ஐந்து விதமான இடங்கள் என்பது கேந்திரம், திரிகோணம், பணபரம், அபோக்லிய, உபஜெயம், என ஐந்து விதமாக ஆரூடத்தில் ராசி வீடுகள் குழுக்களாக குறிக்கப்படுகிறது. இவ்விதமாக சொல்லப்படும் ஒவ்வொரு இடத்தையும் கண்டறிய, பிறந்த லக்னத்திலிருந்து ஒவ்வொரு வீடாக எண்ணி வரவேண்டும்.
இந்த ஐந்து விதமான வீடுகளில் கேந்திரம் மற்றும் திரிகோண ஜோதிடத்தில் அடிப்படையாக கணிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
1. கேந்திர வீடுகள்: லக்னத்திலிருந்து 1 4 7 10 ஆகிய இந்த நான்கு வீடுகளும் கேந்திர வீடுகள் என அழைக்கப்படுகிறது அதாவது லக்னம் இருக்கும் இடம் லக்னம் ராசி வீடு என்றும், மற்ற மூன்று வீடுகளான 4 7 10 ஆகியவை கேந்திர வீடுகள் என அழைக்கப்படுகிறது.
கேந்திர வீடுகளைப் பொறுத்தவரை, 1ம் வீட்டைவிட 4ம் வீடும், 4ம் வீட்டை விட 7ம் வீடும், 7ம் வீட்டை விட 10ஆம் வீடும் ஆருடம் கணிப்பதற்கு சிறந்த அடிப்படைகளாக விளங்குகிறது.
2. திரிகோண வீடுகள்: லக்னத்திலிருந்து 1 5 9 ஆகிய மூன்று வீடுகளும் திரிகோண வீடுகள் என அழைக்கப்படும். 1ஆம் வீடு என்பது, லக்னம் இருக்கும் வீடு.
திரிகோண வீடுகளில் 1ம் வீட்டைவிட 5ம் வீடும், 5ம் வீட்டை விட 9ம் வீடும் ஆருடன் கணிப்பதற்கு சிறப்பானதாக விளங்குகிறது.
கேந்திரத்தை ஆட்சி செய்யும் கோளும், திரிகோண வீட்டை ஆட்சி செய்யும் போதும் ஒன்று கூடினால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் அந்த ஜாதகருக்கு நல்லூழ் ஏற்படும். இத்தகைய அமைப்பு அரிதிலும் அரிது என்கின்றன ஆருட நூல்கள்.
3. பணபர வீடுகள்: லக்னத்திற்கு 2 5 8 11 ஆகிய நான்கு வீடுகளை பணபர வீடுகள் என்று ஆருட நூல்கள் விளக்குகின்றன. இந்த வீடுகளின் அமைப்பை கொண்டு ஜாதகரின் ஆயுள் மற்றும் செல்வச் செழிப்பு குறித்து கணிக்கலாம்.
4. அபோக்லிய வீடுகள்: லக்னத்திற்கு 3 6 9 12 ஆகிய நான்கு வீடுகளை அபோக்லிய வீடுகள் என்று அழைக்கின்றனர். இந்த வீடுகளை கொண்டு ஜாதகரின் இளைய உடன் பிறப்பு, நோய்நொடி, முன்னோர் செய்த நற்பயன்களால் ஏற்படும் வினைகள், பண செலவினங்கள் போன்றவற்றை கணிக்கலாம்.
5. உபஜெய வீடுகள்: லக்னத்திற்கு 3 6 10 11ஆம் வீடுகளை உபய வீடுகள் என்று அழைக்கிறார்கள். இந்த வீடுகளை கொண்டு ஜாதகரின் வேலைவாய்ப்பு மற்றும் வகிக்கும் பதவி ஆகியவை குறித்து கணிக்கலாம். செவ்வாய் இந்த வீடுகளில் ஒன்றில் இடம் பெற்றது வியாழனால் பார்க்கப்பட்டால் ஜாதகர் அரசு பணியில் அமர்வார்.