ADVERTISEMENT

வெள்ளியும் ராகுவும் ஜாதகரின் நிலையை தடுமாற்றம் செய்வார்களா?

வெள்ளியும் ராகுவும் ஜாதகரின் நிலையை தடுமாற்றம் செய்வார்களா? வெள்ளியும் ராகுவும் ஜாதகரின் நிலையை தடுமாற்றம் செய்வார்களா?

சாதகரின் பாலியல் உறவு தன்மைகளை வாரி வழன்குவது வெள்ளி மற்றும் ராகு என் ஆருடம் குறித்த அடிப்படை அறிவு கொண்ட யாவரும் அறிவர்.

அந்த இரு கோள்களும் நல்ல நிலையில் இடம் பெற்றால், சாதகரின் இல்வாழ்கை சிறந்து விளங்கும் என்கிறது ஆருட நூல்கள்.  அதே வேளையில், அவை இரண்டும் அளவுக்கு மீறி தமது திறன்களை சாகரின் மீது கொடுத்தால், அதுவே சாதகருக்கு தீங்காக அமைந்துவிடக்கூடும்.

"அளவுக்கு மீறினால் மருந்தே நஞ்சாகும்" என்கிற தமிழின் பழமொழி போல, ராகு மற்றும் வெள்ளியில் சாதகர் மீதான திறன் வெளிப்பாடு தீமையிலும் கொண்டுசெல்லலாம்.

ஒரு சிலருக்கு இந்த இரு கோள்களும் தீய சேர்க்கை கொண்டு தீங்கான நிலையில் இருக்கும்போது இல்லர வாழ்வை பந்தாடிவிட்டுச் செல்லும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கை நிலை சீராக இல்லாமல்,  வெவ்வேறு வடிவத்தில் நோயின் தாக்கம், கடன் தொல்லை, திருமணம் ஆகியும் துணையை பிறிந்து வாழும் நிலை, நிலையற்ற வருவாய் என்று பல பாதிப்பான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இத்தகைய அமைப்புகொண்ட சாகர் பல்வேறு சிக்கல்களை நாளொரு பொழுத்தும் எதிர்நோக்கி வாழ்வார்.

ராகு தனித்து இருந்தால், சாதகருக்கு தீங்கான திறன்களை பாதிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு கொடுக்க மாட்டார்.  அப்படியானால் ராகு எங்கே இருந்தால் நன்மை அல்லது தீமை ஏற்படும் என்பது குறித்து தெளிவு பெறுவோம்.

தீங்கான நிலையில் ராகு எங்கு இருந்தாலும் சாதகருக்கு இடர்பாடுதான். அதுவே  3,6,10,11ல் மற்றும் மேசம், ரிசபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இராசி வீடுகளில் ராகு இருக்கும்பொழுது பாதிப்பை குறைத்து நற்பலனைச் செயல்படுத்துவார்.

ராகுவுடன் சேரும் கோளின் தன்மையை பெரும்பாலும் தமதாக எடுத்துக்கொண்டு அந்த கோளின் தன்மையை பலமடங்கு பெருக்கி சாதகருக்கு ராகு தரும். அதாவது நல்ல  மற்றும் தீய கோள்களின் சேர்க்கை, அந்த கோள்களின் தன்மையை பலமடங்காக பெருக்கி சாகரிம் மீது வெளிப்படுத்த வைப்பது ராகுவின் தன்மை!

ராகுவால் புதிய கண்டுபிடிப்பு, பல்வேறு நாட்டுத் தொடர்பு, செல்வ சேர்க்கை என ஒன்றை ரெட்டிப்பாக்கும் தன்மை கொண்டு வர இயலும்.

அதே வேளையில் ராகுவுடன் வெள்ளி இருந்தால், அத்தகைய நிலை இல்வாழ்கையில் பல நேரம் பாதிப்பையும் சில நேரம் நல்ல பலனையும் தரும்.

வெள்ளி மற்றும் ராகு சேர்க்கை இல்வாழ்கையில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவரும்.   முதலாவதாக, ராகு 3,6,8,12 ல் உச்சம் பெற்ற வெள்ளியுடன் சேரும்போது பாதிப்பு பெருமளவில் இருக்கும்.

1. வேள்ளியுடன் ராகு சேரும்பொழுது அவர் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அழகிய வீடு,  வண்டி, செழிப்பு, தேவைக்கு மேல் உணவு, பேச்சுத் திறன், மகிழ்வான வாழ்க்கை அமையும். அதோடு ஆண் பெண் வாழ்க்கை தேவையான மகிழ்வையும் கொடுப்பார்.

2. வெள்ளி ராகு தொடர்பு இருப்பவர்கள் மேலே மேலே உயரத்துக்குச் செல்வார்கள், ஒருசிலர் அடிமட்டத்தில் கீழேயும் தள்ளப்படுவார்கள். இந்த ஜாதக அமைப்பு இருப்பவர்கள் ஒன்றுக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டும்.

3. ஜாதகர்கள் அழகு சார்ந்த செயல்ளிலும், தன்னை செயற்கை முறையில் அழகுபடுத்திக்கொள்ளவும் ஆசைப்படுபவர்கள். எதிரில் இருக்கும் நபரிடம் தன்னை உயர்த்திக்கொள்ளும் எண்ணம் இருக்கும். எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு இருக்கும். அதுவே அவருக்கு தலைவலியாக மாறிவிடும்.

4. காலபுருஷ தத்துவப்படி வெள்ளியின் வீடு இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவர். ஒரு மனிதனுக்கு மகிழ்வையும், செழிப்பையும், பகட்டையும் பெருமளவு ஆசைப்பட வைப்பவர்.   ரெட்டிப்பான சுகத்தையும் அதற்கு ஏற்ப துக்கத்தையும் கொடுப்பார், அதுபோல ஒரு மனிதனுக்கு சுகத்தையும், போகத்தை ஆடம்பரத்தை அதிகமாக ஆசைப்பட வைப்பவர்கள் வெள்ளியும் ராகுவும். ரெட்டிப்பான சுகத்தையும் அதற்கு ஏற்ப துக்கத்தையும் கொடுக்கும் இந்த சேர்க்கை. வெள்ளியுடன் ராகு சேரும்போது தன்னுடைய இல்லற வாழ்க்கை நெரியில் தீய தன்மையும் தர வழிகாட்டவும் செய்வார்கள், அதுவும் 2,7,11 பாவ தொடர்பில் இருக்கும்போது நடைபெறும். இருதாரம் அமைப்பும் நிகழ வாய்ப்புகள் கூடுதல். அதனால் ஒருவர் காம இச்சைகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. புதிய கண்டுபிடிப்பு (னெந் இன்னொவடிஒன்): ஒரு பொருளைப் பயனுள்ளதாக மற்றும் தன்மை சுக்கிரனிடம் உள்ளது. குரு என்ற தங்கத்தை உருக்கி புதிய நகையாக மாறும்போது அங்கு சுக்கிரனின் காரகன் செயல்படும். அதேபோல் ஒரு மாணவன் புதியன செயல்படுதல் மற்றும் புது வரவு, புதிய ஆராய்ச்சிக்கு ஊக்கியாக ராகுவின் துணை அவசியம் தேவை. மறைக்கப்பட்ட விஷயங்களை ஆராய்ச்சியின் மூலம் வெளியே கொண்டுவரும் திறன் ராகுவுடன் சேரும் சுக்கிரன் செய்வார்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading