மகரம் இராசிக்கான
2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்

மகரம் இராசி

Saturn - சனி transiting house: 1

உடல் நலம் பாதிப்பு

ஏழரை சனியின் இரண்டாம் நிலை இந்த இரண்டான்டுகள். வெற்றிகரமாக ஏழரை சனியின் முதல் இரண்டாடுகளை தாக்குப் பிடித்து அடுத்த இரண்டரை ஆண்டுகளை அனுபவிக்க வந்து விட்டீர்கள். இதுவே வெற்றி தான். மன துனிச்சல் மிக்கவர் நீங்கள்.

ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

இந்த நேரத்தில்தான் ஒரு இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் மரணத்தின் மூலமாக மனப்பதட்டத்தைத் தருவார்.

கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து,

அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார். ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன.

ஒளிவு மறைவு இன்றி பேசும் நீங்கள் அடுத்தவர்களின் எண்ணங்களை அறிந்து சமயோஜிதமாக பேசத் தொடங்குவீர்கள். செய்தொழிலிலும் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உடன்பிறந்தோரும் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அன்னை வழியில் சில அனுகூலங்களும் உண்டாகும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் வெளிப்படையாகப் பேச வேண்டாம்.

அலைபாயும் மனதையும் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையைக் குறைக்கும். மற்றபடி முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். மற்றபடி பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உங்கள் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும். மனதில் நெருடிக்கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வர முடியாத அளவுக்கு மறைந்து விடும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், பிராணயாமம் போன்றவற்றைச் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் அவநம்பிக்கை மறைந்து தன்னம்பிக்கை உயரத் தொடங்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூர்வீகச்சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறைந்து நன்மைகள் வரத் தொடங்கும். திருமண வயதில் உள்ள யுவ யுவதிகளுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு

மழலைச் செல்வம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்ட தேவதையின் அருட்பார்வை உங்களுக்குக் கிடைக்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது அதிகரித்தாலும் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அதேநேரத்தில் பணியிட மாற்றம் உண்டாகும். உங்களின் வேலைகளை சக ஊழியர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும்.

அதேநேரம் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். கூட்டாளிகளிடம் முக்கிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் தகுந்த நேரத்தில் விதைத்து விளைச்சலைக் கூட்டிக்கொள்ள முற்படுவார்கள். இதனால் விற்பனையும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். அதேநேரம் கால்நடைகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். விவசாயத் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் வெற்றி காண்பார்கள். நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உடற்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தகுதிக்கேற்ற பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழ் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். அதேசமயம் திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடங்கலுடன்தான் நிறைவேறும். புதிய வாய்ப்புகளைப் பெற சில தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். அதோடு பயணங்களிலும் சிறிது செலவுகள் ஏற்படும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். புனிதத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள். சிலருக்கு திடீரென்று திருமண வாய்ப்புகள் கை கூடும்.

மாணவமணிகள் படிப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். மற்றபடி பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். அதேநேரம் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

Saturn - சனி aspects house 7.

Saturn - சனி in malefic position.

Saturn - சனி is ruling and will improve the good results


மகரம் இராசிக்கான

முகப்பு