பொதுவாக காரி கோள் என்கிற சனி ராசிக்கு 8 ஆம் இடத்தில் வருவதை தான் அஷ்டம சனி என்பார்கள்.
அஷ்ட என்ற வட மொழி சொல்லிற்கு தமிழில் 8 என்று பொருள்.
ராசிக்கு 8 ஆம் இடத்தில் சனி வருவது, குறிப்பாக மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் அதிக துன்பங்களை தரும்.
மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ராசி அதிபதியாகி சனி 8 இல் போவதால் அதனால் சில தொல்லைகள் வரும்.
பொதுவாக எல்லா ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விதமான தொல்லைகள் வரும் அல்லது வர வாய்ப்பு உண்டு என்றால்,
1. முதலில் 8 ஆம் இடத்து சனி தொழில் இடத்தை பார்ப்பதால் தொழில் ரீதியாக கெட்ட பெயர், தேவை இல்லாத தொழில் மாற்றம், தொழில் ரீதியாக அலைச்சல், வேலை செய்தும் கூட உயர் அலுவலர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை.
2. 8 ஆம் இடத்துக்கு சனி வந்த பயனாய் திடீர் மருத்துவ செலவுகள். 2 ஆம் இடமான குடும்பம் + சொல் இடங்களை சனி பார்ப்பதால் பேச்சினால் அதிக எதிரிகளை சந்திக்கும் நிலை. குடும்பத்தில் கூட வெளி நபர்களால் குழப்பம்.
3. 4 ஆம் இடமான மகிழ்வு இடத்தை இந்த எட்டாமிடத்தில் வரும் சனி பார்ப்பதால் நேரத்திற்கு தூங்க, சாப்பிட முடியாத நிலை. தவிர, இந்த எட்டம் இட சனி பயனிக்கும் நேரத்தில் வீடு, சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
4. வெளிநாடு செல்பவர்கள் தேவை இல்லாமல் பணம் கட்டி ஏமாறும் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த எட்டம் இடத்து சனியால் பலருக்கு ஏற்படும்.
5. அதைவிட குடும்பத்தில் இருக்கும் வயதான நபர்களை இந்த எட்டாம் இட சனி பார்க்கும் நேரத்தில் பாதுகாப்பாக கவணித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. சிலருக்கு எட்டாம் சனி நேரத்தில் திருமணம் நடக்கும், வேண்டவே வேண்டாம்... கூடவே கூடாது என்றாலும் வம்படியாக திருமணம் நடக்கும். நல்லதல்ல என்றாலும் வேறு வழியும் இருக்காது.