முதல் லக்ன வீட்டில் இருக்கும் கோள்களை வைத்து பலன்.
ஞாயிறு இருந்தால், நல்லது. அதனால் மகிழ்ச்சி. முன்கோபம், மெல்லிய உடல், நல்ல உயரம், திடமான மனது, பழைய பழக்க வளக்கங்களை கடைபிடிக்கும் தன்மை உண்டாம். கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும்.
நிலவு இருந்தால் நல்ல உடல் நிலை, கடவுள் நம்பிக்கை, அறிவு, ஆற்றல், பழையன மறவாமை முதலிய நல்ல பண்புடள் உண்டு. வளர்பிறை நிலவால் நல்லவை ஏற்படும். தேய்பிறை நிலவால் நற்பலன்கள் கிடைப்பது சற்று குறைவாக இருக்கும்.
செவ்வாய் லக்னத்தில் முதல் வீட்டில் இருந்தால், இராசிக்காரர் சற்று கோபம் கொண்ட மன நிலையில் இருப்பார். உடல் சற்று சூடாக இருக்கும். வெட்டு குத்து போன்ற செயல்கள் செய்ய தோன்றும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
அறிவன் முதல் லக்னத்தில் இருப்பின், ஆயுள் நீண்டு கிடைக்கும். நல்ல செய்தி வரும். அறிவும் ஆற்றலும் பெருகும். கொடை கொடுக்கும் தன்மை ஓங்கி நிற்கும்.
வியாழன் லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. இராசிக்காரர் புகழ்பெற்றவராக வாழ்வார். அறிவு ஆற்றல் மிக்கவராக திகழ்வார்.
வெள்ளி லக்னத்தில் முதலில் இருப்பின் ஆயுள் நீண்டு கிடைக்கும். அழகான கண்கள் கொண்டவர். மனைவி, பிள்ளைகளிடத்தில் அன்புடன் இருப்பார். உயர் பதவிகளை அடைவார்.
காரி லக்னத்தில் இருந்தால் ஆயுள் நீண்டு கிடைக்கும். சோம்பல், தூக்கமின்மை, மன அமைதியற்ற நிலை, அடம்பிடிக்கும் பிள்ளைகள் என வாழ்வு சற்று கசந்து இருக்கும்.
இராகு லக்னத்தில் இருப்பின் கடவுள் நம்பிக்கை சற்று தாழ்ந்து இருக்கும். குழத்தை செல்வம் குறைபாடு இருக்கும். உடல் திறன் இருக்கும்.
கேது லக்னத்தில் இருந்தால் குழந்தை செல்வம் சற்று குறைவே. இராசிக்காரர் நல்ல உடல் - மன நலன்களை பெற்று திகழ்வார்.