பஞ்ச பட்சி சாத்திரம்.
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
"மணி, மந்திரம், மருந்து" இந்த மூன்றில் உண்மையில் மணியாக இருப்பது ஐம்பறவை இலக்கணம் (பஞபட்சி சாஸ்த்திரம்). ஏனெனில், எல்லாவற்றிற்கும் தீர்வு அதில் மட்டுமே உண்டு. ஒரு நிகழ்வின் இருவேறு தாக்கமே, அடுத்தடுத்து இருக்கும் மந்திரமும், மருந்தும். ஐம்பறவை இலக்கணம் தான் உயர்ந்த இலக்கணம் என்று சொன்னால், கண்டிப்பாக அடுத்தடுத்து பலர் இதில் முயற்சி செய்திருக்கவேண்டுமே, ஏன்? முயற்சி செய்யவில்லை?.
ஒரு தனி மனித வாழ்க்கையில் இத்தனை நிகழ்வுகள் தான் நடக்கும் என்பதையும் கணித்துள்ளனர் இந்த ஐம்பறவை இலக்கணத்தில். இந்த ஐம்பறவை இலக்கணத்தில் சுமார் 8640 நிகழ்வுகள் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளன. அதை தாண்டி புதிதாக ஒன்றும் வாழ்வில் நடக்காது என்றே சொல்லலாம்.
இந்த 8640 என்பதற்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு நிகழ்வு என்பது ஒரு பொழுதில் ஏற்படும் 5 நிகழ்வுகள் எனலாம். தோராயமாக பார்த்தால் ஒரு நாளைக்கு 10 பொழுதுகள். அதை பெருக்கும் போது 50 நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு. இன்னும் உங்கள் புரிதலுக்காக 8640 நிகழ்வுகளை எப்படி வந்தது என பார்க்கலாம்.
ஒரு பொழுது என்பது 6 நாழிகை. அந்த 6 நாழிகையை 1 நாழிகைக்கான நிமிடத்துடன் பெருக்கும் போது 6 நாழிகை க்ஷ் 24 நிமிடம் = 144 நிமிடம் வரும்.
இந்த 144 என்பதை விநாடி ஆக்க 144 நிமிடம் க்ஷ் 60 விநாடி = 8640 விநாடி இங்குள்ள 8640 தான் ஒரு மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகள். அடிப்படை நிகழ்வுகள் என்பது ஒரு மனிதனின் ஒட்டு மொத்த மாற்றம் ஏற்படுத்திய நிகழ்வுகள் எனலாம்.
பிறந்தது முதல் ஒருவர் இறக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான நாளாக அமைய வாய்ப்பில்லை.
இந்த படிவத்தில் மூலம் தங்களின் ஐம்பறவை எது என கண்டறியலாம். அதை வைத்துக்கொண்டு நாள் பலன் பார்த்தால், அந்தத
நாட்கள் எப்படி அமையும் என தெரிந்து கொள்ளலாம். அதை வைத்து திட்டம் போடலாம்.