ADVERTISEMENT

திருமண பொருத்தம்: பழைய முறையில் 28 பொருத்தங்கள் - விளக்கம்

திருமண பொருத்தம்:  பழைய முறையில் 28 பொருத்தங்கள் - விளக்கம் திருமண பொருத்தம்: பழைய முறையில் 28 பொருத்தங்கள் - விளக்கம்

திருமண பொருத்தம் என்றால் இப்பொழுது மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.  பொருத்தங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும், மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் என பல ஆருட - குறி சொல்பவர்கள் இப்பொழுது சொல்கிறார்கள்.

இப்பொழுது நாம் பார்க்கும் பத்து பொருத்தங்கள் மட்டுமல்லாது, நம் முன்னோர்கள், முன்னாட்களில்  மேலும் 18 பொருத்தங்கள் பார்த்து திருமணங்கள் முடித்தனர்.  அதாவது சுமார் 28 வகையான பொருத்தங்களை பார்த்து திருமணம் முடித்தனர்.  அவ்வாறு இருபத்தியாறு பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் முடித்தனர் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அவற்றில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எது அடிப்படை தேவையோ அந்த பொருட்கள் உள்ளனவா என இந்த 26-ல், தமக்கான சிறந்த தேவைகளை அறிந்து புரிந்து கணக்கில் எடுத்துக் கொண்டனர்.  இடைப்பட்ட ஊழியில், உறவு முறையிலேயே பெண் கொடுத்தல் எடுத்தல் என நமது பழக்கவழக்கங்கள் அமைந்திருந்தாலும், முன்னாட்களில், அவ்வாறான ஒரு பழக்கம் நம் பண்பாட்டில் இருந்ததில்லை.  ஜாதிய பிரிவுகளும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம் முன்னோர்கள் ஆணித்தரமாக பின்பற்றவில்லை.  அத்தகைய நிலையில், வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த ஆணும் பெண்ணும் மனம் ஒத்து, தம் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை.

மனப்பொருத்தம் மட்டும் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டாலும் கூட, முன்னாட்களில் நம் முன்னோர்கள் பின்பற்றிய அந்த 26 பொருத்தங்கள் யாவை என அறிந்து கொள்வோம்.

1.  பொருத்தங்கள் பார்க்கத் துவங்கும் பொழுது தலையாக பார்க்கவேண்டியது, யோகப் பொருத்தம்.   ஆண் பெண் ஜாதகங்களில் உள்ள யோகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பிரம்மச்சரிய யோகம், சன்னியாச யோகம், நம் நபுஞ்சக யோகம் ஆகியவை குறித்து கணித்து அதற்கேற்ப ஜாதகங்களை ஒப்பிடுதல் வேண்டும்.

குறிப்பாக யோக பலன்கள் குறித்து ஆராயும் பொழுது, ஐந்திரன் நாள்காட்டி துணை கொண்டு ஆராய வேண்டும்.  யோக பலன்கள் குறித்து, உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று சொல்வது எதனால் என்றால், திருமணம் முடிந்த பிறகு அல்லது அதற்கும் முன், உறவுக்கு புறம்பான உறவுமுறைகளை ஆண் அல்லது பெண் வைத்திருத்தல் ஆகாது என்பதை உறுதி செய்வதற்காகத்தான்.  ஆகவே இதில் கடுமையான எச்சரிக்கையை பின்பற்ற வேண்டும்.

2.  கோள்களின் பொருத்தம், இதை ராசி மற்றும் லக்கண பொருத்தமாக கணிக்க வேண்டும்.  இதனால் கோள்களின் பழிப்புகள் (தோஷம்) உள்ளனவா என கண்டறிய இயலும்.

3. பத்து (தச) பொருத்தம் - இது விண்மீன் நிலைகள் வைத்து பொருத்தம் காண்பது.  இந்த பத்து பொருத்தங்களை மட்டும் தான் இப்பொழுது நாம் திருமணபொருத்தம் என்கிற பெயரில் எடுத்துக் கொள்கிறோம்.  இவை முறையே, தினப் பொருத்தம், கனப் பொருத்தம், மகேந்திர பொருத்தம், திரு தீர்க்க பொருத்தம், யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் என பத்து விதமான பொருத்தங்கள் உள்ளடக்கியதாகும்.

இந்த பத்து பொருத்தங்கள் பார்ப்பதால், ஆயுள், அன்பு, குழந்தைப்பேறு, இன்பமான வாழ்க்கை, வாரிசு, நெருங்கிய உறவு, நிலைத்த உறவு, ஆகியவை குறித்து அறிந்து கொள்ளலாம்.

4.  மேற்சொன்ன பொருத்தங்கள் தவிர மேலும் 16 பொருத்தங்கள் பார்க்கலாம்.  அவை முறையே, விருச்சக பொருத்தம், ஆயுட் பொருத்தம், ஐம்பறவை (பஞ்ச பட்சி) பொருத்தம், பஞ்சபூத பொருத்தம், கோத்திரப் பொருத்தம், வருண பொருத்தம், சாதி பொருத்தம், லிங்க பொருத்தம், நாடிப்பொருத்தம், வருணத்தவருக்கு பிரதான பொருத்தம், தேசத்தவருக்கு பிரதான பொருத்தம், ஆய பொருத்தம், யோகினி பொருத்தம், சந்திர யோக பொருத்தம், பெயர் விண்மீன் பொருத்தம், புத்திர பொருத்தம் என 16 பொருட்கள் உள்ளன.  

வழக்கமாக கணக்கிடும் பத்து பொருத்தங்களை பொருத்தவரை, அது பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் எவ்வாறு அமையும் என்பதை கழிப்பதற்காக.  எடுத்துக்காட்டாக, ஆணின் ஆயுளை குறித்து 10 பொருத்தத்தில் கணிக்கிறார்கள் என்றால், அது பெண்ணின் தாலி நீடித்து இருக்குமா என்பதை கவனிப்பதற்காக தான்.

இந்த 16 பொருத்தங்கள் எதை அறிந்துகொள்வதற்காக பயன்படுகின்றன என்பதை குறித்து பார்க்கலாம்.
 
i.  விருச்சக பொருத்தம், இது, எத்தனை குழந்தைகள் இவர்களுக்கு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக.

ii.  ஆயுட் பொருத்தம், இது, இருவரும் எவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற்று இருப்பர் என்பதை அறிந்து கொள்வதற்காக.

iii.  ஐம்பறவை (பஞ்ச பட்சி)  பொருத்தம், இது, இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய மனப்பொருத்தம் அறிந்துகொள்வதற்காக.

iv.  பஞ்சபூத பொருத்தம், இது, விண்மீன்கள் ஒவ்வொன்றையும் நீர், நெருப்பு, காற்று , நிலம், வளிமம் என இயற்கை நிலைக்கு வகைப்படுத்தி, அவற்றிற்கு இடையேயான பொருத்தத்தை கணிப்பது.   இந்தப் பொருத்தத்தின் மூலம், பிறக்கின்ற குழந்தைகளின் உடல் நிலை எவ்வாறு அமையும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

v.  கோத்திரப் பொருத்தம் என்றால், இந்நாளில் உள்ள சாதிய கோத்திர பிரிவு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.  பழைய ஊழிகளில் அத்தகைய பிரிவுகள் இல்லவே இல்லை.  இது, விண்மீன்கள் ஒவ்வொன்றையும் ஒரு கோத்திர பிரிவாக பிரித்து கணிப்பது. இந்தப் பொருத்தத்தின் பயனாக, இருவரும் பிரியாமல் வாழ்வார்களா என்பதை அறிந்து கொள்ளலாம்.

vi.  வருண பொருத்தம், இது, ஆண் மற்றும் பெண் ராசிகள் வருணங்களாக பிரித்து, குடும்பத்தை யார் தலைமை ஏற்பார் என்பதை அறிந்துகொள்வதற்காக பயன்படுகிறது.

vii.  சாதி பொருத்தம், இது விண்மீன்களை சாதிகளாகப் பிரித்து, அவர்களுடைய மன மோதல்களை கணிக்க பயன்படுகிறது.

viii.  லிங்க பொருத்தம், இது யோனி பொருத்தம் போன்றதே.  யோனிப்பொருத்தம் பெண்ணின் மகிழ்ச்சியை குறிப்பதாக எடுத்துக் கொண்டால், லிங்க பொருத்தம் ஆணின் மகிழ்ச்சியை எடுத்துச் சொல்கிறது.

ix.  நாடிப் பொருத்தம், இது, விண்மீன்களை மூன்றுவகையான நாடிகளாகப் பிரித்து, அதாவது பிரம்மன், சிவன், விண்ணவன் என வகைப்படுத்தி பொருத்தம் பார்ப்பது.  இது பத்து பொருத்தத்தில் உள்ள நாடி பொருத்தத்திற்கு இணையானது.

x.  வருணத்தவருக்கு பிரதான பொருத்தம், இது, விண்மீன்களை 6 வகை சாதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு சாதி விண்மீனை கொண்டவர் இருக்கும் 10 பொருத்தங்களில் ஒன்று கட்டாயமாக இருக்கவேண்டும் என வரையறை செய்வதாகும்.  எடுத்துக்காட்டாக, அச்சுவினி விண்மீனை பிராமண வருணம் என கணக்கிட்டு, பத்து பொருத்தங்களில் அதிபதி பொருத்தம் கண்டிப்பாக தேவை என கொள்வதாகும்.

xi.  தேசத்தவருக்கு பிரதான பொருத்தம், இது வாழும் இடத்தை பொருத்து பேரரசுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேரரசு பகுதிக்கும் பத்து பொருத்தங்களில் ஒரு பொருத்தம் கட்டாயம் தேவை என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  எடுத்துக்காட்டாக, தென்பகுதியை சோழப் பேரரசு என கணக்கிட்டு, அங்கு வாழ்பவராக இருந்தால் லிங்க பொருத்தம் பார்க்க வேண்டும், பாண்டிய நாட்டினர் பகுதிக்கு, அதிபதி பொருத்தம் பார்க்க வேண்டும்.

xii.  ஆய பொருத்தம், இது, விண்மீன்களை எட்டு திசைகள் என வகைப்படுத்தி, அவற்றை எட்டு வகை விலங்குகளின் குணங்களுடன் ஒப்பிட்டு, பொருத்தம் பார்ப்பது.

xiii.  யோகினி பொருத்தம், இது எட்டு திசைகளை, 8 பெண் தெய்வ திறன்களுடன் ஒப்பிட்டு, பொருத்தம் பார்ப்பதாகும்.

xiv.  சந்திரா யோகா பார்க்க பொருத்தம், இது, ஒவ்வொரு விண் மீனையும் எட்டு திசையில் ஒரு திசைக்கு என கணக்கிட்டு, எட்டு திசைகளுக்கும், நிலவின் நாட்களை பொருத்தி, அந்த நாட்களுக்கு உரிமையாளர்களாக ஒரு கோள் என கொடுத்து, அதிபதி பொருத்தம் பார்ப்பது.

xv.  பெயர் விண்மீன் பொருத்தம், இது,  பெயரின் உச்சரிப்பில் உள்ள முதல் எழுத்து எந்த விண்மீன் மற்றும் பாதத்திற்கு என எடுத்துக்கொண்டு, அதை வைத்து  விண்மீன் பொருத்தங்களை கணிப்பது.

xvi.  புத்திர பொருத்தம், இது, புத்திர தோஷம் குறித்து அறிந்து கொள்ள.  ஆண் மற்றும் பெண்ணிற்கு புத்திர தோஷம் இல்லாதிருந்தால் சிறப்பு.  ஆண் அல்லது பெண் என ஒருவருக்கு மட்டும் புத்திர தோஷம் இருந்தால் அதை நடுநிலையாக எடுத்துக்கொள்ளலாம்.  இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் அது பகை.




Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading