ADVERTISEMENT

சில விண்மீன்களுக்கு தலை, உடல், கால் இல்லையா?

சில விண்மீன்களுக்கு தலை, உடல், கால் இல்லையா? சில விண்மீன்களுக்கு தலை, உடல், கால் இல்லையா?

ஆரூட கணிப்பில் பயன்படும் சில விண்மீன்களுக்கு தலை அல்லது கால் அல்லது உடல் இல்லை என்கிறது ஜோதிட நூல்கள்.

இப்படி கால் அல்லது உடல் அல்லது தலை இல்லாவிட்டால், அத்தகைய தன்மை கொண்ட விண்மீன்கள் எவ்வாறு தம்மை ஆருட கணிப்பில் நிலை நிறுத்திக் கொள்கின்றன என்பது குறித்து பார்க்கலாம். இதில், தலை மற்றும் கால் ஆகியவை தனிப்பட்ட உறுப்புகளாக கருதப்படுகின்றன.  உடல் என்பது கீழ் வயிறு -  மேல் வயிறு என இரண்டாக பிரிக்கப்படுகிறது.

1.  காலற்ற விண்மீன்கள் மொத்தம் 3. இவை ஆண் கோள்களின் ஆட்சி பெற்றவை.  இவை ஞாயிறு தன்மையை பெற்றவை.  

கிருத்திகை விண்மீனின் முதல் மாதம் மேஷ ராசியில் இடம் பெறுகிறது.  2, 3 மற்றும் 4ஆம் பாதங்கள் ரிஷப ராசியில் உள்ளன.

உத்திரம் முதல் பாதம் சிம்ம ராசியில் இடம் பெற்றுள்ளது. 2, 3 மற்றும் 4ஆம் பாதங்கள் கன்னி ராசியில் இடம் பெற்றுள்ளன.

உத்திராடம் முதல் பாதம் தனுசு ராசியில் உள்ளது.  2, 3 மற்றும் 4ஆம் பாதங்கள் மகர ராசியில் உள்ளன.

மேலே குறிப்பிட்டபடி ஒரு விண்மீன் இருக்கு நான்கு பாதங்கள் உண்டு.  முதல் பாதம் அந்த விண்மீனின் கால் என கருதப்படுகிறது.  இரண்டு மற்றும் மூன்றாம் பாதங்கள், அந்த விண்மீனின் உடலாக கருதப்படுகிறது.  நான்காம் பாதம்,  தலையாக கருதப்படுகிறது.

இந்த எடுத்துக்காட்டின் படி, விண்மீனின் முதல் பாதமான கால், ஒரு ராசி வீட்டில் இருக்க, அந்த விண்மீனின் உடல் மற்றும் தலை பாகங்கள் மற்றொரு ராசி வீட்டில் இடம்பெறுகின்றன.  அதனால்தான் இந்த மூன்று விண்மீன்களையும், காலற்ற விண்மீன்கள் என அழைக்கிறோம்.

2.  உடலற்ற விண்மீன்கள் 3.  இவை ஆண் கோள்களின் ஆட்சி பெற்றவை.  இவை செவ்வாயின் தன்மையை பெற்றவை. செவ்வாயின்

மிருகசீரிடம் முதல் மற்றும் இரண்டாம் பாதங்கள் ரிஷப ராசியிலும், 3 மற்றும் 4ஆம் பாதங்கள் மிதுன ராசியிலும் இடம் பெற்றுள்ளன.

சித்திரை ஒன்று மற்றும் இரண்டாம் பாதங்கள் கன்னி ராசியிலும்,  3 மற்றும் 4ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும் இடம்பெற்றுள்ளன.

அவிட்டம் 1 மற்றும் 2ஆம் பாதங்கள் மகர ராசியிலும், 3 மற்றும் 4ஆம் பாதங்கள் கும்ப ராசியிலும் இடம்பெற்றுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ளது படி, விண்மீனின் கால் மற்றும் கீழ் வயிறு ஒரு ராசி வீட்டிலும், மேல்வயிறு மற்றும் தலை ஒரு ராசி வீட்டிலும் இடம் பெற்றுள்ளதால், உடல் இரண்டாகப் பிளவுபட்டு ராசி வீடுகளில் நிற்பதால், இவற்றை உடலற்ற விண்மீன்கள் என அழைக்கிறோம்.

3  தலையற்ற விண்மீன்கள் மொத்தம் 3.  இவை ஆண் கோள்களின் ஆட்சி பெற்றவை.  இவை வியாழன் தன்மையை பெற்றவை.

புனர்பூசம் 1 2 3 ஆகிய பாதங்கள் மிதுன ராசியிலும் 4ஆம் பாதம் மட்டும் கடக ராசியிலும் இடம் பெறுகிறது.

விசாகம் 1 2 3 ஆகிய பாதங்கள் துலாம் ராசியிலும் 4ஆம் பாதம் மட்டும் விருச்சிக ராசியிலும் இடம் பெறுகிறது.

பூரட்டாதி 1 2 3 ஆகிய பாதங்கள் கும்ப ராசியிலும் 4ஆம் பாதம் மட்டும் மீன ராசியிலும் இடம் பெற்றுள்ளன.

மேலே சொன்ன படி, இந்த மூன்று விண்மீன்களின் 1 2 3 ஆகிய மூன்று பாதங்களும், அதாவது கால் மற்றும் உடல் ஆகிய பகுதிகள் ஒரு ராசி வீட்டிலும், தலைப் பகுதி மட்டும் மற்றொரு ராசி வீட்டிலும் இடம் பெற்றுள்ளதால் இந்த விண்மீன்களை தலையற்ற விண்மீன்கள் என அழைக்கிறோம்.




Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading