ADVERTISEMENT

Wealth Astrology for Makaram - Capricorn :


Rahu - Kethu peyaRchi Gochara or transit results for Makaram - Capricorn Rasi

Current Date&Time : 19-03-2024 09:00:20 IST (GMT +05.30 Hrs)

Current Transit Chart

Sun Mercury Rahu Asc
Jupiter
Moon
Venus Mars Saturn RASI
Kethu

Rahu transiting house: 3

விரக்தியான எண்ணங்கள்சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம்.

எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார்.

ராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.

புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.

குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இனி எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி, சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

தாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கனவாகவே இருந்த சொந்த வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும்.

Rahu aspects house 9. Result of this aspect is


Kethu transiting house: 9

நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்

மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.

குடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். எனினும், கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

Kethu aspects house 3. Result of this aspect is

Kethu in malefic position. Kethu transiting Vedha position to good position 6. The bad results are obstructed to some extent by Moon




Rahu and Kethu, as per astrology is a single virtual planet with one life but with two body and at the same time revolve around in opposite direction.

Other than in Indian astrology and horoscope prediction, no other zodiac system has this Rahu Kethu.

They stay almost 18 months in every rasi. While this Rahu Kethu do not have a power on its own, it takes up the power of the Lord planet of the Rasi in which it transit and gives palan accordingly.

They are considered as the one that rules parenthood.

Buying material and gathering house hold depends on the position of this Rahu and Kethu.

ADVERTISEMENT

Shopping

  

Sarvashtaka Varga
Chart Calculator


Jaimini Astrology
Karaka Calculator


Upagraha Calculation
Kulikan, Mandi, Dhooma Calculator


Pancha Patchi Sastram
Agathiyar AruLiya


Find Jathaga Yogam
ஜாதக யோகங்கள் - தமிழ்


Chinese Gender Predictor
Guess Male or Female


Mayan Gender Predictor
Mayan way of finding Gender


Shettles Method
Gender Predictor


Chandra Yogam Calculator
Find Anba, Sunaba, Gajakesari yogams


Surya Yogam Calculator
Find Baskara, Putha Adithya yogam


Panch Mahapurush Yogam Calculator
Find Malavya, Amoka yogam etc.,


Rudraksha for Rashi
Which Rudraksha best for me?


Ratna / Ratan for Rashi
Which gemstone best for me?


Learn Astrology