ADVERTISEMENT

ஜாதகத்தில் யோகங்கள் பல இருந்தும், சிலருக்கு பயன் இல்லையே! ஏன்?

ஜாதகத்தில் யோகங்கள் பல இருந்தும், சிலருக்கு பயன் இல்லையே! ஏன்? ஜாதகத்தில் யோகங்கள் பல இருந்தும், சிலருக்கு பயன் இல்லையே! ஏன்?

ஒரு ஜாதகத்தில் யோகங்கள் என்பது, "ராசி கட்டங்களில் கோள்கள் அமைந்திருக்கும் இடங்கள், கோள்களின் சேர்க்கைகள், முதலானவற்றை அடிப்படையாகக்கொண்டு, பொதுவாக மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மற்றும் தீய நிகழ்வுகளை முன்பே அறிவிக்கும் ஜோதிட விதிகள்" என கொள்ளலாம்.

யோகங்களை இரு வகையாகப் பிரிக்கின்றனர். அவை முறையே, 1. நல்லது செய்யும் யோகங்கள் மற்றும் 2. தீயவை செய்யும் யோகங்கள்.

இந்த நல்ல மற்றும் தீய யோகங்கள், ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பது கோள்களின் நிலையை பொறுத்தே அமைகிறது.

அடிப்படையில் இப்படி கணக்கிடப் பட்டாலும், யோகங்கள் முழுமையான பலன், அதாவது தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவை நவாம்ச மற்றும் ராசி கட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, எனலாம்.

சிலர் ஜாதகத்தில், யோகங்கள் வழங்கக்கூடிய கோள்கள், ராசி கட்டத்தில், யோகங்கள் முழுமையான பலன் தருவதற்கு தீங்காக அமைந்துவிடுகிறது.  இத்தகைய எதிர்மறை தன்மைகள் கொண்ட ஜாதக அமைப்பு, தீய பலன் தரும் யோகங்கள்  மற்றும் நல்ல பலன் தரும் யோகங்கள், என இரண்டிற்கும் பொருந்தும்.

நல்ல அல்லது தீய யோகம், ஒரு ஜாதகருக்கு இருக்கிறது என, ஆருடம் கணித்து எடுத்துக் கூறுவதற்கு முன்பாக, அந்த யோகம் எந்த வகையிலாவது பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதா என கணக்கிட வேண்டும்.

எந்த சூழ்நிலைகளில் யோகங்களுக்கு பாதிப்பு?


யோகத்தை தரும் கோளானது, கெட்டு இருந்தாலோ (நீசம்) அல்லது மறைந்திருந்தாலும் (அஸ்த) அல்லது பகைவர் வீட்டில் இருந்தால் அல்லது தீய பலன் தரும் கோள்களின் பார்வை பெற்றிருந்தால் அல்லது பாவக கட்டத்தில் அந்த கோள்களின் நிலையில் மாற்றம் இருந்தால் அல்லது நவாம்சத்தில் பாதிப்புகள் இருந்தாலும் யோகங்கள் தருவதில் குறைபாடுகள் ஏற்படலாம்.

துவக்க நாட்களில் உள்ள ஆருட நூல்கள், மேலே சொன்னவற்றால் யோகங்கள் பாதிப்படையும் என விளக்கம் சொல்ல, பின்நாட்களில் விளக்க உரை கொடுத்த ஜெய்மினி முனிவர், கோள்களின் பாகை வேறுபட்டாலும், கோள்கள் ராசியில் அமர்ந்த இடத்துடன் தொடர்புடைய விண்மீன்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் யோகத்தில் பாதிப்பு வரும் என கணித்துள்ளார்.

யோகங்கள் எப்பொழுது முழு பலனைத் தரும்?


ஒருவருக்கு ஜாதகத்தில் யோகம் இருக்கிறது என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் அந்த யோகம் பலனை கொடுக்குமா, என்றால் "இல்லை" என்கிற பதிலைத்தான் ஆரூட வல்லுனர்கள் தருகிறார்கள்.

இருப்பினும் சில யோகங்கள் வாழ்நாள் முழுவதும் பலனைத்தரும்.

யோகம் எந்த கோளினால் ஏற்பட்டிருக்கிறதோ, அந்தக் கோளின் தசாபுக்தி ஊழியில், யோகம் முழு பலனை தரும்.

கோள்களின் சேர்க்கையும் பார்வையும் அமையப் பெறுவது தான் யோகம்.  அதனால் அந்தக் கோள்கள் பகை அல்லது தீங்கான நிலை இல்லாமல் இருந்து, நட்பு அல்லது ஆட்சி அல்லது உயர்வு பெற்று அமர்ந்திருந்தால் யோகம் முழு பலனையும் தரும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading