மிதுனம் இராசிக்கான
2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்

மிதுனம் இராசி

Saturn - சனி transiting house: 7

பயணத்தில் இடறல்கள் மற்றும் பெண்டாட்டியின் உடல் நிலையில் பாதிப்பு

குடும்பப் பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாக நடத்துவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரக்காண்பீர்கள். உங்களின் குரல் கணீரென்று ஒலிக்கும். எதிர்பாராமல் காரியங்கள் மடமடவென்று நடந்தேறும். திடீர் சொத்து சேர்க்கையும் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும். புதிய பொறுப்புகளும் தேடிவரும். இருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை வராது. குறுக்கு வழிகளிலும் பணம் கைவந்து சேரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். எதிரிகள் தலைதூக்கினாலும் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவீர்கள். உடல்நலமும் சிறப்பாக இருக்கும்.

அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுவீர்கள். அதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். அரசு விவகாரங்களில் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்கவும். சிலர் வீடு மாற்றம் செய்வார்கள். மனதிற்குப்பிடித்த சந்தர்ப்பம் கிடைக்கும்வரை பொறுமை காக்கவும். உங்களுக்குக் கீழ் வேலைசெய்பவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகச் சிறிது செலவு செய்து உதவுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் இந்த காலகட்டத்தில் நிறைவேற்றுவீர்கள்.

நீங்கள் சற்று கூடுதலாக முயற்சித்து இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உங்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களை சமயம் பார்த்து ஒதுக்கி விடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். அதேநேரம் அனாவசியச் செலவு செய்யாமல் சேமிப்புகளில் கவனமாக இருக்கவும்.பிள்ளைகளும் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மன உளைச்சல்களிலிருந்தும் விடுபடுவீர்கள். திடீரென்று ஒரு புதிய நட்பு கிடைத்து அவரால் ஒரு நன்மை உண்டாகும். புதிய வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மந்தமாக நடந்துவந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். தர்மகாரியங்களைச் செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.

உங்களின் தெய்வபலம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் அன்பு பாசத்துடன் பழகுவார்கள். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து நற்பெயரெடுப்பீர்கள். மேலும் வேலைகளைப் புரிந்து கொண்டு அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடிவரும்.வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைப் பார்ப்பார்கள். கூட்டாளிகளையும் அரவணைத்துச் செல்வீர்கள். பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் வசூலாகும். மிடுக்காக காரியமாற்றுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே விலகிவிடும். உபரி வருமானத்தைப் பெருக்க காய்கனிகளையும் பயிரிடுவீர்கள். கால்நடைகளையும் நல்ல முறையில் பராமரிப்பீர்கள். புதிய விவசாய உபகரணங்களையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். மாற்றுக்கட்சியினருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். கட்சிப்பணிகளில் தொய்வில்லாமல் செயலாற்றுவீர்கள். தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும்.உங்களின் திறமைகளை முழுமையாகச் செயல்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ள கவனத்துடனும் திறமையுடனும் பணியாற்ற வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துகொள்வார்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அனைவரையும் ஆலோசித்து எடுக்கவும். ஆடம்பரச்செலவுகள் எதையும் செய்ய வேண்டாம். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். பேசும்போது உஷ்ணமான வார்த்தைகளைப் பேச வேண்டாம்.

மாணவமணிகள் நன்றாக படித்து சிறப்பான மதிப்பெண்களை அள்ளுவார்கள். வெளியூர் சென்று கல்வி கற்க சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

Saturn - சனி aspects house 1.

Saturn - சனி in malefic position.


மிதுனம் இராசிக்கான

முகப்பு