2026
ஆண்டு ரிஷபம் இராசி பலன்
நிலவு தற்பொழுது அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளார்.
இந்த நட்சத்திரம் காரி(சனி) க்கு உரிமையானதாகும்ராசியானது நிலவு(சந்திரன்), காரி(சனி), பார்வை பெறுகிறது.
ஒன்பதாமிடத்தில் 1 வருடமாக நற்பலன் கொடுத்த வியாழன் (குரு) பகவான் ராசிக்கு 10 ஆம் இடத்தில் தங்குகிறார். இதில் சில சோதனைகளை தருவார். எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்தல், பதவி பறிபோதல், உடல் நலம் கெடுதல்,
கண் தொடபான நோய்கள், மன உடல் சோர்வு, வெளியூருக்கு இட மாற்றம், சந்ததிக்கு அரிஷ்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படலாம். மேலும் வியாழன் பகவான் இரண்டமிடமான வருவாய் இடத்தையும், நான்காமிடமான மாத்ரு இடத்தையும், ஆறமிடமான ரோக இடத்தையும் பார்க்கிறார். இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, பண வரவு, பழைய கடன்கள் வசூலாதல், அம்மாவின் உடல் நலம் மேம்படுதல், வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு, கல்வியில் வெற்றி போன்ற பலன்களை வழங்குவார்.தற்பொழுது ராசிக்கு பதினொன்றில் காரி என்கிற சனி வருவதால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
நோய்கள் நீங்கி உடல் பலமும் பொலிவும் பெறலாம். அதிகாரி, அமைச்சர் பதவி கூட கிடைக்கலாம், கெளரவமும் வாழ்கை தரமும் ஏற்படும், கட்டளை இடும் பெரும் பதவிகள் கிடைக்கும், ஊருக்குள் பெரிய மனிதராக வலம் வருவீர்கள், காம இச்சை அதிகரிக்கும், அது நிறைவேறும். மற்றவர் பணம் வந்து சேரும், பல நண்பர்கள் கிடைப்பார்கள், உங்களுக்கு உதவுவார்கள், வீட்டுக்கு தேவையான அனைத்து வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டில் அரசர் போன்ற வாழ்வை அனுபவிப்பீர்கள்.
ரிஷப இராசிக்கான
இன்றைய நாள் பலன்
2026 ஆண்டு பலன்
2025 - 26 குரு பெயர்ச்சி
சனி பெயர்ச்சி பலன்
ஜாதகம் கணிக்க
திருமண பொருத்தம்
சனவரி எப்படி இருக்கும்?
பெயர் எண் சோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்
சோதிடம் கற்போம்
