்டமாகும்.  அதில் இருந்து 120 பாகை தள்ளி இருக்கும் கட்டம் 9 ஆம் கட்டம் ஆகும். ஆக மொத்தம் 360 பாகைகளை கொண்டது ஆருட முக்கோணம் (திரிகோணம்).

ஒரு உயிர் என்பது, மறுபிறப்பில்லா தெய்வ நிலையை அடைவதை நோக்கி இருக்கவேண்டும் என்கிறது இறையியல் தத்துவம். முக்கோண கோள்களின் இருப்பிடத்தை வைத்து, ஒரு ஜாதகரின் வாழ்க்கை நோக்கம் எதை நோக்கி உள்ளது என கணித்து விட இயலும்.

முக்கோணத்தின் கட்டங்கள்


1, 5 மற்றும் 9 ஆகிய ராசி வீடுகளில் வீற்றிருக்கும் கோள்கள்,  அவற்றின் கதிர் வீச்சின் மூலம், முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகள், பெண்களுக்கு செய்த நன்மை தீமைகள், தாய் தந்தை மற்றும் மூதாதையருக்கு செய்த நன்மை தீமைகள், ஆகியவற்றைக் கணக்கிட்டு பலன் தரும்.

இந்த முக்கோணத்தின் கட்டங்களை நான்காக பிரித்து,  அறம் - பொருள் - இன்பம் - வீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக கணிக்கலாம்.

அறத்தை குறிப்பது, 1 - 5 - 9 ஆகிய ராசி கட்டங்கள்.

பொருள் (செய்த வினை) குறிப்பது, 2 - 6 - 10 ஆகிய ராசி கட்டங்கள்.

இன்பம் (திருமணம் மற்றும் மக்கட்பேறு) குறிப்பது, 3 - 7 - 11 ஆகிய ராசி கட்டங்கள்.

வீடு (விண்ணுலக வாழ்வு) குறிப்பது, 3 - 7 - 11 ஆகிய ராசி கட்டங்கள்.

ஜாதகர் முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகள் மற்றும் அவரின் மூதாதையர் செய்த நல்லவை கெட்டவை ஆகியவை சேர்ந்து இந்த ராசி கட்டங்களில் கோள்கள் அமையப் பெறுவதாக ஆருடம் கணிக்கிறது.

1 - 5 - 9 கட்டங்கள்


ஒரு ஜாதகர் மன அமைதி கொண்ட வாழ்க்கையை இப்புவியில் வாழவேண்டும் என்றால் அவரின் ஜாதக ராசிக்கட்டத்தில் 1 - 5 - 9 ஆகிய கட்டங்களில் கோள்கள் பலம் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி பலம் பெற்றிருக்கும் அமைப்பானது பெரும்பாலானோருக்கு கிடைக்கப் பெறாது.

சில ஜாதகர்களுக்கு செல்வச் செழிப்பிற்கு குறைவில்லாமல் வாழ்கை இருந்தாலும் அறத்தை குறிக்கின்ற இந்த ராசி கட்டங்கள் வலுவிழந்து அவர் மனதளவில் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்.

ஒரு ஜாதகரின் வாழ்க்கையை கணிப்பதாக இருந்தால், 1 - 5 - 9 ஆகிய கட்டங்களில் கோள்களின் நிலையை பார்ப்பதுடன், 10 -ம் கட்டத்தின் நிலையையும் கூர்ந்து ஆய்தல் வேண்டும். இந்தப் 10 -ம் கட்டம் தான், செய்தவினைக்கான பலனை இப்பிறப்பில் எடுத்துச் சொல்கின்ற நிலை.

இந்தப் 10 -ம் இடத்தில் பகை கோள்கள் அல்லது ஜாதகருக்கு தீங்கான கோள்கள் அல்லது பகைவர்கள் அல்லது ராசிக்கட்டத்தில் 8 அல்லது 11 ஆம் இடத்தின் உரிமையாளரோ (அதிபதி)  பார்வையோ அல்லது சேர்க்கையோ பெறாமல் இருந்தால் அவர் அரசருக்கு ஈடான நல்லூழ்களை பெற்று இருப்பார்.

அப்படிப்பட்ட ஜாதகத்திற்கு உடையவர், தன் வாழ்நாளில் நினைப்பதெல்லாம் செய்து முடித்து பெரும்புகழ் பெற்று நல்லூழ் கொண்டவராக விளங்குவார்.

சிலர் பிறந்ததிலிருந்து துன்ப மனநிலையிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிப்பதை காண்கிறோம்.  இவர்களின் ஜாதக ராசி கட்டத்தை உற்றுநோக்கினால், அவர்களின் 5 - 9 ஆகிய கட்டங்கள் பாதிப்புடன் இருப்பதை அறியலாம்.

ஜாதகரின் 5 -ம் கட்டம்


ஜாதகரின் 5 -ம் கட்டமானது, மக்கட்பேறு குறித்து நிலையை எடுத்துறைப்பதாகும். இது அடுத்த சந்ததி குறித்த கட்டமாகும்.  இந்தக் கட்டத்தில் வியாழன் அல்லது தீங்கிழைக்கும் கோள்கள் அமையப் பெற்று இருந்தாலோ அல்லது 5 -ம் இடத்திற்கு உரியவர் மறைந்திருந்தாலும் குழந்தைப்பேறு கட்டாயம் கிடையாது.

ஆசைக்கு (பெண் குழந்தை) ஒன்று ஆஸ்திக்கு (ஆண் குழந்தை) ஒன்று என்கின்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைச் செல்வம் உள்ள குடும்பமே, சிறந்த குடும்பம். இப்படி அமைய வேண்டுமென்றால் ஒன்பதாம் இடத்தில் வியாழன் இருக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

முக்கோண கட்டங்களின் உரிமையாளர்கள் மற்றும் பத்தாம் இடத்தின் உரிமையாளரை வைத்து ஜாதகர் யாருடைய அருளைப் பெற்றிருக்கிறார் என்பதை நன்றாக கணிக்க இயலும்.

தம்பதியர் இருவருக்கும்  மூதாதையரின் பழிப்பு,  பெண் பழிப்பு மற்றும் மற்ற பல்வேறு பழிப்புகள் 1 - 5 - 9 கட்ட கோள்கள் மூலம் தொடர்பு பெற்றால் குழந்தை வரம் அறவே கிட்டாது.

ஆகவே ஒரு ஜாதகரின் வாழ்க்கை நிலையை கணிப்பதாக இருந்தால் ஜாதகரின் முக்கோண கட்டங்களின் உரிமையாளர்கள் நிலை குறித்து அறிவதோடு தசா புத்தி பலன்களையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading