"பழிப்பு" என்கிற தமிழ்ச் சொல்லிற்கான் வடமொழிச் சொல் "தோஷம்". ஆருடத்தை பொருத்தவரை, இந்தப் பழிப்பு, முற்பிறப்பில் செய்த வினையால், சாதக கட்டத்தில், கோள்களின் இருப்பிட அமைப்பின் மூலம் ஏற்படுகிறது. அதாவது சென்ற பிறவிகளில் நாம் செய்த தீய மற்றும் நல்ல செயல்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது சாதகக் கட்டங்கள் அமைகின்றன. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், தீங்குகள், குற்றங்களைப் பொறுத்தே கோள்களின் அமைப்புகள் சாதகத்தில் அமையும். நமக்கு சாதக ரீதியாக உள்ள இடர்பாடுகள், பாதிப்புகளைத்தான் பழிப்பு (தோஷம்) என்று சொல்கிறோம்.
நாம் ஏற்கனவே கற்றது போல, ராகு கேது பழிப்பு என்பது, விலங்குகள் இணை சேரும்போது அதை பிரிப்பதால் அல்லது அந்த இணையில் ஆண் அல்லது பெண்ணைக் கொல்வதால் ஏற்படும் பழிப்பு.
பிறந்த நேரத்தைக் கொண்டு சாதகம் கணித்தால், சாதகருக்கு பல நல்லூழ் யோகங்கள் இருப்பதாக குறிக்கப்பட்டிருக்கும். தசா புக்தி பலன்களை பார்த்தாலும், அதுவும் சிறப்பானதாக இருக்கும். கோள்களின் பெயர்சி பலன் ஆய்வு செய்தால் அவையும் சிறப்பாக இருக்கும். ஆனால் சாதகர் மனதளவில், பொருளாதார அளவில், குடும்பச் சூழலில் கடுமையான பாதிப்புகளை தொடர்ந்து சந்தித்து வருவார். இது ஏன்? எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்து அறிய வேண்டுமாயின், அங்கே வருகிறது இந்த "திதி சூன்யம் தோஷம்".
நிலவின் நாளை குறிக்கும் வடமொழிச் சொல் "திதி". இந்த திதி சூன்யம் தோஷம் கொண்ட சாதகருக்கு கோள்களுக்கு தீங்கு (சூனியம்) ஏற்படுகிறது. முழுநிலவு மற்றும் புது நிலவு நாள் தவிர்த பிற நாட்களில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இந்த "நிலவு நாள் தீங்கு பழிப்பு" (திதி சூன்யம் தோஷம்) ஏற்பட்டிருக்கும்.
எந்தெந்த நிலவின் நாளுக்கு (திதி), சூன்ய தோஷ ராசிகள், கோள்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
திதி சூன்யம் என்றால் என்ன?
ஐந்திறன் (பஞ்சாங்க) அங்கத்தில் நிலவு நாள் - கிழமை - விண்மீன் -யோகம் - கரணம் என ஐந்து பிரிவுகள் அடிப்படை. இதில் நிலவு நாள் என்பது வளிமத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து ஞாயிறுக்கும் நிலவிற்கும் உள்ள தொலைவாகும்.
15 நாட்களில் புது நிலவு - முழு நிலவு நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 நிலவு நாட்களில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் ஏதாவது ஒருவகையில் கண்டிப்பாக இருக்கும்.
இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது, சொல்லிய பலன்கள் பலிப்பதில்லை. ஆருடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது. இந்த நிலவு நாட்களில், நிலவு நாளின் நான்காவது நாளில் ஒருவர் பிறந்து அறிவனும் (புதன்) - வியாழனும் சாதகத்தில் உயர் நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. தீங்கு (சூனியம்) பெற்ற கோளும், சூன்ய ராசியில் உள்ள கோளும் தங்களது வலுவை இழப்பதோடு தமது செயல்பாட்டின் அடிப்படை பலன்களையும் செய்வதில்லை. சாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
திதி சூன்யம் பெற்ற மேற்படி கோள்கள் ஆட்சி - உச்சம் பெற்றாலும் கேந்திர - திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.
மேற்படி திதி சூன்யம் பெற்ற கோள்கள் கேடான நிலையில் (வக்ர) இருக்கும் போதும், சிம்மம் - விருச்சிகம் - கும்ப - மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நீங்கப் பெறுகிறது.
1, 5, 9 ஆகிய கோள்களின் கொடில்லல்-வாங்கல் (பரிவர்த்தனை) பெறும் போதும், திருவாதிரை - சுவாதி - சதயம் என்னும் ராகுவின் விண்மீன் காலில் இருக்கும்போதும் சூன்ய தோஷ விலக்கு பெறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ விலக்கையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால் எடுத்துரைகின்ற ஆருடம் பொய்யாது ஒருநாளும்.
திதி சூன்ய தோஷம் எங்கு இருந்தால் பலன்கள் கிடைக்கும்?
மறைவு இடமாகிய 3, 6, 8, 12-இல் சூன்யம் அடைந்த கிரகங்கள் இருந்தால், நல்ல பலன் கிடைக்கும். கேடான (வக்ர) நிலை ஆனாலும் கூட நற்பலன்களையே தரும் என்பது ஆருட கோட்பாடு. திதி சூன்யம் அடைந்த கோள்கள், பகையானாலும், இழிவு நிலை (நீச்ச) பெற்றாலும், தீங்கை தரும் கோள்களுடன் (பாபிகளுடன்) சேர்ந்தே இருந்தாலும், இயல்பான பலன்கள், அதாவது அவை கொடுக்க வேண்டிய பலன்களை கூடுதலாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கோள்கள் - ஞாயிறு, செவ்வாய், காரி (சனி), ராகு, கேது உடன் இருந்தாலும், பழிப்பு (தோசம்) இல்லை.
கோள்கள், தன் திறன் இழந்த நிலை (அஸ்தங்கம்) அடைந்தாலும், கேடான (வக்ர) நிலை இருந்தாலும், பகை, இழிவு நிலை (நீச்ச) பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து - 3, 6, 8, 12-இல் இந்தாலும் மேஷம், விருச்சகம், சிம்மம், கும்பம், ஆகிய ராசிகள் இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.
தீங்கை தரும் கோள்களுடன் (பாபிகளுடன்) சேர்ந்து இருந்தாலும் திதி சூன்யம் இல்லை. திதி சூன்யம் பெறும் ராசிகளில் நிலவு வீற்றிருக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி, லக்னமாக நடைபெறும் நேரத்லும், நல்ல செயல்கள் எதுவும் செய்யக் கூடாது.
சூன்ய திதி சூன்ய ராசி சூன்ய கோள்
1. பிரதமை திதி துலாம்-மகரம் வெள்ளி - காரி (சனி)
2. துதியை திதி தனுசு-மீனம் வியாழன்
3. திருதியை திதி மகரம்-சிம்மம் காரி - ஞாயிறு
4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் காரி - வெள்ளி
5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி அறிவன் (புதன்)
6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்வாய் - ஞாயிறு
7. சப்தமி திதி தனுசு-கடகம் வியாழன் - நிலவு
8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி அறிவன்
9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் ஞாயிறு - செவ்வாய்
10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் ஞாயிறு - செவ்வாய்
11. ஏகாதசி திதி தனுசு-மீனம் வியாழன்
12. துவாதசி திதி துலாம்-மகரம் வெள்ளி - காரி
13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் வெள்ளி
14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி அறிவன் - வியாழன்