Current Date&Time : 22-04-2025 02:49:29 IST (GMT +05.30 Hrs)
Mercury Venus Saturn Rahu | Sun | Jupiter | |
Asc | RASI | Mars | |
Moon | |||
Kethu |
கணவன் மனைவிடையே நெருக்கம்
பல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்க பெற்று மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும்.
ராகுவின் சஞ்சார நிலை தேவையற்ற நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். அடுத்தவர்களின் சுபாவம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னோர்களின் சொத்துகளில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோம்பல்தன்மைைய முற்றிலுமாகத் துறந்து சுறுசுறுப்பாக உழைத்தால் மட்டுமே இந்த சோதனைக்குரிய காலத்தில் முன்னேற முடியும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
Rahu aspects house 1. Result of this aspect is
Rahu in malefic position.
மதிப்பு, மரியாதை கூடும்
இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமர்வதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேச வைப்பார்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்துவந்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்துபோகும்.
ராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும்..
Kethu aspects house 7. Result of this aspect is
Kethu in malefic position.