சிம்மம் இராசிக்கான
2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்
Saturn - சனி transiting house: 8வேறுபட்ட தடங்கல்கள்.
Saturn - சனி aspects house 2.
பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை சீரடையும். கடந்த கால நஷ்டங்கள் வேறு ரூபத்தில் வரவாக வரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலம் சிறு லாபத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
மற்றையோருக்குத் தக்க அறிவுரைகளையும் வழங்குவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புனித யாத்திரை சென்று வரும் பாக்கியமும் சிலருக்கு அமையும். போதும் என்ற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். செய்தொழிலில் அதிகாரம் கூடப் பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். பழைய கடன்களையும் அடைப்பீர்கள். பகைவர்களால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. புதிய வழக்குளும் ஏற்படாது. ஆலயத் திருப்பணிகளுக்கும் தர்மகாரியங்களுக்கும் செலவிடுவீர்கள். வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் சிலருக்கு உண்டாகலாம். அதனால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டாகிலும் காப்பாற்றி விடும் காலகட்டமாக இது அமைகிறது.
செய்தொழிலில் எதிர்பார்த்த உயர்வைக் காண்பீர்கள். அரசாங்க வழியில் உதவிகளைப் பெறுவீர்கள். வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சொந்த சம்பாத்தியம் உயரும். போட்டியாளர்களின் எதிர்ப்புகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர் செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்புகளால் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். சிறிது கடன் வாங்கியாவது செய்தொழிலை மேம்படுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். மனம் சிறிது அலைபாயும். மேலும் அவசியமேற்பட்டாலன்றி பிரயாணங்களைத் தவிர்த்து விடவும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க எடுக்கும் முயற்சியில் தடங்கல்களைக் காண்பார்கள். சக ஊழியர்களும் மறைமுக எதிர்ப்பைக் காட்டுவார்கள். மேலதிகாரிகள் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள், அதனால் அவர்களின் ஆதரவு தொடரும்.
மேலும் வேலைப்பளு கூடுமாகையால் வேலைகளைப் பட்டியலிட்டுச் செய்து முடிக்கவும். பணவரவுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல பலனளிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவினால் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு இது சாதகமான காலகட்டமாக அமைகிறது. அமோக விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் அதனாலும் பயன் பெறுவார்கள்.
புதிய குத்தகைகளை சற்று தள்ளிப் போடவும்.
அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். இதனால் கட்சியிலும் சிறப்பான பதவிகளைப் பெறுவீர்கள்.
தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தையும் நல்லபடி முடிப்பீர்கள். கலைத்துறையினர் கடமைகளைச் சரிவர ஆற்றி நற்பெயர் எடுப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கத் தாமதமாகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறு முட்டுக்கட்டைகள் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமென்றாலும் சிக்கனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.
பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். தெய்வபலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தேக ஆரோக்கியமும் சீராகவே தொடரும். உடன்பிறந்தோர் வகையில் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
மாணவமணிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுப்பார்கள். கவனம் சிதறாமல் படிப்பில் நாட்டம் ஏற்படும். இறைபக்தியை வளர்த்துக்கொண்டு ஆத்ம சக்தியை மேம்படுத்திக் கொள்ளவும்.Saturn - சனி in malefic position.
சிம்மம் இராசிக்கான
இன்றைய நாள் பலன்
2025 ஆண்டு பலன்
2024 - 25 குரு பெயர்ச்சி
சனி பெயர்ச்சி பலன்
ஜாதகம் கணிக்க
திருமண பொருத்தம்
நவம்பர் எப்படி இருக்கும்?
பெயர் எண் சோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்
சோதிடம் கற்போம்
