2021
ஆண்டு கன்னி இராசி பலன்

கன்னி இராசி

நிலவு தற்பொழுது விசாகம் நட்சத்திரத்தில் உள்ளார்.

இந்த நட்சத்திரம் வியாழன்(குரு) க்கு உரிமையானதாகும்

ராசியானது வியாழன்(குரு), பார்வை பெறுகிறது.

பத்தாமிடத்தில் சோதனைகளை கொடுத்த வியாழன் (குரு) பகவான் நற்பலன்களை வழங்க பதினொன்றில் சஞ்சரிக்கிறார். செல்வ சேர்க்கை, ஊரில் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, அரசாங்க பெருமை, வண்டி வாங்கும் வாய்ப்பு, பல வகைகளில் பண வரவு,

நோய் குணமாதல், இல்லற வாழ்வில் முழுமை, வெளிநாட்டு பயண வாய்ப்பு அதனால் வருவாய் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். இவர் ராசிக்கு மூன்றாமிடமான துனிச்சல் இடத்தை பார்ப்பதால் எதையும் துணிவுடன் செய்வீர்கள், ஐந்தமிடத்தை பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வியில் வெற்றி பெறுவார். ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்/மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவு மேம்படும்.

தற்பொழுது ராசிக்கு 5 ல் இருக்கும் காரி என்கிற சனியால் சந்ததிக்கு துன்பம், நோய், புத்தி சரியாக செயல்படாமல் தகுந்த முடிவு எடுக்க முடியாத நிலை, விபத்து முதலியவற்றால் உடல் ஊணம், பணமுடை வறுமை, உறவினர் நண்பர்களுடன் பகைமை, குழந்தைகளை விட்டு பிரிதல் போன்ற தீய்மை விளைவிக்கும் பலன்களை எதிர்பார்க்கலாம்.

ஏழாமிடத்தை பார்க்கும் சனியால் கணவன் மனைவி சண்டை, இரண்டாமிடத்தை பார்க்கும் சனியால் குடும்பத்தில் கலகம் கண் நோய் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் தீய பலன்கள் ஏற்படலாம்.

கன்னி இராசிக்கான

முகப்பு