ADVERTISEMENT

வேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்

வேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம் வேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்

வேதை பொருத்தம் - வேதனை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்

வேதை பொருத்தம் பார்ப்பது மிக எளிது.

பாதிப்பு தன்மைகளை ஒன்றுக்கு ஒன்று ஏற்படுத்தும் விண்மீன்களின் பட்டியல் இதோ:

அஸ்வினி - கேட்டை
பரணீ - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை- அவிட்டம்

இதில் பெண்ணிற்கு என்று பார்க்கத் தேவையில்லை.

இந்த பாதிப்பு உடைய விண்மீன்களை ஒன்றுக்கு ஒன்று சேர்கக்கூடாது.

அப்படி சேர்த்தால் துன்பத்தில் ஆணும் பெண்ணும் வாழ்வார்கள்.

துன்பம் என்பது, உடல் நோய் அல்லது ஏழ்மை என்று இங்கு எடுத்துக்கொள்வதில்லை.

கருத்தொற்றுமை அற்ற வாழ்வை தான் துன்ப நிலையாக பார்க்கிறோம்.

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இந்த வேதை பொருத்தம் பார்ப்பது தேவை.

மேலும், இந்த பொருத்தம் பார்த்து மனம் முடித்தாலும், திருமணத்திற்கு பின் மனைவியின் நடப்பு திசை கணவனின் திசைக்கு எதிராக, பகையாக வருவது தான்.

அதே வேளையில், திருமணம் முடித்து சில நாட்கள் பகையாக இருக்கும் தம்பதி அதன் பின் ஒற்றுமையின் அன்பின் எடுத்துக்காட்டாக வாழ்வதும் இந்த திசை அமைப்பில் ஏற்படும் மாற்றமே.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading