அலியாக சிலர் பிறப்பது எதனால்?
உயிர் இனங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் குறிகளுடன் பிறக்கையில் சிலர் மட்டும் இரண்டும் கலந்து பிறக்கிறார்கள்.
ஏன் சிலர் மட்டும் இப்படி அலியாக பிறக்கிறார்கள்.
இதற்கு சோதிடம், லக்கினத்தில் அமையும் கோள்களே இப்படி அலியாக பிறக்க வைக்கிறது என விளக்கம் சொல்கிறது.
லக்னத்தில் நிலவு இருக்க, ஞாயிறு, அறிவன் (புதன்) மற்றும் காரி (சனி) ஆகிய
மூவரும் இரட்டை ராசியில் அமைந்து, இம்மூவரின் பாகைகளையும் கூட்டக் கிடைக்கும் இராசியை செவ்வாய் பார்க்க அமைந்தால் ஒற்றை பிறப்புறுப்பு அற்றவராக, அதாவது ஆண் அல்லது பெண் என்று இல்லாதவராக, அதாவது அலியாக
விளங்குவர்.
வெள்ளிக்கும் (சுக்கிர), காரிக்கும் (சனி) ஏழில் செவ்வாயோ, அல்லது வெள்ளிக்கும் (சுக்கிர), செவ்வாய்க்கும் ஏழில் காரி(சனி)யோ இருந்தால் ஆண் அல்லது பெண் என்றில்லாது நடுவில் அலியாக இருப்பர்.
ஏழாமிடத்தில் ராகு, தூமகேது நிற்பது ஆண் அல்லது பெண் குறிகளுடன் பிறந்தாலும் மலட்டு தன்மையை குறிக்கும். வீரியம் இருக்காது.
ஏழுக்குடையவனும், வெள்ளியும் (சுக்கிர) சேர்ந்து ஆறில் இருந்தால் ஜாதகனோ அல்லது துணைவியோ அலியாக அமையும்.
லக்னத்தில் நீசம் பெற்ற கோள், காரி (சனி) மற்றும் அறிவன் (புதன்) இருந்தால் அலியாக இருப்பர்.
லக்னாதிபதி, ஆறாமதிபதி, காரி (சனி) ஆகியோர் கேந்திர கோணத்தில்
இருந்தால் அலியாவர்.
களத்திர அதிபன் குரூரக் கோள்களுடன் ஒன்பதில் இருப்பது அலி தன்மையைக் குறிக்கும்.
அறிவனும், ஆறாமதிபதியும் சேர்ந்து லக்னத்திலோ, ஆறாமிடத்திலோ இருப்பது அலி தன்மையைக் குறிக்கும்.
அறிவனும், காரியும், சேர்ந்து சுவாம்சத்தில் இருந்து கேதுவால் பார்க்கப் பட்டாலோ அல்லது கேதுவுடன் சேர்ந்து சுவாம்சத்தில் இருந்தாலோ வீர்யமற்ற தன்மையை குறிக்கும்.
லக்னத்திற்க்கு ஐந்தில் காரி (சனி) நிற்க, எட்டில் செவ்வாய் நிற்க, ஏழில் வியாழன் இருக்க (குரு) அவருடன் ஐந்தாமிடத்து அதிபதியும், ஞாயிறும் சேர மதியுடன் பாம்பு சேர்ந்து காரிக்கு ஏழில் நிற்க ஜாதகன் குழந்தை பேறற்றவன்.
குறிப்பாக அறிவன் (புதன்), காரி (சனி), கேது இவர்களின் சேர்க்கை பார்வை சாரம், மூன்று ஐந்து ஒன்பது பண்ணிரெண்டாம் பாவ தொடர்பு பெறும் போது கவனித்துப் பார்த்து கையாள வேண்டும்.
ஐந்தாமிடம் பிள்ளிப் பேறுக்கான இடம் என்றாலும் அதன் அடிப்படை பண்ணிரெண்டாம் பாவத்தில் இருக்கிறது.
இதில் மூன்றாம் பாவத்தில் தான் ஒரு மனிதனின் எண்ணமும் எழுச்சியும் உணர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஒரு ஆணின் வீரத்தையும் பெண்ணின் நளினத்தையும் கானும் இடம் மூன்றாம் இடமாகிய மிதுனம்.
1. லக்னத்தில் ஞாயிறு - நிலவு என்றால் ஜாதகருக்கு அதிக குழந்தைகள் உண்டு. பெற்றோருக்கு துன்பமும் மன வேதனையும் உண்டு
2. லக்னத்தில் ஞாயிறு - செவ்வாய் என்றால் பொல்லாதவர், எப்போதும் அலைச்சலுடையவர், கெட்ட புத்தியுடையவர், தந்தை துக்கமுடையவர்.
3. லக்னத்தில் ஞாயிறு – அறிவன் என்றால் தீயவர், பாவ புத்தியுடையவர், ஒழுக்கமில்லாதவர், உற்றார் உறவினரால் கைவிடப்பட்டவர், உடல் நலம் குன்றியவர்ன். வண்டி வாங்க துப்பில்லாதவர்.
4. லக்னத்தில் ஞாயிறு - வியாழன் என்றால் கோபமுடையவர், மந்த புத்தியுடையவர், உடல் நலமில்லாதவர், முட்டாள், செய் நன்றி மறப்பவர், திருடர், வெறுப்புடையவர்.
5. .லக்னத்தில் ஞாயிறு – வெள்ளி என்றால் பண்டிதர்களை வெறுப்பவர், குறைவான குழந்தைகளையுடையவர், கோபமுள்ளவர், கொடூரமானவர், ஆசையில்லாதவர், , நோயாளி.
6. லக்னத்தில் ஞாயிறு - காரி என்றால் முட்டாள், நோயாளி, சுற்றத்தால் கைவிடப்பட்டவர், கெட்ட குணமுள்ளவர்.
7. லக்னத்தில் நிலவு - செவ்வாய் என்றால் தீய குணமுடையவர், செல்வமில்லாதவர், நற்குணமற்றவர்.
8. லக்னத்தில் நிலவு - அறிவன் என்றால் பிற பெண்கள் மீது நாட்டமுடையவர்.
9. லக்னத்தில் நிலவு - காரி என்றால் தீயவழிகளில் செல்வம் சேர்ப்பவர், அற்ப குணமுடையவர், மற்றவர் பணத்திற்கு ஆசைப்படுபவர்.
10. லக்னத்தில் செவ்வாய் - அறிவன் என்றால் பிறரிடம் ஏமாறுபவர்,
11. லக்னத்தில் செவ்வாய் - வியாழன் என்றால் கடின குணம் உடையவர். குறைவான குழந்தைகளுடையவர். தீயன செய்வதில் ஆசையுடையவர்.
12 . லக்னத்தில் செவ்வாய் - வெள்ளி என்றால் ஏமாறுபவர், செய் நன்றி மறந்தவர்.
13. லக்னத்தில் செவ்வாய் - காரி என்றால் கொடுமை செய்வதிலும், கடுமையாக பேசுவதிலும் வல்லவர்.
14 . லக்னத்தில் அறிவன் - காரி என்றால் தீயவர், ஒழுக்கமற்ற மனைவியோடு வாழ்பவர், பணமில்லாதவர்.
15. லக்னத்தில் வியாளன் - வெள்ளி என்றால் அதிக பணத்தாசை பிடித்தவர் ,நீதியறிந்தவர்.
16. லக்னத்தில் வெள்ளி - காரி என்றால் புத்தியில்லாதவர், செய் நன்றி மறந்தவர், பிறன் மனை நாட்டமுடையவர். பெண் பித்து பிடித்து அலைபவர்.