ADVERTISEMENT

Wealth Astrology for Simmam - Leo :


Rahu - Kethu peyaRchi Gochara or transit results for Simmam - Leo Rasi

Current Date&Time : 14-12-2024 18:59:37 IST (GMT +05.30 Hrs)

Current Transit Chart

Rahu Moon Jupiter(R) Asc
Saturn RASIMars(R)
Venus
Sun Mercury(R) Kethu

Rahu transiting house: 8

செலவுகள் அதிகமாகும்

விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும்.இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

குடும்ப பிரச்சனைகளை வெளியில் யாரிடத்திலும் சொல்லாமல் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள், உடன்பிறப்புகளால் பிரச்னைகள் தோன்றலாம். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும். எட்டாம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.

பழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழல் வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள். விலையுள்ள பொருட்களை வாங்குவதில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் பல பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.

ஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகு, இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும்.

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு என்றாலும் மனைவியுடன் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் பெரிதாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருவாய் அதிகரித்தாலும் சேமிக்க முடியாது கையிருப்பு கரையும்.

திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக் காது. பிள்ளை களின் வருங்காலத்துக்குச் சேமிப்பீர்கள். அவர்கள் உயர்கல்வித் தேர்வுகளில் வெற்றிபெற்று உங்களைப் பெருமைபடுத்துவார்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவுக்கு நேரம் ஒத்துழைக்கும்.

ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியடையும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி, பரபரப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

தந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால், எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துகொள்ளுங்கள்.

Rahu aspects house 2. Result of this aspect is

Rahu in malefic position.


Kethu transiting house: 2

சேமிப்புகள் கரையும்

சாதுரியமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால், சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.

பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்..

Kethu aspects house 8. Result of this aspect is

Kethu in malefic position.




Rahu and Kethu, as per astrology is a single virtual planet with one life but with two body and at the same time revolve around in opposite direction.

Other than in Indian astrology and horoscope prediction, no other zodiac system has this Rahu Kethu.

They stay almost 18 months in every rasi. While this Rahu Kethu do not have a power on its own, it takes up the power of the Lord planet of the Rasi in which it transit and gives palan accordingly.

They are considered as the one that rules parenthood.

Buying material and gathering house hold depends on the position of this Rahu and Kethu.

ADVERTISEMENT

Shopping

  

Sarvashtaka Varga
Chart Calculator


Jaimini Astrology
Karaka Calculator


Upagraha Calculation
Kulikan, Mandi, Dhooma Calculator


Pancha Patchi Sastram
Agathiyar AruLiya


Find Jathaga Yogam
ஜாதக யோகங்கள் - தமிழ்


Chinese Gender Predictor
Guess Male or Female


Mayan Gender Predictor
Mayan way of finding Gender


Shettles Method
Gender Predictor


Chandra Yogam Calculator
Find Anba, Sunaba, Gajakesari yogams


Surya Yogam Calculator
Find Baskara, Putha Adithya yogam


Panch Mahapurush Yogam Calculator
Find Malavya, Amoka yogam etc.,


Rudraksha for Rashi
Which Rudraksha best for me?


Ratna / Ratan for Rashi
Which gemstone best for me?


Learn Astrology