ADVERTISEMENT

படிக்கட்டு அமைப்பதற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா

படிக்கட்டு அமைப்பதற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா படிக்கட்டு அமைப்பதற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா

வீடு கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பொழுது இடத்தின் மதிப்பு பின்னாளில் உயருமா என்பதைக் குறித்து சிந்திக்கும் பலர் அந்த வீட்டில் வாழ்வதால் பொருளாதார நிலையும் தன்மதிப்பு நிலையும் உயருமா என்று சிந்திப்பது பெரும்பாலும் இல்லை!

சிலர் இது தொடர்பில் ஆர்வம் காட்டி வாஸ்து அறிஞர்களிடம் கேட்டு தமது வீட்டை கட்டமைக்கும் பொழுது மூல வாயில், படுக்கையறை, அடுப்படி அமைத்தல், கழிவறைகள் அமைத்தல்,சாளரங்கள் அமைத்தல், தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் மற்றும் பிற வீட்டு அமைப்புகள் குறித்து கலந்து அறிந்து கொண்டு வீட்டை கட்டுகின்றனர்.

வீட்டின் உள்ளே படிக்கட்டு அமைப்பது என்றால், அது எங்கே அமைய வேண்டும் என்பதை வாஸ்து அறிஞர் எடுத்துறைத்திருப்பார்.

சிக்கல்கள் எல்லாம் வீட்டிற்கு வெளியே படிக்கட்டு கட்டும் போதுதான் ஏற்படுகிறது.

படிக்கட்டு அமைக்கும் பொழுது அது வட்ட வடிவிலோ, நேர் சென்று திரும்பும் வகையில் எப்படி வேண்டுமானாலும் எந்த வடிவில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.

அதேபோல படிக்கட்டை இரும்பு, மரம், காங்க்ரீட் என எந்த பொருள் கொண்டு வேண்டுமானாலும் கட்டலாம்.

வாஸ்து என்பது படிக்கட்டு எந்த இடத்தில் துவங்கி எங்கு முடிவுற வேண்டும் என்பதில்தான் இருக்கிறது.

படிக்கட்டை கட்டும்பொழுது வீட்டின் தென் மூலை அல்லது மேற்கு மூலையிலிருந்து மேலெழும்ப கட்டுவது சிறப்பு.

தெற்குப் பகுதியில் இருந்து மேலெழும்புகிறது என்றால் கிழக்கு நோக்கி அமைந்தால் சிறப்பு.

அல்லது தெற்கில் இருந்து மேலெழும்பி மேற்கு நோக்கி அமைந்தாலும் சிறப்பு.

ஆனால் வடகிழக்கு மூலையில் அமையப்பெற்ற படிக்கட்டு பொருளாதார இழப்பையும் தன்மான இழப்பையும் ஏற்படுத்தும்.

படிகட்டிற்கு எதற்காக வாஸ்து

படிக்கட்டு என்பது கீழிருந்து மேல் செல்வதற்கான ஒரு கட்டமைப்பு.  வீட்டில் உள்ள பெரியோர்களும் குழந்தைகளும் இளைஞர்களும் தம் வாழ்வில் மேலெழுந்து செல்ல வீட்டின் படிக்கட்டு அமைப்பு அடிப்படையாகிறது.

படிகட்டிற்கான திசையை கவனிக்கும் பொழுது படிகளின் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

என்றுமே படிக்கட்டு ஒற்றைப்படையில் முடிவதாக இருக்க வேண்டும்.  5, 11, 17 ஆகிய எண்கள் சிறப்புடையவை.

படிக்கட்டின் நிறம் என்றும் கருப்பாக இருக்க வேண்டாம்.  சிவப்பு நிறமும் ஏற்புடையது அல்ல.

படிக்கட்டு என்றும் சிதையாத நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டின் உள் படிக்கட்டு அமைப்பதாக இருப்பின் வீட்டின் நட்ட நடு நடுவில் அது அமையாமல் இருக்கட்டும்.

படி கட்டானது அடுக்களை, சாமி அறை ஆகியவற்றின் வாயில்களில் இருந்து துவங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

படிக்கட்டு கீழே கழிவறை அல்லது சமயல் அறை அமைக்காதீர்கள்.  கீழுள்ள பகுதியை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதை ஒரு பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தலாம்.

வீட்டின் மாடிப் பகுதியில் இருந்து கீழே இறங்கும் படிகட்டானது, தரை தளத்திற்கும் கீழே ஒரு தளம் இருக்குமேயானால், அந்த தளத்திற்கு தொடர்ச்சியாக இந்தப் படிக்கட்டு அமைப்பு இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

படிக்கட்டு சுழன்று சுழன்று மேலே செல்லாமல் இருக்கட்டும்.  அப்படி அமைத்தால் நோய்நொடிகள் வந்து சேரும்.



மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading