ரிஷபம் இராசிக்கான
2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்

ரிஷபம் இராசி

Saturn - சனி transiting house: 11

பண மழை கொட்டுது. வசதி வாய்ப்புகள் பெருகுது.

லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.

நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள்.



மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

மாணவ- மாணவிகளே! பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள்.

கலைத்துறையினறே! கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

Saturn - சனி aspects house 5.


ரிஷப இராசிக்கான

முகப்பு