ADVERTISEMENT

வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?

வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது? வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?

வசிய பொருத்தம் என்றால் என்ன? வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது? வசிய பொருத்தம் இல்லாவிட்டால் திருமணம் முடிக்கலாமா?

வசிய பொருத்தம் என்றால் என்ன?

வசிய பொருத்தம் என்றால், ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பதாலேயே கவரப்பட்டு கூடி வாழ்வார்களா என்பதை பார்க்கும் பொருத்தம்.

இந்த பொருத்தம் உள்ள தம்பதிகள் ஒருவரை ஒருவர் கவர்வதன் மூலம் நெருங்கிய அன்புடன் வாழ்வார்கள்.

இந்த பொருத்தம் பார்பது எதனால் என்றால், ஆணும் பெண்ணும் கூடி வாழும் பொழுது நாளடைவில் சலிப்பு ஏற்படுவதற்கான வாய்புகள் இருக்கும். ஏன் என்றால், பார்த்த முகத்தையே, கேட்ட குரலையே மீண்டும் மீண்டும் சந்திப்பதால்.

இந்த சலிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் வசிய பொருத்தம் இருக்க வேண்டும்.

இந்த வசிய பொருத்தம் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பிறரிடம் விட்டு கொடுக்காமல் இனிமையாக வாழ்வார்கள்.

வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?

வசிய பொருத்தம் என்பது கவர்தல் தொடர்பான பொருத்தம் என்று மட்டுமல்லாது, அந்தத்த இராசிகளின் குணத்திற்கு பிற இராசிகளின் குணம் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

எடுத்துக்காடாக, மேசம் இராசியில் பிறந்தவர்கள் எந்த செயலையும் துனிந்து மேற்கொள்வார்கள். அதிலும், புதிது புதிதாக முயற்சி மேற்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.

அதே வேளையில், எடுத்த செயலில் ஆர்வம் இல்லாவிட்டால், பாதியில் அப்படியே அதை விட்டு விடுவார்கள்.

சிம்மம் இராசிக்காரர்களின் குணம், புதிய செயலை செய்வதை விரும்பும். ஆனால் பாதியில் எதையும் விடமாட்டார்கள். முழுவதுமாக செய்து முடிக்க உழைப்பார்கள்.

அப்படியானால், மேசமும் சிம்மமும், ஆளுமை தன்மை கொண்ட ஒரே வகை சிந்தனையும் உடைய இராசிகள்.

இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால், துனிச்சலும், அதே வேளையில் பொருமை தன்மையும் சேர்வதற்கு நிகர். இப்படி இரண்டும் சேர்ந்தால் வெற்றி உறுதி.

ஆக இவை இரண்டும் பொருந்தும் எனலாம்.

துலாம் இராசிக்காரர்கள் நிதானம் உடையவர்கள். நீதி நேர்மை என்ற குணம் உடையவர்கள். அவர்களுக்கு துனிச்சலை விட நிதானம் தான் தேவை.

இத்தகைய குணம் மேசத்திற்கு ஆகவே ஆகாது.

அதே நேரம் சிம்மம் ஏற்றுக்கொள்ளும்.

இதுதான் உண்மையில் வசிய பொருத்தம் மூலம் பார்க்கப்படும் பொருத்தம்.

வசிய பொருத்தம்

வசிய பொருத்தம் ஒரு இராசிக்கு இரண்டு அல்லது ஒரு இராசி மட்டுமே அமையும். அப்படியானால், இந்த பொருத்தம் உடைய ஆணும் பெண்ணும் கிடைப்பது அரிதிலும் அரிது.

பொருந்தும் இராசிகள்

பெண் இராசிக்கு எந்த ஆண் இராசி பொருந்தும் என்பது தான் கீழ் உள்ள அட்டவனை.

மேஷம் – சிம்மம், விருச்சகம்

ரிஷபம் – கடகம், துலாம்

மிதுனம் – கன்னி

கடகம் – விருச்சிகம், தனுசு

சிம்மம் – துலாம், மீனம்

கன்னி – ரிஷபம், மீனம்

துலாம் – மகரம்

விருச்சகம் – கடகம், கன்னி

தனுசு – மீனம்

மகரம் – மேஷம், கும்பம்

கும்பம் – மீனம்

மீனம் – மகரம்

இடம் உள்ள பெண் இராசி வலம் உள்ள ஆண் ராசிக்கு முழுவதுமாக பொருந்துகிறது.

அதே வேளையில், வலம் உள்ள ஆண் ராசியில் பிறந்த பெண், இடமுள்ள பெண் இராசியில் பிறந்த ஆணை மனம் முடிப்பதாக இருந்தால் அந்த பொருத்தம் சம நிலை பொருத்தமாக பார்க்க வேண்டும்.

அதாவது, பொருத்தம் இருக்கிறது, ஆனால் முழு பொருத்தம் இல்லை எனலாம்.

மற்ற இராசிகளை பொருத்தவரை பொருத்த இல்லை என கணக்கிட வேண்டும்.

வசிய பொருத்தம் இல்லாவிட்டால் திருமணம் முடிக்கலாமா?

பத்து பொருத்தங்களில் மற்ற எல்லா பொருத்தங்களும் இருந்து வசிய பொருத்தம் இல்லை என்றாலும் ஜாதகத்தை சேர்க்கலாம்.

கவரக் கூடிய வெள்ளியும் மனதை இயக்குகின்ற நிலவும் மற்றும் அறிவிற்கான 5-ம் இடத்தையும் பொறுத்து பொருத்தம் அமைக்கலாம்.



மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading