ADVERTISEMENT

மீனம் லக்னம் செல்வம் எவ்வகையில் சேரும்?

மீனம் லக்னம் செல்வம் எவ்வகையில் சேரும்? மீனம் லக்னம் செல்வம் எவ்வகையில் சேரும்?

வியாழன் லக்னத்திற்கு உரிமையாளராக விளங்குகிறார் என்றால், அவரே 10ம் வீட்டிற்கும் உரிமையாளராக இருப்பது இந்த மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கான நல்லூழ் எனலாம்!

10ம் வீட்டின் உரிமையாளரான வியாழன் ஆட்சி உயர்வு பெற்று, வலுவாக அமைந்துவிட்டால், இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செல்வச் செழிப்பும், பெருமைமிகு பதவிகளும் தாமாக வந்தடையும். பொதுவாக இத்தகைய அமைப்பு கொண்டு பிறருக்கு அறிவுரை சொல்லத்தக்க வகையில் வல்லவராக இருப்பார்கள்.

வியாழன் தனது நட்பு கோள்களான ஞாயிறு - செவ்வாய் ஆகியவற்றுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அல்லது பத்தாம் வீட்டில் ஞாயிறு - செவ்வாய் வலுப்பெற்று அமைந்திருந்தால், பிறரை ஆட்சி செய்யத் தக்க பதவிகள் தாமாக வந்தடையும். இவர்கள் பொதுவாக அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை வகிப்பார்கள்.

ஞாயிறு, செவ்வாய் ஆகிய கோள்கள் சேர்க்கை பெற்று திரிகோண இடங்களில் அமையப்பெற்றால் பெருமைமிகு பதவிகள் தேடி வரும்.

வியாழன், காரி (சனி), செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அல்லது வியாழன், காரி, நிலவு சேர்க்கை பெற்றிருந்தால், பிறந்த ஊரில் வாழாமல், பிற நாடுகள் அல்லது வெளியூர் பயணங்கள் மூலமாக பெரிய அளவிலான வருவாயை ஜாதகர் ஈட்டுவார்.

வியாழன், நிலவு, கேது ஆகியவை சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் அல்லது திரிகோண அமைப்பில் இருந்தால், பொதுத் தொண்டு ஆற்றும் பணிகளில் ஈடுபட்டு பிறருக்கு உதவி செய்யக்கூடிய அமைப்பு அல்லது ஆன்மீக பணி அல்லது கோவில் குளம் போன்ற பொதுப் பணிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு அமையும்.

காரி 10ல் அமைந்து, வியாழன் - ஞாயிறு ஆகியவை வலுப்பெற்றால் அரசியல் உயர் பதவிகள் கிடைக்கும். இத்தகைய அமைப்பு கொண்டவர்கள் தாமாக தொழில் துவங்கி, இரும்பு, எண்ணெய், உழவு தொடர்புடைய தொழில் செய்து, தமக்குக் கீழ் ஏராளமான பணியாளர்களை அமர்த்தி, வேலை வாங்கக் கூடிய அமைப்பு கிடைக்கும்.

ஞாயிறு 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளில் ஜாதகர் பணிபுரிவார்.

செவ்வாய் 10ல் அமைந்திருந்தால் மேலாண்மை தொடர்புடைய துறைகளில் அல்லது நிலம் வீடு கட்டிக் கொடுத்தல் வாங்கி விற்றல் போன்ற தொழில்களில் ஜாதகர் ஈடுபடுவார்.  

வெள்ளி 10ல் அமைந்திருந்தால், அது வியாழனுக்கு பகை கோள் என்றாலும், பெண்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களை வாங்கி விற்பது அல்லது உற்பத்தி செய்வது போன்ற தொழில்கள் மூலமாக செல்வம் சேர்க்க வாய்ப்புள்ளது.  இத்தகைய அமைப்பு கொண்டவர்கள் போக்குவரத்து வண்டிகள் வைத்து தொழில் செய்யும் வாய்ப்புள்ளது.

ராகு 10ல் இருந்தால் மருந்து, வேதிப்பொருட்கள் தொடர்புடை தொழில் செய்வார். 10ல் ராகுவுடன் நிலவும் சேர்ந்து இருந்தால், அல்லது 10ல் கேதுவுடன் நிலவு சேர்ந்து இருந்தால், ஜாதகர் மருத்துவத் துறையில் வல்லவராக விளங்குவார்.

10ல் அறிவன் (புதன்) அமைந்திருந்தால், கணிதம் கணினி தொடர்புடைய துறைகளில் ஜாதகர் ஈடுபடுவார். மீன லக்னம் "உதவி லக்னம்" என்பதால், பிறருடன் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் இருந்தால் சிறப்பு. ஆனால், 10ல் அறிவன் (புதன்) அமைந்திருந்தால், அறிவன் 7ம் வீட்டிற்கு உரிமையாளர் என்பதால், இவர்கள் கூட்டுத் தொழில் செய்வது நல்லது.  நாம் இங்கே கூட்டுத்தொழில் என்று கூறுவது, மனைவி, தாய்-தந்தை போன்ற உறவு முறைகளுடன் மட்டும்.

வியாழன் அல்லது தாழ்வு நிலை (நீச) பெற்று அமைந்திருந்தால் அல்லது தீய பயன்கள் கொடுக்கும் கோள்களுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அல்லது வலுவிழந்து இருந்தால் அல்லது 6, 8, 12ல் மறைந்து இருந்தால் ஜாதகர் நிலையற்ற வருவாய் கொண்ட வாழ்க்கையை வாழ்வார்.

மேலும், வியாழனை காரி பார்த்தால், ஜாதகருக்கு பிறருக்கு கீழ் பணிபுரியும் நிலை ஏற்படும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading