விருச்சிகம் இராசிக்கான
2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்

விருச்சிகம் இராசி

Saturn - சனி transiting house: 3

வாழ்கை தரத்தில் உயர்வு.

ஏழரை சனி விலகிவிட்டது அன்பர்களே!!! ஏழரை ஆண்டுகள் துன்பப்பட்ட நீங்கள் இந்த இரண்டரை ஆண்டுகள் காரியின் நற் பலனால் மகிழ்சி அடைவீர்கள்.

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். கடினமாக உழைத்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள். ஆன்மிகத்தில் தெய்வ வழிபாட்டிலும் நாட்டம் செலுத்துவீர்கள்.

உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையுடன் உலா வருவீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளும் தோற்றுவிடும். அரசு அதிகாரிகளிடமும் உங்களின் தொடர்பு நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மேலும் குடும்பத்தில் மழலைப் பாக்கியங்கள் உண்டாகும்.

உங்களிடமிருந்து விலகிய முன்னாள் நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதிக ஆசைப்பட்டு ஸ்பெகுலேஷன் துறைகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். தேவைகள் நல்லபடியாக பூர்த்தியாகும்.

நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்து விடுவீர்கள். உங்கள் கையில் எக்கச்சக்கமாகப் பணம் புரளும். செய்தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். புதிய ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவீர்கள்.

உடன்பிறந்தோரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இறங்கும் முன் ஆராய்ந்து ஈடுபடுவீர்கள். முன்வைத்த காலை பின் வைக்கமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். யோகா பிராணாயாமம் கற்பீர்கள். உங்களின் சாந்தகுணம் உங்களைப் பெருமைப் படுத்தும். அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையை காண்பீர்கள்.

தலைநிமிர்ந்து நடந்து தன்னம்பிக்கையுடன் உலாவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. வியாபாரிகள் புதிய ரகசியங்களைக் கற்றுக்கொள்வார்கள். புதிதாக வேறு தொழில் தொடங்குவீர்கள். கூட்டாளிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். வீண் ஆசாபாசங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை பொருள்களை ரொக்கத்திற்கே விற்பீர்கள்.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவார்கள். வங்கியில் கடன் வாங்கி புதிய பயிர்களையும் பயிரிடுவீர்கள். எதிர்பார்த்த வருமானத்தையும் காண்பீர்கள்.

பயிர்களில் பூச்சிகள் பாதிப்பு ஏற்படாததால் இந்த வகையில் எந்த செயலும் ஏற்படாது காக்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளும் உங்களிடம் அடங்கி நடப்பார்கள்,

மக்களின் ஆதரவு உங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் முகத்தில் மலர்ச்சியும் பொலிவும் காணப்படும். சில குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்வீர்கள். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும்.

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பொறுப்புகளைச் சரியான முறையில் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்கு இடையே நிலவி வந்த பிணக்குகளும் நீங்கும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக் கொள்வீர்கள்.

மாணவமணிகள் கல்வி உயர்வுக்குக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் ஏற்படும். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும். .

Saturn - சனி aspects house 9.

Saturn - சனி is ruling and will improve the good results


விருச்சிகம் இராசிக்கான

முகப்பு