கால சர்ப்ப தோஷம் என்பதும் சர்ப்ப தோஷம் என்றாலும் ஒன்றே.
பாம்பை அடித்து கொன்றால் அது உயிர் விடும் போது கொல்பவரை பார்த்து பழிப்பதால் ஏற்படும் தோஷம் தான் இந்த சர்ப்ப தோஷம் எனப்படும் கால சர்ப்ப தோஷம்.
பிற தோஷங்களை போல் அல்லாது, இது ஒருவர் முற்பிறவியில் செய்த குற்றத்தினால் அவருக்கு ஏற்பட்ட பழிப்பு.
இந்த சர்ப்ப தோஷ பாதிப்புள்ளவர்களுக்கு உடல் நலம் குறைவுடைய குழந்தைகள் பிறக்கும்.
நலமுடன் பிறந்தாலும் நாளைடைவில் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்.
இரண்டு பாம்புகள் உறவில் இணைந்திருக்கும் போது - காதல் வயப்பட்டிருக்கும் பொழுது அவற்றைக் கொன்றால் அது மிகக் கொடூரமான குற்றமாகும்.
பாம்பை அடித்துக் கொல்ல முயலும் பொழுது அவை மனிதனான தங்களை ஒன்றும் செய்ய மாட்டோம், எங்களை உறவில் இணைந்திருக்க விட்டு விடுங்கள் என்பதைப் போல தங்களது வாலால் தரையில் அடித்துச் உறுதி செய்யும்.
அப்படி உறுதி தந்த பின்னும் அவற்றில் இரண்டையோ அல்லது ஒன்றையோ அடித்துக் கொன்றால் அது அந்த கொல்லும் மனிதனை பழித்துவிட்டு உயிர் விடும்.
இந்தகைய பழிப்பு என்பது, பாம்பு மட்டும் விடுவதில்லை. பிற உயிர் இனங்கள் உறவில் இணைந்திருக்கும் பொழுது கல்லால் அடிப்பது, கம்பால் அடிப்பது போன்ற செய்கையில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இத்தகைய பழிப்புக்கு உள்ளாகின்றனர்.
இத்தகைய கீழ்தரமான குற்றம் செய்தவர்கள் மறுபிறவி மனிதனாகவே மீண்டும் எடுத்தால் அவர்களின் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர்.
அதாவது ராகு என்கிற காலனுக்கும் கேது என்கிற பாம்பிற்கும் இடையில், இராசி கட்டத்தில் பிற 7 கோள்களும் சிக்கிக்கொள்ளும்.
கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கு இடையே மற்ற ஏழு கோள்களும் அடைபட்டு இருப்பதாகும்.
கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதக கட்டத்தில் பிற ஏழு கோள்களும் ராகு கேது என்கிற பாம்புகளுக்கிடையில் சிக்கிக் கொள்வதால், அந்த கோள்களால் கிடைக்கும் நன்மை அனைத்தும் நச்சு கொண்டு வீனாகும்.
இத்தகைய தோஷம் உடையவர்கள் திருமண தடையால் வயது மூப்படைந்து வாழ்வை வீனடிப்பர்.
5 ல் ராகு ஜாதகம் உடையவர்கள்
5 ல் ராகு இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்காது. ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
அந்த ஆண் குழந்தைகள் நோய் நொடி தாக்குதலினால் அல்லல் படுவார்கள்.
5ல் கேது ஜாதகம் உடையவர்கள்
ஆண் பெண் என இரு பாலிலும் குழந்தைகள் பிறக்கும். ஆனால் எல்லாம் நோஞ்சானாக இருக்கும்.
மேலும் அந்த குழந்தைகள் பெற்றோரை வெறுக்கும்.
12 கால சர்ப்ப தோஷம் வகைகள் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமைந்திருக்கும் வீடுகளை பொருத்து அமைகிறது.
ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க மற்ற கோள்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம்.
விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய ஜாதக அமைப்பு உடையவர்கள் பல இடையூறு, வாழ்வில் தொல்லைகள், துன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர்.
எனினும் திருமணம் நடந்தேருவதில் சில இடையூறுகள் உண்டாகும்.
2. சங்க சூட சர்ப்ப தோஷம்
ராகு 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் பேசுபவர்களாக வாழ்வார்கள்.
முன் கோபம் கொண்டவர்களாக இருப்பதால், வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பர். வாழ்க்கை முழுதும் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும்.
3. கடக சர்ப்ப தோஷம்
ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும்.
அரசால் தண்டிக்கப் படுவார்கள்.
10-ல் இருக்கும் ராகு இருட்டு தொடர்பான தொழிலைக் கொடுக்கும்.
புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் கெட்டால், சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார்.
அரசிற்கு எதிரானவர்களாக வாழ்வில் மன அமைதி இன்றி வாழ்வர்.
4. குளிகை சர்ப்ப தோஷம்
ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் வாழ் நாள் முழுதும் பாதிப்படைந்து இருக்கும்.
இழப்புகள், விபத்துகள் ஆகியவற்றில் சிக்கி மன அமைதி இளப்பர்.
பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.
5. வாசுகி சர்ப்ப தோஷம்
ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்தத் தோஷம் ஏற்படும்.
தொழிலில் பிரச்னை ஏற்படும். வயதில் இளையவர்களால் என்றும் தொல்லையும் துன்பமும் வரும்.
6. சங்கல்ப சர்ப்ப தோஷம்
ராகு 4-ல் கேது 10-ல் இருந்தால் வேலை வாய்ப்புகள் இருக்காது. வேலை கிடைத்து பனியில் இருந்தாலும் அது நிலைக்காது.
தொழில் செய்ய முயன்றால் அதில் நொடிப்பு தான் ஏற்படும்.
7. பத்ம சர்ப்ப தோஷம்
ராகு 5-ம் வீடு, கேது 11-ம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் செல்வம் இருக்காது.
அறிவியல் முறைகளில் முயன்றாலும் பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
நிலவும் கெட்டால் பேய் பிசாசு மற்றும் ஆவிகளின் தொலை ஏற்படும்.
நண்பர்களால் ஏமாற்றம் ஏற்படும்.
நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்.
8. மகா பத்ம சர்ப்ப தோஷம்
ராகு 6-ல் கேது 12-ல் இருந்தால் நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்..
வாழ்வு இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும்.
6-ம் இடத்து கோளை பொறுத்து நோய் நீங்குவதும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும்.
9. தக்ஷக சர்ப்ப தோஷம்
கேது லக்னத்தில் ராகு 7-ல் இருந்தால் முன் சிந்தனை அற்றவர்களாக இருப்பர்.
கிடைக்கும் செல்வம் முழுவதையும், மது, மாது ஆகியவற்றில் இழப்பார்.
திருமண வாழ்வில் சிக்கல்களால் மன அமைதி இன்றி வாழ்வர்.
10. கார் கோடக சர்ப்ப தோஷம்
ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார் கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். அதாவது தந்தை வழி சொத்துக்கள் கிடைக்காது.
உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பகையாளியாக இருப்பர்.
11. விஷ் தார சர்ப்ப தோஷம்
ராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்கைளால் துன்பம் உண்டாகும்.
குடும்பத்துடன் வாழமால் அடிக்கடி பயணம் செய்வார்.
வாழ்க்கையின் பிற்பகுதி, அதாவது 50 வயதை தாண்டியபின் வாழ்வு நன்றாக இருக்கும்.
12. சேஷ நாக சர்ப்ப தோஷம்
ராகு 12-ல், கேது 6-ல் இருந்தால் உடல் நோய் நொடிகளால் அல்லல் படும்.
வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை இருக்கும்.
சர்ப்ப தோஷம் உடையவர்கள், குல கடவுள் வழிபாடுகளை மேற்கொள்வது பாதிப்பில் இருந்து விடுபட வழி.
குறிஞ்சியின் இறைவனும், தமிழர்களின் குல கடவுளுமான முருகனின் 6 படை வீடுகளுக்கும் சென்று தமிழ் முறைப்படி வழிபாடுகள் செய்து வழிபட்டால் பாதிப்புகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
முருகனை வணங்கும் பொழுது தமிழ் தவிர்த்த பிற மொழிகளை காதில் வாங்காமல் வணங்கினால் சிறப்பிலும் சிறப்பாக அமையும்.