ADVERTISEMENT

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்

யோகம் என்றால் என்ன?  யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள் யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்

சாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்

பலரும் யோகம் என்றால் ஏதோ நல்லூழ் என்று பொருள் எடுத்துக்கொள்கிறார்கள்.

"அவனுக்கு என்ன... யோகக்காரன்" என்று சொல்வார்கள். இது அவன் நல்லூழ் கொண்டவன் (அதிர்ச்சிட்டசாலி) என்ற பொருளுடன் பயன்படுகிறது.

ஜாதகத்தில் கோள்களின் நிலை வைத்து அவ்வப்போது கணிக்கப்படும் யோகம் என்பது நல்லூழ் என பொருள்படுகிறது. அது முற்றிலும் வேறு.

இந்த யோகத்திற்கும், நாள் பஞ்சாங்கத்தில் - ஜாதகத்தில் குறிப்பிடப்படும் யோகத்திற்கும் தொடர்பில்லை.

பஞ்சாங்கத்தில் - ஜாதகத்தில் குறிப்பிடப்படும் யோகம் என்பது நலூழ் (அதிர்ஷ்டம்) என்ற சொல்லிற்கு மாற்று அல்ல.


ஜாதகத்தில் - பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் யோகத்திற்கான விளக்கம் தான் நாம் இங்கே காண்கிறோம்.


யோகம் என்பதை எளிய சொல்லில் சொல்ல வேண்டுமானால், உயிரையும் கடவுளையும் ஒன்றினைத்து வாழ்வது என்பதாகும்.

பதஞ்சலி என்றழைக்கப்பட்ட முனிவர் ஒருவர் எழுதிய நூல்தான் யோகம். அதுவே இந்த யோகத்திற்கான அனைத்து விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.

யோகம் என்ற சோதிட சொல்லிற்கு பொருள் வேண்டுமானால், முதலில் சோதிடத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்.

நிலவு 27 நாட்களில் 27 விண்மீன்களை புவியின் கோணத்தில் இருந்து கணக்கிட்டால் கடந்து செல்கிறது என்பதை நாம் அறிவோம்.


ஒரு திங்கள் என்றால் 30 நாட்கள் என கணக்கு வருகிறதே, பின் எப்படி 27 நாட்கள்?


புவிக்கு நேர் கோட்டில் ஒரு விண்மீன் இருக்கிறது என்று வைத்து நிலவின் நிலையை கணக்கிட்டால், நிலவு புவியை சுற்றி அதே விண்மீன் நேர் கொட்டிற்கு வர வெறும் 27 நாட்கள் தான் எடுத்துக் கொள்கிறது.

ஆனால், புது நிலவில் இருந்து மீண்டும் புது நிலவு என்று நாட்களை கணக்கிட்டால் அது 30 நாடிகள் உடையதாக இருக்கிறது. அதை நாம் திங்கள் என்று கணக்கிடுகிறோம்.

சோதிடத்தில், நமக்கு விண்மீன்களின் நிலை, நிலவின் நிலை, கோள்களின் நிலை என்பது மட்டுமே கணக்கு.


யோகம் என்றால் என்ன?


ஒரு முழு சுற்றளவு 360 டிகிரி  என்றால், அதை 27 ஆல் வகுத்தால் 13 டிகிரி 20 நொடி என்ற அளவு கிடைக்கிறது.

ஆக, 13 டிகிரி  20 நொடி  என்பதற்கு ஒரு யோகம் என கணக்கிட்டு 27 யோகங்கள் உள்ளன.

ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவுவதாக ஆரூடம் சொல்பவர்கள் கணிக்கின்றனர்.


யோகம் வகைகள் மற்றும் யோகம் பொருள்
(யோகத்தின் சமற்கிருத பெயர்களும் அதற்கான தமிழ் பொருளும்)

1. விஷ்கம்பம் - மனநடுக்கம்
2. ப்ரீதி - அன்பு, பாசம்
3. ஆயுஷ்மான் - வாழ்நாள்
4. சவுபாக்கியம் - புண்ணியம்
5. சோபனம் - நலம்
6. அதிகண்டம் - பெரிய இடரல்கள்
7. சுகர்மம் - அறம்
8. திருதி - துணை
9. சூலம் - சில திசைப் பயண இடையூறுகள்
10. கண்டம் - இடர்பாடுகள்
11. விருத்தி - ஆக்கம்
12. துருவம் - நிலையான தன்மை பெறுதல்
13. வியாகாதம் - பாம்பு முதலானவற்றால் அச்சம்
14. அரிசனம் - மகிழ்ச்சி
15. வச்சிரம் - ஆயுதங்களால் தொல்லை
16. சித்தி - வல்லமை
17. வியதீபாதம் - கொலை
18. வரியான் - காயம்
19. பரிகம் - தாழ்வு
20. சிவம் - காட்சி
21. சித்தம் - திறன்
22. சாத்தியம் - புகழ்
23. சுபம் - காவல்
24. சுப்பிரம் - தெளிவு
25. பிராம்மம் - மாயை
26. மாஹேத்திரம் - படைப்புகளை பற்றிய அறிவு
27. வைத்திருதி - பேய்களால் தொல்லை.


இந்த 27 யோகங்களின் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்


1. விஷ்கம்பம் - மனநடுக்கம் (விஷ் யோகம்):  இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பகைவர்களை எளிதில் வெற்றி கொள்வார்கள். பிறரை குறித்து உடனடியாக அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே உணரும் தன்மை இவர்களுக்கு இருக்கும்.

மாந்திரீகம் தொடர்பானவற்றில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான விடுதலை விரும்பிகள்.  உற்றார், உரவைணர், சுற்றங்களை மதிப்பார்கள்.

2. ப்ரீதி - அன்பு, பாசம் (ப்ரீ யோகம்) : இது சுபமான யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல சிந்தனை கொண்டவராகவும், நல்ல செயல்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகியோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல் பாட்டுத் திறமையும் இவர்களிடத்தே இருக்கும்.

3. ஆயுஷ்மான் - வாழ்நாள் (ஆயு யோகம்): இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி யோகிகள் நீடுழி பல்லாண்டு வாழ்க (ஆயுஷ்மான் பவ) என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு.

பிறரை வாழ்த்த்வே இந்த யோகத்தின் பெயர் பயன்படுகிறது என்றால், அதற்கு ஏற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்வான வாழ்கை வாழ்வார்கள்.

4. சவுபாக்கியம் - புண்ணியம் (செள யோகம்): இது சுபமான யோகம். செள என்ற வடமொழி சொல்லிற்கு நூறு என்று பொருள். பாக்கியம் என்றால் கொடுப்பினை என்று பொருள். செளபாக்யம் என்றால் 100 கொடுப்பினைகள் என்றாகிறது. பெயரே 100 கொடுப்பினை எனும் போது இவர்களின் வாழ்வு நன்றாகவே இருக்கும்.

இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்கு உடையவர்களாகவும், உறுதியான மனம் படைத்தவராகவும், செயல் திறன் மிக்கவர்களாகவும், நல்ல கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், ஈவு இரக்கம் உடைய கொடையாளராகவும் இருப்பார்கள்.

5. சோபனம் - நலம் (சோ யோகம்): இது சுப யோகம். சோபனம் என்று பெயர் வைக்கிரார்களே! சோபனம் என்றால் மகிழ்சி என்று பொருள்.

இதன் பொருள் இனிமையான மகிழ்வு என்பதாகும். இதில் பிறந்தவர்கள் மகிழ்வான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள். செய்யும் செயலில் திறமையுடன் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான்.

6. அதிகண்டம் - பெரிய இடரல்கள் (அதி யோகம்) : அதி என்றால் பெரிய என பொருள் படுகிறது. கண்டம் என்றால் துன்ப நிலை என்று பொருள். இந்த யோகத்தின் பெயரே பெரிய துன்பம் என்று பயமுறுத்துகிறது.

துன்பம், தொல்லை, துயரம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், இடரல்களையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள்.

யாம் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மை உடையவர்களாக இருப்பதுண்டு.

7. சுகர்மம் - அறம் (சுக யோகம்) : இது சிறப்பான யோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள்.

பற்று, பாசம், ஈகை உடையவர்கள். கடவுள் நம்பிக்கை, கடவுளுக்கான செயல்களை செய்வது, ஆலயங்களுக்கு பயனிப்பது போன்றவற்றை மேற்கொள்வதில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார்கள்.

8. திருதி - துணை (திரு யோகம்) : இது அசுப யோகம். இதில் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள்.

தான் ஏற்றுக்கொண்ட செயலை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். மன திடன் மிக்கவர்கள்.

9. சூலம் - சில திசைப் பயண இடையூறுகள் (சூல யோகம்) : இது அசுப யோகம். சூலம் என்பதை வேண்டாதது என பொருள் கொள்ளலாம். மேற்கில் சூலம் என்றால், மேற்கில் செல்ல வேண்டாம் என்று பொருள் படுகிறது அல்லவா. எந்த திசையில் சூலமோ அது ஆகாதது.

இந்த யோகம் உடையவர்கள் முன்கோபக்காரர்களாகவும், முரட்டு குணம் உடையவர்களாகவும், எதியும் கூர்ந்து அராயாமல் எடுந்தறிந்து கையாள்பவர்களாகவும், சோம்பேரிகளாகவும், எடுத்தெரிந்து பேசும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பர்.

ஆணவத்தினால் எவரையும் மதிக்க மாட் டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண்வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு.

10. கண்டம் - இடர்பாடுகள் (கண் யோகம்): இது அசுப யோகம். கண்டம் என்ற சொல்லே, இடர்பாடு என்ற பொருள் படுகிறது. இடர்பாட்டு யோகம் என்றால் விளக்கி சொல்லத் தேவை இல்லை.

இந்த யோகம் கொண்டவர்கள் அடிக்கடி இடர்பாடுகளையும், துன்பங்களையும், துயரங்களையும், உடல் நோக்காடுகளையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல மணம் இருக்காது. சொல்லும் செயலும் சிறப்பாக இருக்காது.

11. விருத்தி - ஆக்கம் (விரு யோகம்): இது சுப யோகம். இதில் பிறந்தவர்கள் ஆக்கம் உடையவர்களாக இருப்பர். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

கடவுள் நம்பிக்கையும், நல்ல பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள்.

12. துருவம் - நிலையான தன்மை பெறுதல் (துரு யோகம்): இது அசுப யோகம், இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்கள். யாருடனும் அவ்வளவாக பழக மாட்டார்கள், தன்னலம் சார்ந்து எதையும் சிந்திப்பவர்கள்.

எப்படி தாமரை இலை தண்ணிரில் மிதந்தாலும் தன்னிடம் தன் இலையில் தண்ணிர் ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறதோ, அதே போல, பிறரிடம் தயங்காமல் பலன் பெற்றாலும், நன்றிக் கடன் என்பது இல்லாமல் இருப்பார்கள்.

தீய, ஏமாற்றும் எண்ணம் உடையவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது பழி தீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

13. வியாகாதம் - பாம்பு முதலானவற்றால் அச்சம் (வ்யா யோகம்): இது அசுப யோகம்.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் முன்கோபமும், முரட்டுத்தனமும் உடையவர்களாக இருப்பர்.

இவர்கள் உறவுகளோடோ அல்லது நண்பர்களோடோ ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள்.

நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள்.

14. அரிசனம் - மகிழ்ச்சி (ஹர்ஷணம் - ஹர் யோகம்): இது சுப யோகம். சொல்லிய சொல் தவறாதவர்கள். புகழுடன் வாழ பிறந்தவர்கள்.

இனிமையாகவும் மென்மையாகவும் அணைவரிடமும் பழகக் கூடியவர்கள். பின் நாட்களில் நடக்கும் என்பதை ம்ன்கூட்டியே கணிக்கும் திறன் இவர்களுக்கு இருப்பதுண்டு. மகிழ்வான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள்.

15. வச்சிரம் - ஆயுதங்களால் தொல்லை (வஜ் யோகம்): இது சுப யோகம்.

இதில் பிறந்தவர்கள் மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், மன திடணும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும்.

16. சித்தி - வல்லமை (சித் யோகம்): இது சுப யோகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையும் தீர அராயும் குணம் உடையவர்கள். தியானம், யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள்.

திருப்பயணம் மேற் கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். இமயம் வரை பயணம் மேற்கொள்வார்கள். கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள். நல்ல குணம், உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

17. வியதீபாதம் - கொலை (விய யோகம்) : இது அசுப யோகம். இதில் பிறந்தவர்கள் தன்னலம் மட்டுமே பேனுபவர்களாக இருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும், நொடிப்புகளையும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும்.

வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர முடிவால் தொல்லைகளை சந்திப்பார்கள்.

18. வரியான் - காயம் (வரீயான் -வரீ யோகம்): இது சுப யோகம். இதில் பிறந்தவர்கள் எதிலும் தலைமை தாங்கும் தகுதி உடையவர்களாக இருப்பர்.

நல்ல மன திடனும், எடுத்த செயலை வெற்றியுடன் முடிக்கும் திறனும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். இவர்கள் செய்யும் செயலால் இவர்களுக்கு புகழ் பெறக் கூடிய வகையில் இருக்கும்.

சிறு வயதிலேயே வெளி நாடுகளுக்கு தொழில் வாய்ப்பாக உயர் பதவியில் இருந்து சென்று வருவர். வெளி நாட்டவர்கள் இவர்களின் அறிவு ஆற்றலை கண்டு வியக்கம் வன்னம் இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

இந்த நிலையை இவர்கள் அடைய வேண்டும் என்றால், பெற்றோர் இறை வழிபாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

19. பரிகம் - தாழ்வு (பரி யோகம்): இது சுப யோகம். இதில் பிறந்தவர்கள் தனித்தன்மை வாய்ந்து விளங்குவர். இவர்களின் பாதை தனியாக இருக்கும். இவர்களின் கொள்கைகளும், குறிக்கோளும் மிக உயர்ந்தவையாக இருக்கும்.

இவர்களுக்கு என்று பாதை அமைத்து வாழ்வார்கள், அதிலிருந்து சற்றும் விலக மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். சொல்லிய சொல் செயலாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதில் தவறு ஏற்படுகிறது என்றால் இவர்களால் அதை தாங்கிக் கொள்ள இயலாது.

20. சிவம் - காட்சி (சிவ யோகம்): இது சுப யோகம். இந்த யோகம் கொண்டு பிறந்தவர்கள் கடவுள் வழிபாடுகளின் தீவிரம் உடையவர்கள்.

தியானம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களை சந்திப்பதில் கூடுதல் ஆர்வமுடையவர்கள்.

21. சித்தம் - திறன் (சித் யோகம்): இது சுப யோகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மன திடன் மிக்கவர்களாகவும், எஉத்த செயலை முடிப்பதில் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அச்சம் என்பது மடமை என்ற என்னம் கொண்டவர்கள் இவர்கள்.

உறுதியான சிந்தனை உடையவர்கள். எடுத்த முடிவுகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இலக்கணம், வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள் இவற்றில் நாட்டம் கொண்டிருப்பர்.

22. சாத்தியம் - புகழ் வாய்ப்பு (சாத் யோகம்): இது சுப யோகம். யோகத்தின் பெயரே புகழுடன் வாய்ப்பு என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்வார்கள்.

பல பெண்களை வசியம் செய்து கொள்ளும் வாய்ப்பும் கூட இவர்களுக்கு உண்டு.

23. சுபம் - காவல் (சுப யோகம்): பெயரே சுபம் என்றுள்ளதால், மறு பேச்சு இல்லாமல் இது சுபமான யோகம் தான்.

இனிமையான மென்மையான குணம் கொண்டவர்கள் இவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு தொண்டாற்றுவதில் விருப்பம் உடையவர்கள். திருப்பணிகள், பொது தொண்டு செய்வதிலும் இவர்களுக்கு நாட்டமிருக்கும்.

24. சுப்பிரம் - தெளிவு (சுப் யோகம்): இது சுப யோகம். நல்ல மன சிந்தனை என்பது தானே தெளிவு, அதற்கு ஏற்ப நல்ல தெளிவான சிந்தனை ஓட்டம் கொண்டவர்களாக விளங்குவர்.

நல்ல சிந்தனை இவர்களை கடவுள் நம்பிக்கை, கடவுள் வழிபாடு ஆகியவற்றில் ஈடுபடுத்தும்.

எல்லாம் அவன் செயல் என கடவுள் மீது பாரத்தை வைப்பதால், மனம் என்றும் அலை பாயாது.

தனக்கு நடக்கும் தீயவையும், தான் செய்யும் வெற்றி செயலும் அவன் தந்ததே என கடவுள் நம்பிக்கையில் ஆழமாக ஊரி வாழ்வார்கள்.

25. பிராம்மம் - மாயை (பிராம்மியம் - பிரா யோகம்): இது சுப யோகம். அறிவை முழுமையாக பயன்படுத்து வாழ்வார்கள். எதை செய்வதற்கு முன்னும், ஆழ சிந்தித்து, அதில் ஈடுபடுவார்கள்.

நல்லவர்கள் வல்லவர்களுடன் மட்டுமே பழகுவார்கள், நல்ல சிந்தனை உடையவர்கள்.

26. மாஹேத்திரம் - படைப்புகளை பற்றிய அறிவு (ஐந்திரம் - ஐந் யோகம்): இது சுப யோகம். இதை சிலர் ஐந்திரம் என்றும், சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் செய்யும் செயலில் வெற்றி காண்பவர்கள். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் நாட்கள் குறித்த பொருள் உரைப்பவர்கள். அருள்வாக்கு, ஆருடம் போன்றவற்றிலும் இவர்கள் சிறந்து விளங்குவர்.

27. வைத்திருதி - பேய்களால் தொல்லை (வை யோகம்): இது அசுப யோகம். இதில் பிறந்தவர்கள் தன்னலம் மட்டுமே குறிக்கோளாக வாழ்பவர்கள். தற்பெருமையே வாழ்க்கை என்ற சிந்தனையில் செயல்படுவார்கள்.

கலகப்பாக பழகினாலும், தனக்கு அதனால் என்ன கிடைக்கும் என்று ஆழ் மனதில் தீய சிந்தனையுடனேயே இருப்பார்கள். நல்லவர்கள் போல் நடித்து அதனால் ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் அறிவுடனும் இவர்களின் மனம் எப்பொழுதும் இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள். யாராவது நட்பாக இருப்பது அறிந்தால், அதில் ஏதாவது குழப்பம் விளைவிக்க முயல்வார்கள்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading