ADVERTISEMENT

புனர்பூ தோஷம் என்றால் என்ன?

புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் என்றால் என்ன?

புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி? புனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது?

புனர்பூ தோஷம் என்றால் என்ன?

புனர்பூ தோஷம் என்பது நிலவுக்கும், காரிக்கும் (சனி) ஜாதகத்தில் உள்ள தேவையற்ற வகையிலான தொடர்பு.

புனர்பூ தோஷம் என்பது, நிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் சேர்க்கை அல்லது அவை ஒன்றுடன் ஒன்று வைத்துள்ள தொடர்பு, பல வகையில் சாதகக்காரருக்கு திருமணம்  நடப்பதை தடுக்கும். இத்தகைய தொல்லை தரும் இந்த இரு கோள்களுக்கான தொடர்பையே நாம் புனர்பூ தோஷம் என்றழைக்கிறோம்.

இந்த புனர்பூ தோஷம் திருமண வாழ்வில் பல துன்பங்களை அல்லது தொல்லைகளை உண்டாக்கலாம்.

மேலும் இந்த புனர்பூ தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி தலைவலி, அச்ச உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவற்றை உணர்வர்.

நிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் ஞாயிறு உள்ளே நுழைந்தால் அல்லது அவை இரண்டையும் தன் பார்வையில் வைத்திருந்தால் புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.


புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி?

நிலவுடன் காரியும் (சனி) இணைந்து எங்கே இருந்தாலும புனர்பூ தோஷம் எனலாம்.

காரி (சனி) நிலவை ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்தால் புனர்பூ தோஷம்.

காரி (சனி) மட்டும் நிலவை தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையால் பார்ப்பது தோஷம் எனலாம்.

நிலவு நீசம் பெற்ற நிலையில் காரி (சனி) பார்ப்பது அல்லது காரி (சனி) நீசம் பெற்ற நிலையில் நிலவு பார்ப்பது பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.

குடும்ப இருப்பில் இவ்வாறு நீசம் பெற்ற நிலையில் ஒருவர் மற்றவரை பார்க்க அமையப் பெறுவது கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.

காரி (சனி) வீட்டில் நிலவு இருப்பது அல்லது நிலவு வீட்டில் காரி இருப்பதும் கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.

இந்த நிலை உள்ள காரி மற்றும் நிலவை, வியாழன் (குரு) பார்க்காமல் இருந்தால் மிக மிக கடுமையான புனர்பூ தோஷத்திற்கு சாதகக் காரர் ஆளாகின்றார்.


புனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது?


திருமணம் உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் திடீரெனவேறு யாரையாவது மணம் முடிப்பதை பார்த்திருக்கிறோம்.

உறுதி செய்யப்பட்ட திருமணத்தில் ஆண் அல்லது பெண் திடீரென விருப்பம் இல்லை என்று சொல்லி திருமணம் தடை படும்.

சில திருமணங்கள் காவல் நிலையம் வரை செல்லும்.

திருமணக்கள் பல, உறுதி செய்யப்பட்ட நாளில் நடைபெற இயலா நிலை ஏற்படும்.

திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் மரணிப்பது என ஏதாவது தடங்கல் வரும்.

இத்தகைய சிக்கல்கள் இந்த புனர்பூ தோஷத்தினால் ஏற்படுகிறது என்கிறது ஜோதிடம்.

ஆகவே இந்த தோஷம் ஆண் அல்லது பெண்ணிற்கு இருக்கிறதா என்பதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading