Current Date&Time : 14-01-2025 18:26:54 IST (GMT +05.30 Hrs)
Rahu | Jupiter(R) | ||
Venus Saturn | RASI | Asc Moon Mars(R) | |
Sun | |||
Mercury | Kethu |
முன் கோபத்தை குறைப்பது
முன் கோபத்தை குறைப்பது எல்லா வகையிலும் நல்லது. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டினில் சீரமைக்கும் வேலைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பப் பெரியோர்களின் ஆசியும் கிட்டும். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித சஞ்சலம் அகலும். நான்காம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் நல்ல செயல்அறிவினை வழங்குவார்.
பலவிதமான விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். நான்காம் இடத்துக் கேது துஷ்டர்களின் சேர்க்கையைத் தருவார். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
எதிர்பாராத நேரத்தில் தோன்றும் பிரச்னைகளை சமாளிக்கும் அறிவு திறன் உங்களிடம் இருக்கும். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய அனுபவங்களைப் பெறுவதன் மூலம் வாழ்வின் அடுத்தபடிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.
புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். இந்த ராகு சுயமாகச் சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.
குழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைபட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய நண்பர் களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். 10-ல் ராகு வருவதால் ஒரே நேரத்தில் பல வேலைகள் இருக்கும்.
Rahu aspects house 4. Result of this aspect is
Rahu in malefic position.
காரியங்களைச் சாதிப்பீர்கள்
ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.
வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்டத் தொடங்குவது நல்லது.
Kethu aspects house 10. Result of this aspect is
Kethu in malefic position.
மாளவியா யோகம் இருந்தால், ஒழுக்கம் சற்று பாதிப்படையலாம்
ராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்
ரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்
நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!!
கிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன?
சனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்
தாய் தந்தை உயிரை பறிக்குமா பிறந்த குழந்தையின் சாதக அமைப்பு?