உழைத்து ஈட்டிய செல்வத்தை சேர்த்து வைக்கவும், தலைமை படுக்கை அறையை அமைக்கவும் சிறந்த மூலை குபேர மூலை என்றழைக்கப்படும் தென் மேற்கு மூலை பகுதியாகும்.
சிலர் கடுமையாக உழைப்பார்கள். பெரும் செல்வம் ஈட்டுவார்கள். ஆனால் அவர்களிடம் அது தங்காது. எந்த கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாவிட்டாலும் செல்வம் தானாக கறைந்து போகும்.
எதனால் இத்தகைய நிலை வருகிறது?
குடியிருக்கும் வீட்டில் ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு என்னதான் செய்வது என்றால்? நம் வீட்டில் ஒருசில செயல்களை அல்லது சின்ன சின்ன மாற்றம் செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்கலாம்.
நாம் உழைத்து ஈட்டும் செல்வத்தை வீட்டில் பாதுகாப்பாக வைக்கும் முக்கிய இடமாகப் பீரோ உள்ளது. அந்த பீரோவை நாம் சரியான திசையில் வைத்துள்ளோமா என்பதைக் கவனியுங்கள்? முதலில் பீரோவை ஆகம விதி என்கிற வாஸ்து சாத்திரத்தின் முறையில் எந்த திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தவிர்த்து நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
திசைகள் என்றால் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என மொத்தம் எட்டு திசைகள் உள்ளன என்பதை சிறு குழந்தை கூட சொல்லும். அவை ஒவ்வொன்றும் 45 டிகிரிக்கள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
விதியின்படி குபேர மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும். அந்த திசையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். சிலருக்கு எந்த திசையை நோக்கித் திறக்க வேண்டும் என்று ஐய்யம் வரும். தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைத்தால் சிறப்பு.
வாய்ப்பு இல்லை என்றால்?
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தென்மேற்கு திசையில் பீரோவை வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால், அதற்கு பதில் வாயு மூலை அதாவது வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கியும் பீரோவை வைக்கலாம். இதனால் நம் வீட்டில் வீண் செலவுகள் குறைந்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
முற்றாக தவிருங்கள்
குறிப்பாக தென்மேற்கு மூலையில் கழிவரையோ அல்லது அடுப்பறையோ இருந்தால் அத்தகைய வீடுகளில் குடியிறுப்பதை முற்றாக தவிருங்கள்.