ADVERTISEMENT

நாடி ஜோதிடம் - ஒரு அடிப்படை பார்வை

நாடி ஜோதிடம் - ஒரு அடிப்படை பார்வை நாடி ஜோதிடம் - ஒரு அடிப்படை பார்வை

நாடி ஜோதிடம் என்பது பல வகைப்படுகிறது.  தமிழ்நாட்டில் பொதுவாக நாடி ஜோதிடம் என்றாலே சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்கிற ஊரில், கைரேகை அடையாளங்களைக் கொண்டு, அதற்கு ஒப்ப பழமையான ஓலை குறிப்புகள் ஆராய்ந்து பார்க்கப்படும் ஜோதிட முறையாகும்.

ஒருசில ஜோதிடர்களை பொருத்தவரை நாடி ஜோதிடம் என்றால், ஜாதகரின் ராசிக்கட்டத்தில் சேர்க்கை ஏற்பட்டிருக்கும் கோள்கள் குறித்து ஆராய்ந்து ஆருட குறிப்பு சொல்வது.

இந்த இரண்டாம் வகையான நாடி ஜோதிடம், ஜோதிட அடிப்படை கொண்ட யாவரும் பின்பற்றக் கூடியதாக அமைகிறது.  இந்த வகை நாடி ஜோதிடத்தை பொருத்தவரை, லக்னம் மற்றும் இருப்பிடத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல், ராசி வீடுகளில் சேர்ந்து நிலைகொண்டிருக்கும் கோள்கள் குறித்து ஆராய்ந்து சொல்வது.

எடுத்துக்காட்டாக,

ஒரு வீட்டில் 12 அறைகள் இருப்பின், முதலாவது அறையை தமதாகவும், மூன்றாவது அறையை உடன் பிறந்தவர்களுக்கும், நான்காவது அறையை அம்மாவுக்கும், ஐந்தாவது அறையை குழந்தைகளுக்கும், ஏழாவது அறையை மனைவிக்கும், ஒன்பதாவது அறையை தந்தைக்கும் என ஒதுக்கி இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.

அப்படி ஒதுக்கி இருந்தாலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறைகளை மாற்றி நபர்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கத்தில் உள்ள ஒன்றே.  வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் இந்த அறைகளில் சிலவற்றை அவர்களும் பயன்படுத்துவது வழக்கம்.

அதனால் யார் எந்த அறையை கொண்டுள்ளனர் என்பதற்கு முன்னுரிமை கொடுக்காமல், யார் யாருடன் சேர்ந்து அந்த அறையை பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்து பலன் வெளிப்படுகிறது.

கோள்களின் சேர்க்கை குறித்து ஆராய்ந்து அதற்கு ஏற்ப பலன் சொல்வதால், லக்கண அடிப்படையில் ஆருடம் கூறுவதைக் காட்டிலும் துல்லியத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்கின்றனர் இந்த வகை நாடி ஜோதிடத்தை பின்பற்றும் ஜோதிடர்கள். கோள்களின் சேர்க்கையை பொருத்து யோகங்கள் அமைகின்றன என்பது ஆருடம் நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு.  

தமிழ்நாட்டின் இலக்கிய அடிப்படையிலான ஆன்மீகத்திலும், யூத (ஆபிரகாம்) அடிப்படை ஆன்மீகத்திலும் சொல்லப்படுவது, மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்கள், ஒருவரின் சிந்தனைகளை பொறுத்து அமைகிறது என்று.

கணக்கு மட்டுமே நல்லதே நடக்க வேண்டும் என்றுதான் பொதுவாக எல்லா மனிதர்களும் சிந்திக்கின்றனர்.  இருப்பினும் தீயபலன்கள் அவர்களுக்கு ஏற்படுவது ஏன்?  இதற்கான விடை, முற்பிறப்பில் செய்த செயல்களுக்கான வினையின் தாக்கம் இப்பிறப்பில், ஜாதக அமைப்பில் உள்ள கோள்களின் இருப்பிடமாக அமைகிறது. இந்த கோள்கள், இப்பிறப்பில் மனிதன் சிந்திக்கும் நல்லவை தீயவைகளை முற்பிறப்பின் வினைகளுக்கு ஒப்ப கட்டுப்படுத்தி வழங்குகிறது.

இப்பிறப்பில் நல்ல சிந்தனையும் (செயல்களும்), முற்பிறப்பின் பயனாக பெறப்படும் நல்ல ஜாதக அமைப்பும் இருந்தால், சாதகர் மிகச்சிறந்த வாழ்வு நிலையை பெறுவார்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading