துலாம் இராசிக்கான
2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்

துலாம் இராசி

Saturn - சனி transiting house: 4

குடியில் துன்பம், குடும்பத்தில் முறன்பாடுகள் தோன்றும்

அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் பேச்சில் உறுதி இருக்கும். முகத்தில் பொலிவும் வசீகரமும் கூடும். பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். பொருளாதாரமும் செழிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிலருக்கு விருதுபெறும் யோகமும் உண்டாகும். வழக்கு வியாஜ்யங்கள் சாதகமாக தீர்ப்பாகும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். போட்டியாளர்களை கவனமாகக் கையாளவும். நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள். இருந்தாலும் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் கருத்தாகப் பணியாற்றுவீர்கள்.

சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் குறையாது. கடினமாக உழைத்து கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகும். சிறிய தூரப்பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.

முரண்பாடாக நடந்துகொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். மனதில் தெம்பு கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் குறையும்.

புதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்த வருமானம் உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அவர்களின் வேலைகளிலும் நீங்கள் பங்கு கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். தானிய விற்பனை நல்ல முறையில் நடக்கும். இதனால் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். மேலும் உங்கள் கடமைகளில் சிரத்தையாக இருப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பீர்கள். எதிர்கட்சியினரும் உங்களுக்குச் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். தொலைதூரத்திலிருந்து சாதகமான செய்தி ஒன்று வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். நண்பர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். உங்கள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சிறப்பு விருந்தினர் என்கிற அந்தஸ்து கிடைத்து உங்கள் கௌரவம் உயரும்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் பொறுப்புடனும் நிதானத்துடனும் இருப்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும். கணவருடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மாணவமணிகளின் புத்தி கூர்மை பளிச்சிடும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். யோகா பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள்.

Saturn - சனி aspects house 10.

Saturn - சனி in malefic position.

Saturn - சனி is ruling and will improve the good results


துலாம் இராசிக்கான

முகப்பு